Latest Updates
-
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நீங்க வெஜிடேரியனா? அப்ப இந்த உணவுகளை தினமும் மறக்காம சாப்பிடுங்க...
Health Tips In Tamil: மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். புரோட்டீன் ஒரு மக்ரோநியூட்ரியண்ட் மற்றும் இதுவே உடலின் கட்டுமானத் தொகுதி. ஒவ்வொரு கிராம் புரோட்டீனும் சுமார் 4 கிலோ கலோரி ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது.
எனவே தான் புரோட்டீன் மிகவும் அத்தியாவசியமான சத்தாகும். மேலும் புரோட்டீன் உணவுகளானது தசைகளின் வலிமை, வயிறு நிறைந்த திருப்தி மற்றும் எடை இழப்பு போன்றவற்றை ஊக்குவிக்கின்றன.

புரோட்டீன் சத்தானது அசைவ உணவுகளில் அதிகம் காணப்படுவதால், அசைவ உணவை உண்பவர்களுக்கு இச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் வெஜிடேரியனாக இருப்பவர்களுக்கு புரோட்டீன் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அதுவும் தினமும் ஜிம் செல்பவர்கள் கட்டாயம் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் அசைவ உணவுகளை உண்ணாத சைவ உணவாளராக இருந்தால், புரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எந்த சைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதை தெரியவில்லையா? கீழே புரோட்டீன் அதிகம் நிறைந்த சில சைவ உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தினமும் உட்கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் புரோட்டீனைத் தவிர, நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸ் வேளைகளில் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், அதனால் புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் போதுமான ஆற்றலுடன் இருக்கும். ஆனால் பூசணி விதைகளை எப்போதும் பகல் வேளையில் தான் சாப்பிட வேண்டும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
நீங்கள் ஜிம் செல்லும் வெஜிடேரியனாக இருந்தால், தினசரி உணவில் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை தவறாமல் சேர்த்து வாருங்கள். முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன்கள் அதிகமாக உள்ளன. ஆனால் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடும் போது, அவற்றை அளவாகவே சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், அதுவே உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
டோஃபு
வெஜிடேரியனாக இருப்பவர்கள் சோயா பீன்ஸில் இருந்து புரோட்டீனை எளிதில் பெறலாம். அதுவும் சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான பன்னீரான டோஃபுவை உட்கொள்வது மிகவும் நல்லது. 100 கிராம் டோஃபுவில் 8 கிராம் புரோட்டீன்கள் உள்ளன. எனவே ஜிம் செல்லும் சைவ உணவாளர்கள் எளிய முறையில் புரோட்டீனைப் பெற நினைத்தால், டோஃபுவை சாப்பிடலாம்.
பால் பொருட்கள்
பால், தயிர், சீஸ் போன்றவற்றில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. எனவே வெஜிடேரியன்கள் தினமும் பால் பொருட்களை தவறாமல் தங்களின் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய புரோட்டீன்கள் கிடைக்கும். அதுவும் பாலுடன் நட்ஸ், விதைகள் போன்றவற்றை சேர்த்து உட்கொள்ளும் போது, இன்னும் அதிகமான அளவில் உடலுக்கு புரோட்டீன்கள் கிடைக்கும்.
பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்
பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, காராமணி போன்றவை ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான சமையல் பொருட்களாகும். இவற்றைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம். வெஜிடேரியன்கள் பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால், புரோட்டீன் குறைபாட்டை தவிர்க்கலாம். 100 கிராம் பருப்பில் 19 கிராம்பு புரோட்டீன்கள் உள்ளன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்திலும் புரோட்டீன்கள் அதிகமான அளவில் உள்ளன. எனவே வெஜிடேரியனாக இருப்பவர்கள், இந்த புரோட்டீன் உணவுகளை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
