For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆச்சரியப்பட வைக்கும் சில அறிகுறிகள்!!!

By Maha
|

தமனிகளில் தடிப்பு உள்ளது என்றும், இதய நோயால் பாதிக்கப்படப் போகிறோம் என்பதை 4 அறிகுறிகள் கொண்டு அறியலாம் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார். மேலும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 700,000 மேலான மக்கள் மாரடைப்பாலும், 400,000 மக்கள் இதயச் சுவர்ச்சிரை நோய் என்னும் கரோனரி இதய நோயாலும் பாதிக்கப்படுவதுடன், அவர்களுள் சிலர் இறக்கின்றனர்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த 25 வழிகள்!!!

பொதுவாக ஒவ்வொருவரும் இதய நோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், குணமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

4 Silent Signs You May Have Clogged Arteries

சரி, மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் இருந்தால் மாரடைப்பு ஏற்படும். அப்படி இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் ஒன்று தான் தமனி. அத்தகைய தமனியில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது வேறு இதய நோயால் பாதிக்கப்பட நேர்ந்தாலோ வெளிப்படும் அறிகுறிகளை கேட்டால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். சரி, அது என்ன அறிகுறிகள் என்று பார்ப்போமா!!!

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள்!!!

விறைப்புத்தன்மை பிரச்சனை

சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும். உங்களுக்கு இளம் வயதிலேயே விறைப்புத்தன்மையில் பிரச்சனை இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். எனவே உங்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சனை இருந்தால், சற்றும் யோசிக்காமல் மருத்துவரை சந்தித்து, அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

வழுக்கைத் தலை

ஆய்வு ஒன்றில் 37,000 வழுக்கைத் தலை ஆண்களைக் கொண்டு சோதனை செய்ததில், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதய நோயாலல் பாதிக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மற்றொரு ஆய்வில் வழுக்கைத் தலை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டு செய்யப்பட்ட சோதனையில், இரு பாலினத்தவருக்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதுகளில் மடிப்புகள்

காதுகளில் மடிப்புகள் அல்லது கோடு போன்று வெட்டுக்கள் ஏதேனும் காணப்பட்டால், அது இதய நோயானது எப்போது வேண்டுமானாலும் வரும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மாதிரி காது இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருக்கும். குறிப்பாக இதயத்திற்கு இரத்தம் செல்வது கஷ்டமாக இருக்கும்.

கெண்டைக்கால் வலி

நடக்கும் போது கெண்டைக்காலில் வலி இருந்தாலும், அதுவும் தமனிகளில் லேசாக அடைப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே இந்த மாதிரியான வலியை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். மேலும் தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு, அசைவ உணவுகளை குறைவாக எடுத்து வாருங்கள். இந்த செயலை மேற்கொண்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம்.

English summary

4 Silent Signs You May Have Clogged Arteries

These four surprising clues can point to clogged arteries and underlying heart disease.
Desktop Bottom Promotion