For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான ஒவ்வொரு ஆண்களும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

திருமணமான ஆண்கள் தங்களின் ரொமான்டிக் வாழ்க்கையும், உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க சாப்பிட வேண்டிய சில முக்கியமான உணவுகள் குறித்து இப்போது காண்போம்.

|

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தாங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பது டெஸ்டோஸ்டிரோன் அளவு, கருவுறுதல், நல்ல மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Healthy Foods Which Are Essential For Married Men

தற்போது பல தம்பதிகள் மன அழுத்தம் நிறைத்த வாழ்க்கை முறையால் தங்களின் காதல் வாழ்வில் முழுமையான அன்பை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றனர். சிலருக்கு காதல் உணர்வு இருந்தாலும், தங்களின் ரொமான்டிக் திட்டங்களை செயல்படுத்த உடலில் போதுமான வலிமை இல்லாமல் இருக்கின்றனர். உடலுக்கு வேண்டிய வலிமையை உணவுகள் மூலமாக எளிதில் பெறலாம்.

மேலும் திருமணமான ஆண்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க, நல்ல இரத்த ஓட்டம் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவையும் முக்கியம். இதற்கும் உணவுகள் உதவி புரிகின்றன. எனவே திருமணமான ஆண்கள் தங்களின் ரொமான்டிக் வாழ்க்கையும், உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க சாப்பிட வேண்டிய சில முக்கியமான உணவுகள் குறித்து இப்போது காண்போம். அந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டில் இருக்கும் அல்லிசின் திருமணமான ஆண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் இந்த பொருள் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் படுக்கையில் நன்றாக செயல்பட உதவுகிறது. எனவே அன்றாட உணவில் தவறாமல் பூண்டு சேர்த்தால் திருமணமான ஆண்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட்டில் ஃபைனிலெதிலமைன் உள்ளது. இது உடலில் டோபமைனை வெளியிட உதவும் ஒரு கலவை ஆகும். உடலில் டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால், மனநிலை சிறப்பாக இருக்கும் மற்றும் எப்போதும் நன்கு உணர வைத்து, மன அழுத்தமின்றி வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

திருமணமான ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைத்து, எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலில் காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவி புரிந்து, பாலுணர்ச்சியை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

நீங்கள் சைவ உணவாளராக இருந்தால், இந்த உணவைத் தவிர்த்திடுங்கள். ஆனால் மாட்டிறைச்சியில் எல்-கார்னைடைன் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாக கூறப்படுகின்றன. உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பாக இருந்தால், காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள ஃபோலிக் அமிலம், ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கச் செய்வதாக கூறப்படுகிறது. எனவே அடிக்கடி உணவில் பசலைக்கீரையை சேர்த்து ரொமான்டிக் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

கடல் சிப்பிகள்

கடல் சிப்பிகள்

கடல் சிப்பிகளில் நுத்தநாகம்/ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக்கூடியது. மேலும கடல் சிப்பிகள் காதல் ஹார்மோன்களை சுரக்க உதவுகின்றன. நீங்கள் உங்கள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், கடல் சிப்பிகளை அடிக்டி சமைத்து சாப்பிடுங்கள்.

மாதுளை

மாதுளை

பழங்களில் மாதுளை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன மேலும் மாதுளை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. சில ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், அது ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods Which Are Essential For Married Men

Here are some healthy foods which are essential for married men. Read on...
Story first published: Saturday, November 20, 2021, 13:21 [IST]
Desktop Bottom Promotion