For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட வைட்டமின் பி17 - ஏன் தெரியுமா?

லாட்ரைல் என்னும் வைட்டமின் பி17-னை சப்ளிமெண்ட்டுகளுக்கு பதிலாக இயற்கை உணவுகளில் இருந்தும் பெறலாம். இந்த வைட்டமின் பி17 பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

|

நம்மில் பலருக்கும் வைட்டமின் பி17 பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது மிகவும் அரிய வகை வைட்டமின். வைட்டமின் பி17 புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாக போற்றப்பட்டது. ஆனால் இது 80-களில் அமெரிக்காவின் எஃப்.டி.ஏவால் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தடைசெய்யப்பட்டது. இருந்தாலும், மாற்று மருந்து பயிற்சியாளர்கள் சிலர் இந்த வைட்டமினை கொடிய நோய்க்கு தீர்வளிக்கும் அமிக்டலின் அல்லது லாட்ரைலாக கருதுகின்றனர்.

Vitamin B17 Sources and Reasons To Not Skip Them

இத்தகைய வைட்டமின் பி17 விதைகளில் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. நைட்ரிலோசைடு ஒரு இயற்கையான சயனைடு கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது. இதன் சாறு நிரம்பிய லாட்ரைல் ஒரு பிரபலமான சப்ளிமெண்ட்டாகும். இந்த லாட்ரைல் உடலில் ஹைட்ரஜன் சயனைடு உற்பத்தியின் மூலம் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது உலகில் இன்னும் மிகவும் விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

இந்த லாட்ரைல் என்னும் வைட்டமின் பி17-னை சப்ளிமெண்ட்டுகளுக்கு பதிலாக இயற்கை உணவுகளில் இருந்தும் பெறலாம். இந்த வைட்டமின் பி17 பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. கீழே வைட்டமின் பி17 சத்தின் ஆரோக்கிய நன்மைகளையும், அந்த சத்து நிரம்பிய உணவுப் பொருட்களையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

வைட்டமின் பி17 உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். அதுவும் இது உடலில் தியோசயனேட்டை உருவாக்கி, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

வைட்டமின் பி17 நோயெதிர்ப்பு மண்டலத்தில் மாயத்தை ஏற்படுத்தும். பெங்களூருவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் அனுஜ் சூத், இந்த வைட்டமின் பி17 உடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதாக கூறுகிறார்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

சில நிபுணர்கள் வைட்டமின் பி17 மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றைப் போல் உடலில் இருந்து நச்சு செல்களை உடைத்து அழிப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த வைட்டமின் பி17 உடலை சுத்தம் செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

வலி நிவாரணி

வலி நிவாரணி

வைட்டமின் பி17 உடலில் ஏற்படும் பல வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு நல்ல வலி நிவாரணியாக செயல்படும்.

இப்போது வைட்டமின் பி17 நிறைந்த உணவுப் பொருட்களைக் காண்போம்.

விதைகள்

விதைகள்

வைட்டமின் பி17 எந்த உணவுப் பொருட்களில் ஏராளமாக நிறைந்துள்ளது என்று தெரியுமா? ஆப்ரிகாட் பழத்தின் விதைகள் தான் அதில் முதன்மையானது. இதர பழங்களின் விதைகளாவன:

* கொடிமுந்திரி

* பேரிக்காய்

* பீச்

* செர்ரி

* ஆப்பிள்

இதர விதைகளாவன:

இதர விதைகளாவன:

* ஆளி விதைகள்

* ஸ்குவாஷ் விதைகள்

* திணை விதைகள்

* பக்வீட் விதைகள்

இந்த விதைகளில் பல்வேறு வைட்டமின்கள் போதுமான அளவில் நிரம்பியுள்ளது.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் வைட்டமின் பி17 மட்டுமின்றி, மிகவும் முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள், டயட்டரி நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி1 போன்றவை அதிகம் உள்ளது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், ஆளி விதை பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நோய்களாவன:

* சர்க்கரை நோய்

* புற்றுநோய்

* இதய நோய்

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. பாதாம், முந்திரி போன்றவற்றில் வைட்டமின் பி17 ஏராளமாக உள்ளது. ஒருவர் பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களின் அளவு குறையும். பாதாமில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது மற்றும் இவை நல்ல கொழுப்புக்களாகும். அதேப் போல் முந்திரியிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், எலும்புகளை வலிமையாக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இவை இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மற்றும் குடல் புற்றுநோயில் இருந்து விலகி இருக்கச் செய்யும்.

பழங்கள்

பழங்கள்

பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கரண்ட்ஸ், கிரான்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் வளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் பெர்ரிப் பழங்கள் சிறப்பாக கருதப்படுவதற்கு மற்றொரு காரணம், அதில் அதிகளவிலான போட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது செல் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.

முளைக்கட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பச்சை பயறில் வைட்டமின் பி17 அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த வகை பயிர்கள் சிறுநீரகங்களுக்கு நல்லது மற்றும் வலிமிக்க சிறுநீரக கற்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.

இலைகள்

இலைகள்

யூகலிப்டஸ் இலைகளில் வைட்டமின் பி17 ஏராளமான அளவில் உள்ளது. மேலும் பசலைக் கீரைகளிலும் அதிகமாக வைட்டமின் பி17 உள்ளது. அதோடு பசலைக்கீரையில் உள்ள சக்தி வாய்ந்த இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பெருந்தமனி தடிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாவன பீட்டா-கரோட்டீன், மாங்கனீசு, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் செலினியம் போன்றவை.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் வைட்டமின் பி17 உள்ளது. ஆகவே பீன்ஸ் வகையைச் சேர்ந்த கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். அதுவும் வேக வைத்து அல்லது முளைக்கட்ட வைத்து உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin B17 Sources and Reasons To Not Skip Them

Here is a list of vitamin b17 sources and reasons to not skip them. Read on...
Desktop Bottom Promotion