உங்க பானை வயிறு சீக்கிரம் காணாம போகணுமா? அப்ப இந்த உணவுகள தினமும் காலையில சாப்பிடுங்க..!

Weight Loss In Tamil: நாட்டில் பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதியடைகிறார்கள். இது உங்கள் உடல் தோற்றத்தை பாதிப்பதோடு, பல்வேறு உடல்நல கவலைகளையும் ஏற்படுத்தலாம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையே உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.

உடல் பருமனை எதிர்த்துப் போராட, பெரும்பாலான மக்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் ஜிம்மில் மணிகணக்காக நேரம் செலவிடுகிறார்கள். மேலும், பலர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு. காலை உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைப்பதற்குப் பதிலாக எடையை அதிகரிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

காலை உணவு அன்றைய நாளின் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவைப் பொருத்து, அது உங்களை புத்துணர்ச்சியாகவும் நாள் முழுவதும் உற்சாகமாகவும் வைத்திருக்கும். அதனால், காலை உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில், இது அந்த நாளுக்கான ஆற்றலை வழங்குகிறது. ஒரு நபர் காலை உணவை தவிர்த்தால், பசி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புபவராக இருந்தால், உங்கள் காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Foods To Take As Breakfast For Weight Loss In Tamil

கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு சீலா
பாசிப்பருப்பு சீலா சாப்பிடுவது எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதாக உணர வைக்கும்.

இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படும். இந்த சீலா செய்வதற்கு உளுந்து, உப்பு, மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும். பிறகு சிறிது மாவை நான் ஸ்டிக் பாத்திரத்தில் வைத்து இருபுறமும் தோசை போல சுட வேண்டும். இப்போது, ஆரோக்கியமான பாசிப்பருப்பு சீலா ரெடி!

முட்டை
முட்டையில் அதிக புரோட்டீன் நிறைந்துள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலை உணவாக வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம். வேகவைத்த முட்டையை தவிர, ஆம்லெட் அல்லது முட்டை புர்ஜியும் சாப்பிடலாம்.

இருப்பினும், ஆம்லெட் அல்லது புர்ஜி செய்யும் போது அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். முட்டை சாண்ட்விச் அல்லது சாலட் செய்து காலை உணவாக சாப்பிடலாம்.

பன்னீர்
பன்னீரில் புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் காலை உணவில் பன்னீரை சேர்த்து பல வழிகளில் சாப்பிடலாம். பனீர் சாண்ட்விச் சாப்பிடலாம் அல்லது பனீர் புர்ஜியை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர, காலை உணவுக்கு உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பன்னீரை அப்படியே சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலுக்கு நல்ல ஆற்றலையும் வழங்கும்.

கஞ்சி
கஞ்சி ஓட்ஸ் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன. இதை சாப்பிடுவதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை கொடுக்கும். இதனால், நீங்கள் அதிக உணவுகளை சாப்பிட மாட்டீர்கள்.

மேலும் இது நல்ல செரிமானத்தை வழங்குவதோடு, ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். உங்கள் விருப்பப்படி இனிப்பு அல்லது காரம் ஓட்ஸ் கஞ்சி செய்து சாப்பிடலாம். கஞ்சியில் நிறைய காய்கறிகளைச் சேர்ப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும். ஓட்ஸ் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, மேலும், பல நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.

இட்லி சாம்பார்
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி சாம்பார். இது சாப்பிட ருசியாக இருப்பதைத் தவிர, மிகவும் ஆரோக்கியமானது. இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இட்லி எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காது. சாம்பார் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வண்ணமயமான காய்கறிகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, May 15, 2023, 16:35 [IST]
Desktop Bottom Promotion