For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து எப்பவும் சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா பல பிரச்சனையை சந்திப்பீங்க...

முட்டையை பலவாறு சாப்பிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். ஆனால் முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

|

உடல் ஆரோக்கியத்தில் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஏனெனில் உணவுகள் மூலம் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன. அதில் பெரும்பாலான உணவுகள் உடலும் பெரும் நன்மையை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் சில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் தவறான உணவுச் சேர்க்கையானது உடல் சோர்வு, குமட்டல் மற்றம் குடல் நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே சரியான உணவுச் சேர்க்கை மற்றும் உணவுகளை உண்ணும் நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

Things That Shouldn’t be Mixed With Eggs In Tamil

நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை தன்னுள் கொண்ட ஓர் உணவுப் பொருள். இதில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர முட்டையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. இத்தகைய முட்டையை பலவாறு சாப்பிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். ஆனால் முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அந்த உணவுகள் எவையென்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேகன்/பன்றி இறைச்சி

பேகன்/பன்றி இறைச்சி

பெரும்பாலான மக்கள் முட்டையை பன்றி இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த மாதிரி முட்டையை சாப்பிட்டால், அது ஒருவரது சுறுசுறுப்புத்தன்மையை குறைத்து மந்தமாக்கிவிடும். ஏனெனில் முட்டை மற்றும் பன்றி இறைச்சி ஆகிய இரண்டுமே அதிக புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களைக் கொண்டவை. இவற்றை ஒன்றாக உண்ணும் போது எவ்வளவு விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறதோ, அதே வேகத்தில் உடல் ஆற்றலைக் குறைத்து, சோம்பேறியாக்கிவிடும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை மற்றும் முட்டை ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது, அதில் உள்ள அமினோ அமிலங்கள் வெளியிடப்பட்டு, உடலில் மோசமான நஞ்சாகிறது. மேலும் இந்த உணவுக் கலவை இரத்த உறைதலுக்கும் வழிவகுக்கும். எனவே முட்டையை சர்க்கரையுடன் சேர்த்த எப்போதும் சாப்பிடாதீர்கள்.

சோயா பால்

சோயா பால்

சோயா பால் மற்றும் முட்டை ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, உடலில் புரோட்டீனை உறிஞ்சுவதில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கும். ஆகவே புரோட்டீன் நிறைந்த உணவுகள் இரண்டையும் எப்போதும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

டீ

டீ

உலகிலேயே மிகவும் மோசமான உணவுச் சேர்க்கை என்றால் அது முட்டை மற்றும் டீயை ஒரே நேரத்தில் உட்கொள்வது தான். இம்மாதிரியான உணவுச் சேர்க்கை மலச்சிக்கலை உண்டாக்குவதோடு, உடலுறுப்புக்களில் மோசமான சேதத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டதும் முட்டை சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனே அதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் வாழைப்பழம் மற்றும் முட்டையை ஒன்றாக அடுத்தடுத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இம்மாதிரியான தவறை ஜிம் செல்பவர்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், அவர்கள் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Shouldn’t be Mixed With Eggs In Tamil

Here are some things that should not be mixed with eggs. Read on...
Story first published: Friday, November 26, 2021, 12:00 [IST]
Desktop Bottom Promotion