For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

அத்திப்பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதோ அதேயளவு அதனை அதிகம் சாப்பிடுவதில் ஆபத்துக்களும் இருக்கிறது. இது உங்கள் உடலின் பல பாகங்களில் சில மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

|

ஆண்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பழமாக கருதுவது அத்திப் பழத்தைத்தான். ஏனெனில் இது ஆண்களின் பாலியல் செயல்திறனை பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்மையை அதிகரிப்பது மட்டுமின்றி அத்திப்பழம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Side Effects Of Figs

அத்திப்பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதோ அதேயளவு அதனை அதிகம் சாப்பிடுவதில் ஆபத்துக்களும் இருக்கிறது. இது உங்கள் உடலின் பல பாகங்களில் சில மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் அத்திப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிறு சிக்கல்கள்

வயிறு சிக்கல்கள்

அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவது வயிற்றை கனமாக உணரச்செய்யும் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு மோசமான வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். அத்திப்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பது வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

வீக்கம்

வீக்கம்

வயிற்று வலி தவிர, அத்திப்பழம் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சோம்பு நீர் குடிப்பது இந்த பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது.

சூரிய ஒளி உணர்திறன்

சூரிய ஒளி உணர்திறன்

அத்திப்பழம் நீண்டகால தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் தோல் கட்டி சிகிச்சையிலும் பயனளிக்கும், இது உங்கள் சருமத்திற்கு சூரிய கதிர்களுக்கு அதன் உணர்திறனை அளிப்பதன் மூலம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். புற ஊதா கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் முன்கூட்டிய வயதான, மெலனோமா மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது தோல் வெடிப்புகளையும் ஏற்படுத்தும். தோல் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க அத்திப்பழம் சாப்பிட்ட பிறகு சூரிய ஒளியில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

MOST READ: கருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்?

கல்லீரல் மற்றும் குடல் பிரச்சினைகள்

கல்லீரல் மற்றும் குடல் பிரச்சினைகள்

அத்திப்பழம் உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அத்திப்பழத்தின் விதைகள் குடலில் அடைப்பை ஏற்படுத்தும். சாப்பிடும்போது அந்த விதைகள் தெரியாமல் போகலாம் ஆனால் அந்த விதைகள் செரிமானம் அடைவது கஷ்டமாகும். இது அத்திப்பழத்தின் மிகவும் ஆபத்தான பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.

இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு

அத்திப்பழம் இயற்கையாகவே சூடான தன்மைக் கொண்டது இதனால் இது இரத்தப்போக்கை ஏற்படுத்தும். அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் விழித்திரை இரத்தப்போக்கு, மலக்குடல் இரத்தப்போக்கு மற்றும் லேசான யோனி இரத்தப்போக்கு ஏற்படலாம். மலக்குடல் மற்றும் யோனி இரத்தப்போக்கு ஏற்பட்டால் அத்திப்பழம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிடவும்.

கால்சியம் உறிஞ்சுதல்

கால்சியம் உறிஞ்சுதல்

அத்திப்பழத்தில் அதிகமுள்ள ஆக்சலேட்டுகள் உங்கள் உடல் கால்சியம் உறிஞ்சும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த குறுக்கீடு நமது உடலின் கால்சியம் அளவில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் நமது எலும்புகள் பலவீனமடைய வாய்ப்புள்ளது.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

உங்களுக்கு அத்திப்பழம் ஒத்துக்கொள்ளாமல் இருந்தால் இது வெண்படல அழற்சி, நாசி அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது ஆஸ்துமாவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அத்திப்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை இருக்கிறதா என்று சோதிக்கவும்.

MOST READ: உங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்

அத்திப்பழம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கலாம், ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இது ஆபத்தானதாக முடியும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் அத்திப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unexpected Side Effects Of Figs

Here is the list of unexpected side effects of figs
Story first published: Wednesday, November 6, 2019, 14:44 [IST]
Desktop Bottom Promotion