Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மழைக்காலத்தில் ஏன் சைவ உணவு டயட் முறையை பின்பற்ற வேண்டும் தெரியுமா?
Health Tips In Tamil: மழைக்காலத்தில் நம் உடலை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த மழைக்காலத்தில் நம் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். எனவே மழைக்காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் பார்க்கும் போது மழைக்காலத்தில் சைவ உணவுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சைவ உணவுகளான கீரைகள், பிரக்கோலி, காலிஃப்ளவர், பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். சைவ உணவுகள் உங்களுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடியது. ஏன் மழைக்காலத்தில் சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தாவர அடிப்படையிலான உணவுகளை ஏன் எடுத்துக் கொள்வது அவசியம்?
* வெள்ளரிக்காய், முலாம் பழம், கீரைகள் போன்ற சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
* உணவுகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நம் உடலைச் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் தாவர அடிப்படையிலான உணவுகள் நமக்கு உதவுகிறது.
* முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும்.
* முழு தானியங்களான பழுப்பு அரிசி, குயினோவா, திணைகள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பருவ மழைக் காலத்தில் தண்ணீரால் பரவக் கூடிய நோய்கள் அதிகமாக இருக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் நோய்கள் அடிக்கடி அதிகரிப்பதால் ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பெர்ரி போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள், பூண்டு மற்றும் கீரைகள் போன்ற நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் வெதுவெதுப்பான சூப்களை எடுத்துக் கொண்டு வரலாம்.
மழைக்கால சூப் வகைகள்:
முருங்கைக்காய் சூப்
முருங்கைக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. மழைக்காலத்தில் முருங்கை சூப் எடுத்துக் கொள்வதால் உடல் ஆற்றலை அதிகரிக்கலாம். முருங்கைக்காயை வேக வைத்து கூழாக்கி அதன் சாற்றை எடுத்து அதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வேக வைத்து குடித்து வரலாம். இதனுடன் உங்கள் சுவைக்கு ஏற்ற வகையில் மசாலாப் பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்.
வறுத்த ரெட் பெப்பர் சூப்
இது ஒரு கிளாசிக் தக்காளி துளசி சூப் ஆகும். இதனுடன் வறுத்த மிளகாயை சேர்ப்பதால் ஸ்மோக்கி ப்ளேவர் மற்றும் சுவை அதிகரிப்பு ஏற்படும். இதனுடன் பருவ கால காய்கறிகளையும் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
பார்லி மற்றும் பட்டாணி பருப்பு சூப்
பார்லி தானியத்தில் நிறைய நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் வெங்காயம், பூண்டு மற்றும் மூலிகைகள் சேர்த்து சுவையாக சமைத்து வரலாம். சுவையை இன்னும் கூடுதலாக அதிகரிக்க அதனுடன் சிறிது லெமன் சாற்றை சேர்க்கலாம். பருவ கால நோய்களைத் தடுக்க சூப்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
மூலிகை தேநீர் குடித்து வரலாம்
மூலிகை தேநீர் குடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். இஞ்சி, துளசி, லெமன் மற்றும் புதினா டீ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகை தேநீர் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. தொண்டையில் ஏற்படும் சளி, சலதோஷம் மற்றும் தொண்டை புண்களை ஆற்ற உதவுகிறது. சலதோஷம் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
பருவ கால பழங்கள்
மழைக்காலத்தில் பல்வேறு பருவகால பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மாதுளை, செர்ரி, ப்ளம்ஸ், ஆப்பிள் போன்ற பழங்களில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இதில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மழைக்காலத்தில் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கழுவி சாப்பிடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications