For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏரோபிக் செய்தால் இதயத்தை காப்பாற்றலாம் !!

|

இதய நோய்களின் அடுத்த கட்டமாய் இறுதியில் இதயம் செயலிழந்து போகும். நம் இந்தியாவில்தான் அதிக மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் உணவு, போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால்தான்.

இதய செயலிழப்பிற்கு முக்கிய காரணம் என்னவென்று பல்வேறு ஆய்வுகள் நடந்தன. இறுதியில் இதயத்தில் உருவாகும் முறையற்ற புரோட்டின் உற்பத்தியால்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Aerobic exercises restore protein quality

முறையற்ற புரோட்டின் :

புரோட்டின் நம் உடலிற்கு வடிவம் தருகிறது. செல்கள், திசுக்களின் வளர்ச்சிக்கும் புரொட்டின் தான் அதி முக்கிய தேவை. அவைகள் உடலை இயக்கத் தேவையான பல்வேறு ஹார்மோன்களாக செயல்படுகின்றன. என்சைம்களாகவும் உருவாகின்றன.

இத்தகைய மிக முக்கியமான புரோட்டின், அமினோ அமிலங்களிலிருந்துதான் உருவாகின்றன . அமினோ அமிலங்கள் சங்கிலிபோல இணைந்து ஒரு புரோட்டினை உருவாக்கும். அவ்வாறு இணையும் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டால், முறையற்ற புரொட்டின் உண்டாகும். இந்த புரொட்டினால் உடலுக்கு எந்தவிதமான பயனுமில்லை.

இந்த முறையற்ற புரோட்டின் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். நமது உடலில் செல்கள் புரத தர அமைப்பு என்ற கூட்டணியை உருவாக்கும். அவைதான் புரோட்டின் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும். ஆனால் இதய பாதிப்படைந்தவர்களுக்கு இந்த இந்த அமைப்பு சீலிழந்தி இருக்கும்.

ஏரோபிக் செய்வதால், இந்த புரத தர அமைப்பை திரும்ப பெறலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு இந்த அமைப்பை திரும்ப பெறுவதால் என்ன நன்மையென்றால், முறையற்ற புரொட்டின் உற்பத்தியை இந்த அமைப்பு சீர்படுத்தும். இதனால் இதயம் செயலிழக்காமல் இருக்கும்.

ஏரோபிக் என்றால் வேகமான எந்த பயிற்சியையும் சொல்லலாம், வேகமான நடைப்பயிற்சி, ஓடுதல், நீச்சல் அடித்தல் என செய்வதால், இந்த புரத தர அமைப்பு நன்றாக வேலை செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

English summary

Aerobic exercises restore protein quality

Aerobic exercises restore protein quality
Story first published: Friday, July 15, 2016, 16:15 [IST]
Desktop Bottom Promotion