For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நரம்புகள் பலவீனமா இருக்கா? அத வலிமையாக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் முக்கியம். அத்துடன் அன்றாட உணவில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

|

நாம் நமது இதயம், நுரையீரல், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவை அன்றாடம் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவும், அவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது நரம்பு மண்டலத்தை தான். இது நமது உடலின் இயல்பான செயல்பாட்டின் ஒருங்கிணைந்த ஒரு முக்கிய பகுதியாகும்.

Top 7 Foods To Strengthen Weak Nerves

நரம்பு மண்டலம் தான் நமது நரம்பு முனைகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புகிறது. நரம்புகள் தான் ஒருவரது உணர்வுகளை வெளிப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் முக்கியம். அத்துடன் நரம்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள அன்றாட உணவில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நரம்புகள் பலவீனமாவது தடுக்கப்பட்டு, வலிமையாக இருக்கும். இப்போது நரம்புகளை வலுப்படுத்தும் உணவுகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விதைகள் மற்றும் நட்ஸ்

விதைகள் மற்றும் நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம், ஆளி விதைகள் போன்றவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் தான் ஆரோக்கியமான சருமம் மற்றும் நரம்புகள் மற்றும் உயிரணு சவ்வுகளைப் பெற உதவுகின்றன. அதோடு இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. பிஸ்தாவில் வைட்டமின் பி என்னும் தியாமின் வளமான அளவில் உள்ளது. இது நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சியில் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய சத்தான வைட்டமின் பி என்னும் தியாமின் வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் புரோட்டீன் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், பன்றி இறைச்சிக்கு மாற்றாக ஓட்ஸை சாப்பிடலாம். ஏனெனில் ஓட்ஸிலும் வைட்டமின் பி அதிகம் உள்ளது. கூடுதலாக இதில் புரோட்டீன், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நரம்புகளை அமைதியடையச் செய்து, நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்து என்றால் அது வைட்டமின் பி12 தான். இந்த வைட்டமின் பி12 மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது மற்றும் மன இறுக்கத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முக்கியமான சத்து. இந்த வைட்டமின் குறைபாடு தான் இதய பிரச்சனைகள் மற்றும் நரம்பு சேதத்தை உண்டாக்குகின்றன. கடல் உணவுகளான மீனில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. ஆகவே அடிக்கடி மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இறைச்சி

இறைச்சி

இறைச்சிகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் உள்ளது. இது நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. எனவே உங்கள் டயட்டில் சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வைட்டமின் பி12 மட்டுமின்றி, இதர வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன் போன்றவையும் உடலுக்கு கிடைக்கும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களான கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் பி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இச்சத்து மிகவும் அவசியமானது. ஏனெனில் இது தான் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவான நரம்பு மண்டலத்துடனும் பிறக்க, உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மற்றொரு முக்கியமான சத்து என்றால் அது பொட்டாசியம். இத்தகைய பொட்டாசியம் பால் பொருட்களில் அதிகம் உள்ளது. பால், தயிர், மோர் போன்றவற்றில் கால்சியம் மட்டுமின்றி பொட்டாசியமும் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த பிற உணவுப் பொருட்களாவன இறைச்சி, பச்சை இலைக் காய்கறிகள், மீன் போன்றவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 7 Foods To Strengthen Weak Nerves

Here are some foods to strengthen weak nerves. Read on...
Story first published: Saturday, August 22, 2020, 17:19 [IST]
Desktop Bottom Promotion