உங்களால முன்ன மாதிரி செக்ஸில் ஈடுபட முடியலையா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க... நல்லா செயல்படுவீங்க!

முட்டையில் எல்-அர்ஜினைன் என்ற முக்கியமான கலவை உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் லிபிடோவை அதிகரிக்க உதவுகிறது.

நீங்கள் நோயின்றி வாழ விரும்பினால், உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது அவசியம். ஒரு சமீபத்திய ஆய்வு ஓர் அதிர்ச்சியான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அது, வைட்டமின் டி உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்லாது, உங்கள் பாலியல் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதாகும். அந்த வகையில், வைட்டமின் டி குறைபாடு உங்கள் பாலியல் செயல்திறனை குறைக்கும். உங்களுக்கு பாலியல் ஆசை குறைவாக இருந்தால், சில உணவுகளை எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவை, உங்கள் பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவும். ஏனெனில் நாம் சாப்பிடுவது நமது செக்ஸ் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வின்படி, உங்களுக்கு குறைந்த செக்ஸ் டிரைவ் இருந்தால், உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கலாம்.

Lack of Vitamin D affects your libido: Vitamin D Rich Foods to Boost Your libido in Tamil

காளான்கள் உட்பட வைட்டமின் டி பற்றாக்குறையை ஈடுசெய்ய, கஞ்சி, கார்ன்ஃப்ளேக்ஸ், காய்கறிகள், மீன், முட்டை மற்றும் கானாங்கெளுத்தி போன்ற வலுவூட்டப்பட்ட காலை உணவுகளை சாப்பிடுங்கள். வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர, ஒருவரின் லிபிடோவை பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. எனவே, உங்கள் லிபிடோவை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உங்கள் உடலுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் டி அவசியம். மீன் எண்ணெய், சால்மன் மீன், வாள்மீன், சூரை மீன், ஆரஞ்சு, பால் மற்றும் பால் பால் பொருட்கள், மத்தி மீன்கள், மாட்டிறைச்சி கல்லீரல், பட்டாணி மற்றும் தானியங்கள் முதலிய உணவுகளில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இவை மட்டுமல்லாது வைட்டமின் டி சூரிய ஒளியின் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது. ஆதலால், இந்த உணவுகளை உட்கொண்டு வைட்டமின் டி குறைப்பாடு ஏற்படாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டு

லிபிடோவை மேம்படுத்த உதவும் மிகவும் பிரபலமான உணவுகளில் பூண்டும் ஒன்றாகும். பூண்டு இயற்கையான பாலுணர்வைக் கொண்டுள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் செக்ஸ் உந்துதலை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, பூண்டில் அல்லிசின் என்ற முக்கியமான கலவை உள்ளது, இது பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால், பாலியல் செயல்பாடுகளில் நீங்கள் நன்றாக இயங்கலாம். பூண்டை உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கலாம் அல்லது பூண்டு கிராம்புகளை சப்ளிமென்ட்களாக எடுத்துக் கொள்ளலாம்.

டார்க் சாக்லேட்டுகள்

டார்க் சாக்லேட்டுகள்

பலர் இனிப்புகளை அதிகம் சாப்பிட விரும்பமாட்டார்கள். ஆனால் டார்க் சாக்லேட்டுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அவை உங்களுக்கு பல அதிசயங்களை செய்யும் என்பது தெரியுமா? ஆம், டார்க் சாக்லேட்டுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பிறப்புறுப்பு பகுதியில் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் மற்றும் விறைப்புத்தன்மையை எளிதாக்கவும் உதவுகிறது. மேலும், இவை உங்கள் பாலியல் தூண்டுதலை அதிகரிக்க உதவுகிறது.

கீரை

கீரை

அடர் பச்சை இலைக் காய்கறிகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் லிபிடோவிற்கும் நல்லது. கீரை போன்ற கருமையான இலைக் காய்கறிகள் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் லிபிடோவை அதிகரிக்கிறது. உங்களுக்கு லிபிடோ குறைவாக இருந்தால், உங்கள் உணவில் கீரையைச் சேர்க்க மறக்காதீர்கள்.

முட்டை

முட்டை

முட்டையில் எல்-அர்ஜினைன் என்ற முக்கியமான கலவை உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் லிபிடோவை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, முட்டையில் புரதம் உள்ளது, இது படுக்கையில் ஒரு மனிதனின் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

நட்ஸ்கள்

நட்ஸ்கள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் லிபிடோவை அதிகரிக்க உதவுகிறது. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பருப்புகளை தினமும் ஒரு பிடி சாப்பிடுவது உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இது உங்கள் லிபிடோவை அதிகரிக்க உதவுகிறது.

சிவப்பு ஒயின்

சிவப்பு ஒயின்

சிவப்பு ஒயின் மிதமான அளவில் உட்கொள்ளும் போது உங்கள் லிபிடோவை அதிகரிக்க உதவும். ரெட் ஒயினில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் நைட்ரிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் சருத்திற்கும் நன்மையளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 1, 2023, 13:12 [IST]
Desktop Bottom Promotion