Just In
- 1 hr ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 2 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- 6 hrs ago
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
Don't Miss
- News
கமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி?
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- Movies
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்!
நாம் இப்போது மழைக்காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மழைக்காலம் முடிந்ததுமே குளிர்காலம் வந்துவிடும். குளிர்காலம் வரும் போதே காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற நோய்களும் வந்துவிடுகின்றன. குளிர்காலத்தில் வரும் இந்த நோய்களை விரட்ட வேண்டும் என்றால் நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடனும் அதே நேரத்தில் இதமாகவும் வைத்திருக்க வேண்டும்.
எனவே குளிர்காலத்தில் வரும் நோய்களை விரட்டி, உடலை இதமாகவும் அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வைத்திருக்க பின்வரும் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டால் அது பல நல்ல பலன்களைத் தரும்.

நாட்டுச் சர்க்கரை/வெல்லம்
மதிய உணவை முடித்த பின்பு ஏதாவது இனிப்பு சாப்பிடலாமா என்ற எண்ணம் வரும். அப்படி எண்ணம் வரும் போது நாட்டு வெல்லத்தை ஒரு சிறிய அளவு சாப்பிட்டால் போதும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அது நிறைவு செய்துவிடும். மேலும் வெல்லத்தைத் தூளாக்கி அதில் ஒரு தேக்கரண்டி நெய்யையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை உண்டு வந்தால், அது உடலை இதமாக வைத்திருப்பதோடு, குளிர்காலத்தில் வரும் நோய்களையும் விரட்டிவிடும்.

மக்காச்சோள ரொட்டி
மக்காச்சோள மாவில் தயாரிக்கப்படும் இந்த மக்கி ரொட்டியோடு கீரையையும் கடுகையும் சேரத்து உண்டால், அது குளிர் காலத்திற்கு நல்ல பலனைத் தரும். பொதுவாக கோதுமை மாவு சப்பாத்தியை மட்டும் உண்பவர்கள், இந்த மக்கி ரொட்டியை சாப்பிட்டு பார்க்கலாம். அது கோதுமை சப்பாத்திக்கு நல்லதொரு மாற்றாக இருக்கும். இந்த மக்கி ரொட்டியை சாப்பிட்டால் அது தோல், முடி மற்றும் மூளை ஆகியவற்றிற்கு நற்பலன்களைத் தரும். அதோடு தைராய்டு சுரப்பியின் இயக்கத்தையும் இந்த மக்கி ரொட்டி அதிகரிக்கிறது.

கம்பு மாவு
குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய உணவு கம்பு ஆகும். கம்பு மாவில் எளிதாக சப்பாத்தி சமைத்து சாப்பிடலாம். கம்பு ஒரு வகையான தினைக் குடும்பத்தைச் சேர்ந்த தானியம் ஆகும். குளிர் காலத்தில், கம்பிலிருந்து மாவு எடுத்து அதில் உப்புமா அல்லது கிச்சடி செய்து பலர் உண்டு வருகின்றனர். கம்பில் பொட்டாசியம் இருப்பதால் இது இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டம் மிக எளிதாக நடைபெற உதவுகிறது. அதோடு இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த கம்பு உணவு நல்ல பலனைத் தருகிறது.

எள்ளு விதைகள்
குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கிய உணவு எள் விதைகள் ஆகும். பொதுவாக மிட்டாய்கள் செய்வதற்கும், வடைகள் செய்வதற்கும் அதோடு லட்டுகள் செய்வதற்கும் இந்த எள்ளு விதைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தலைமுடி வளர்வதற்கு இந்த எள்ளு விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த குளிர்காலத்தில் வீட்டிலேயே எள்ளு லட்டுகளைச் செய்யலாம். அல்லது எள்ளோடு நாட்டு வெல்லத்தைச் சேர்த்து உருண்டைகள் செய்து சாப்பிடலாம். அது உடலை இதமாக வைத்திருக்கும்.

நெய்
நெய்யில் உடலுக்குத் தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளன. நெய் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதோடு, முழு உடலையும் வலுப்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பருப்பில் நெய் சேர்த்து அல்லது சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் மணமாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும். எனவே குளிர்காலத்தில் நமது உடலை இதமாக வைத்திருக்க, கண்டிப்பாக நெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.