For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் இதயத்திற்கு உகந்த உணவுகள் எவை ?

|

இதயம் உணர்ச்சி பூர்வமான உறுப்பு. காதல், இரக்கம், எல்லாவற்றிற்கும் இதயத்தைதான் சுட்டுகிறோம். முக்கிய உறுப்பு என்பது தெரிந்தும் அதனிடம் அலட்சியம் கொண்டால், நம்மை அது வஞ்சித்துவிடும். ஆகவே அதனை நீங்கள் கவனித்தால்தான், மற்றவர்களை நீங்கள் கவனிக்க முடியும்.

Food that protect heart

ஓட்ஸ் :

ஓட்ஸ் தானியங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓட்ஸில் நல்ல கொழுப்பான ( ) மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் அடங்கி உள்ளன. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். எனவே ஓட்ஸ் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, சிறந்த காலை உணவு. இதயத்தின் ஆரோக்கியத்திற்காக,நமது வழக்கமான உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரவுன் பிரட் சாண்ட்விச் வகைகள் :

இப்போது தானியங்களில் செய்யப்படும் மல்டி கிரைய்ன் பிரட்கள் கிடைக்கத் தொடங்கி விட்டன. இவற்றில் வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் உள்ளன. . இது போலவே காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் மற்றும் உடல் நலத்திற்கு தேவையான சத்துகள் அடங்கி உள்ளன.

இவை இரண்டும் கலந்து செய்வதால், இது இதயத்தை பாதுகாக்கும் ஆரோக்கியமான சிறந்த உணவாக அமைகிறது. ப்ரௌன் பிரட் சாண்ட்விச், பொதுவாக தக்காளி, வெள்ளரி, புதினா இலைகள் மற்றும் வெங்காயம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது. வெள்ளை பிரட் சாப்பிடக் கூடாது. இது மைதா மாவினால் செய்யப்படுகிறது. மேலும் உடலுக்கு நல்லதல்ல.

காய்கறி சூப் சூப் :

விரைவில் தயாரிக்கக்கூடிய, வயிற்றை நிரப்பும் ஆரோக்கியமான சத்துள்ள உணவு. பல வகையான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது. கீரை மற்றும் தக்காளி சூப்பில், சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆச்சிடன்ட்கள் அதிக அளவில் அடங்கி உள்ளதால், அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. எளொதில் ஜீரணமாகும். அதிக நார்சத்துக் கொண்டவை இதயத்திற்கு பாதுகாப்பானவை. சூப்பினை மாலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்வது நல்லது.

முளைக்கட்டிய தானியங்கள் :

முளைக்கட்டிய தானியங்களில், கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைப்பதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துகள் அதிக அளவில் அடங்கி உள்ளன.

ஒரு கப் அளவு முளை கட்டிய தானியங்களோடு, வெங்காயம், தக்காளி கலந்து உண்டால் அது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய தானியங்களில் சுவைக்காக எலுமிச்சை, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். முளைகெட்டிய தானியங்கள், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, நீங்கள் இழந்து விடக் கூடாத ஒரு அவசியமான நொறுக்குத் தீனி.

பழங்கள் :

பழங்கள் நிறைய நார்சத்துக்களை கொண்டது. இதயத்தின் வேலைத் திறனை அதிகரிக்கும். இது குறைந்த அளவு கொலஸ்ட்ராலையும், அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்களையும் பெற்றுள்ளது. இதனால் தினமும் ஒரு பழமாவது சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டால், உங்கள் இதயம் உங்கள்வசமே பாதுகாப்பாக இருக்கும்.

English summary

Food that protect heart

Food that protect heart
Story first published: Saturday, July 16, 2016, 14:52 [IST]
Desktop Bottom Promotion