For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் பலவீனமா இருக்கா? அப்ப அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடுங்க...

ஒருவரது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். அதோடு ஒருசில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

|

நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அத்தியாவசியமானது. வாய் என்பது பற்கள், ஈறுகளை உள்ளடக்கியது. வாயின் வழியாகத் தான் நாம் உண்ணும் உணவுகள் உடலுக்குள் செல்கிறது. எனவே நுழைவாயிலாக இருக்கும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. வாய் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

What Food Helps To Keep Gums And Teeth Healthy?

ஆனால் வாயின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் மற்றும் பானங்கள் பற்களில் சிக்கிக் கொண்டு, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து, பல பிரச்சனைகளை வரவழைக்கும். ஆகவே ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்தது. மேலும் ஒருவரது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். அதோடு ஒருசில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

MOST READ: உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்படின்னா இந்த காய்கறியை அடிக்கடி சாப்பிடுங்க...

இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, பற்கள் மற்றும் ஈறுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகளைத் தான். வாருங்கள் அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீஸ்

சீஸ்

சீஸ் பிரியர்களுக்கு, தற்போது சந்தோஷமாக இருக்கும். பால் பொருட்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எனாமல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். இருப்பினும் இயற்கை சீஸைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட சீஸ் பொருட்களான டிப்ஸ் மற்றும் ஸ்ப்ரே போன்றவை பற்களின் எனாமலை பாதிப்பதோடு, பற் சொத்தைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

பால்

பால்

பால் பொருட்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பது பால். இத்தகைய பால் எலும்புகளை வலிமைப்படுத்த உதவுவதோடு மட்டுமிக்றி, பற்களின் எனாமலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

காய்கறிகளான செலரி, கேரட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவ்வாறு காய்கறிகளை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஈறுகளின் வலிமை தூண்டப்படுவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும். கூடுதலாக, கேரட் மற்றும் செலரியில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு வைட்டமின் ஏ சத்தை உருவாக்க தேவையானவை. வைட்டமின் ஏ தான் வலுவாக பற்களை உருவாக்குவதற்கான முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை ஒரு நேச்சுரல் டூத் பிரஷ் என்றே கூறலாம். ஏனெனில் ஆப்பிள் ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுவதோடு, பற்களில் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைக்கிறது. மேலும் ஆப்பிளை மென்று சாப்பிடும் போது, வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்து, வாயில் உள்ள அமிலத்தன்மை குறைந்து, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது.

கீரைகள்

கீரைகள்

கீரைகளான பசலைக்கீரை மற்றும் கேல் போன்றவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. முக்கியமாக இவை வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. ஏனெனில் இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இது பற்களின் எனாமலை அதிகரிக்க உவுகிறது மற்றும் இவற்றில் ஃபோலிக் அமிலம் என்னும் ஒரு வகையான வைட்டமின் பி-யும் உள்ளது.

மீன்

மீன்

மீன்களில் உள்ள ஒமேகா-3 மீன் எண்ணெய்கள் DHA மற்றும் EPA ஆகியவை ஈறு அழற்சி நோயான பீரியண்டோன்டிடிஸ் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க டயட்டெடிக் அசோசியேஷனின் ஜர்னலில் ஆராய்ச்சி கூறுகிறது. கூடுதலாக, டுனா, ட்ரௌட் மற்றும் காட்டு சால்மன் போன்றவற்றில் வைட்டமின் டி மற்றும் இதயத்திற்கு நன்மையளிக்கும் கொழுப்புக்களும் நிறைந்துள்ளன.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களை மென்று சாப்பிடும் போது வாயில் அதிகளவு எச்சில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, சொத்தை பற்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு கைளயவு பாதாமில் கால்சியம் அதிகமாக நிறைந்துள்ளது. ஒரு கையளவு வால்நட்ஸில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் ஈ, பொட்டாசியம், ஜிங்க் போன்ற பற்களுக்கு நன்மையளிக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரியின் உள்ள உட்பொருட்கள் பற்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, பற்களின் பிளேக் உருவாக்கத்தை தடுக்கிறது. அதிலும் கிரான்பெர்ரியை ஜூஸாக உட்கொள்வதை விட நற்பதமாக அப்படியே சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருக்கும். இது பற்களுக்கு தீங்கை விளைவிக்கும்.

ப்ளாக் மற்றும் க்ரீன் டீ

ப்ளாக் மற்றும் க்ரீன் டீ

ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, சொத்தைப் பற்கள் மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். அதிலும் ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும்.

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை சாப்பிடும் போது பற்களில் ஒட்டிக் கொள்வது போன்ற ஒரு உணவுப் பொருள் தான். ஆனால் உண்மையில் இதில் உள்ள குறிப்பிட்ட பைட்டோகெமிக்கல்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, சொத்தைப் பற்கள் மற்றும ஈறு நோய்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் உலர் திராட்சையில் சுக்ரோஸ் இல்லை. இந்த சுக்ரோஸ் தான் ஈறு நோய்களுக்கான முக்கிய காரணியாக பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Food Helps To Keep Gums And Teeth Healthy?

Here we listed some best foods for healthy teeth and gums. Read on...
Desktop Bottom Promotion