Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
உங்க உணவு தட்டை இந்த கலர் ஃபுல்லான உணவுகளுடன் கண்டிப்பா மாற்றணுமாம்... ஏன் தெரியுமா?
சிக்கன் புரதத்தின் மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. கோழியில் உள்ள நியாசின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற பி வைட்டமின்கள் உங்கள் உடலை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
நம் உடல் ஆரோக்கியத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், தினமும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள நிபுணர்கள் நமக்கு பரிந்துரைக்கிறார்கள். காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு வழக்கமான உணவை சாப்பிட்டு சலித்துவிட்டீர்களா? இக்கட்டுரையில் வண்ணமயமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் நிறைந்த உணவு தட்டை உங்களுக்காக கொடுக்கிறோம். அதை நீங்கள் ஒரு சில பொருட்களுடன் ஒன்றாக இணைக்கலாம். இந்த வண்ணமையமான ஆரோக்கியமான உணவுத் தட்டு பார்வைக்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் என்று வரும்போது அனைத்தையும் உள்ளடக்கிய தட்டாக இருக்கும்.

இது புரதம், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சரியான சமநிலையைக் கொண்டுள்ளது. இந்த வண்ணமயமான உணவுத் தட்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

குயினோவா
குயினோவா புரதம், கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும் மற்றும் அதே நேரத்தில் பசையம் இல்லாதது. நீங்கள் குயினோவாவை தனித்தனியாக வேகவைக்கலாம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதை சமைக்க 10-12 நிமிடங்கள் ஆகும். உப்பு மற்றும் மிளகு சேர்த்து குயினோவை சாப்பிட நன்றாக இருக்கும். தினமும் ஒரு கிண்ணம் குயினோவா சாப்பிடுவதால் புற்றுநோய், இதய நோய், சுவாசக் கோளாறுகள், நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்களால் ஏற்படும் ஆரம்பகால மரண அபாயத்தை 17% குறைக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

குடைமிளகாய்
குறிப்பாக குளிர்காலத்தில் குடைமிளகாயை நீங்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்களின் வளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது மற்றும் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. குயினோவா மற்றும் சிக்கன் போன்ற புரத மூலங்களுடன் குடை மிளகாயை சேர்க்கும்போது ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.

மக்காச்சோளம்
சோளம் ஒரு சுவையான காய்கறி மட்டுமல்ல, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்வீட் கார்னை நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் இது எளிதில் சமைப்பது மட்டுமல்லாமல் பயன்படுத்த எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உறைந்த ஸ்வீட் கார்னை 2 நிமிடங்களுக்கு வேகவைத்து, நீங்கள் விரும்பும் எந்த உணவிலும் பய்னபடுத்தி சாப்பிடலாம். குறிப்பாக சால்ட்களில் நீங்கள் சேர்த்து சாப்பிடலாம்.

சிக்கன்
சிக்கன் புரதத்தின் மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. கோழியில் உள்ள நியாசின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற பி வைட்டமின்கள் உங்கள் உடலை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க மெலிந்த இறைச்சியைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்
பெரும்பாலும் எல்லா சால்ட்களிலும் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரியை சாப்பிடுவதற்கு ஒரு அற்புதமான வழி சால்ட் மற்றும் ஜூஸ். வெள்ளரியில் 96% நீர் உள்ளது. இது உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமின்றி திருப்தி உணர்வையும் தருகிறது. வெள்ளரிக்காயில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆதலால், இதை தினமும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காயில் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நீங்கள் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications