Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கேக்கில் முட்டைக்கு பதிலாக எம்மாதிரியான பொருட்களை எல்லாம் யூஸ் பண்ணலாம் தெரியுமா?
கேக்கில் முட்டைக்கு பதிலாக ஒருசில சைவ பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சைவ பொருட்கள் உங்களுக்கு முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு சுவையையும் அளிக்கிறது.
புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான் நினைவுக்கு வரும். அதிலும் கேக் வெட்டி கொண்டாடுவது தனி ஒரு மகிழ்ச்சி. ஆனால் என்னவோ சைவ உணவு உண்பவர்களுக்கோ இது ஒரு ஐய்யருவானா விஷயம். காரணம் கேக்கில் கலக்கப்படும் முட்டை தான். புத்தாண்டில் இவர்களிடம் யாராவது கேக்கை அன்பாக நீட்டினால் கூட சாப்பிட முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. சரி அப்போ சைவ பிரியர்கள் என்ன செய்ய முடியும்?

அதனால் தான் நாங்கள் சில பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இனி முட்டைக்கு பதிலாக இந்த பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சைவ பொருட்கள் உங்களுக்கு முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு சுவையையும் அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் சைவ விரதத்தையும் நீங்கள் கடைபிடிக்க முடியும், அதே நேரத்தில் புத்தாண்டையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாட முடியும்.

முட்டைகளை ஏன் தவிர்க்க வேண்டும்?
கேக் செய்வதற்கு முதலில் ஏன் முட்டைகளை பயன்படுத்துகின்றனர். காரணம் இது கேக்கிற்கு பஞ்சு போன்ற தன்மையை மட்டுமே அளிக்கிறது. மாவை மென்மையாகவும் பஞ்சு போன்று மாற்றவும் உதவுகிறது. ஆனால் உண்மையில் அதிக கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு தீங்கானது. இவை ஆரோக்கியமானவை அல்ல. எனவே நீங்கள் ஒரு ஆரோக்கியமான உணவை பெற முட்டைக்கு பதிலாக சில பொருட்களை பயன்படுத்தலாம். இந்த பொருட்கள் அதே மாதிரியான சுவையை அளிப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.

சியா விதைகள்
முட்டைக்கு பதிலாக சியா விதைகளை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் இதில் முட்டையில் இருப்பது போன்று கொழுப்புகள் இல்லை. சியா விதைகளும் கேக்கை தயாரிக்க உதவுகிறது. ஆனால் இதில் கொஞ்சம் பேக்கிங் பவுடரை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
கேக் இன்னும் கச்சிதமாக செய்ய உடைத்த சியா விதைகளுக்கு பதிலாக முழு சியா விதைகளைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், மஃபின்களை தயாரிக்க எலுமிச்சை பாப்பி அல்லது வால்நட் பருப்புகள் போன்ற பொருட்களையும் பயன்படுத்தலாம். சியா விதைகளை வெஜ் புரோட்டீன் பேன் கேக், வீட்டில் தயாரிக்கப்பட்ட எனர்ஜி பார்ஸ், வேகன் குக்கீஸ் போன்ற டிஷ்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
1 டேபிள் சியா விதைகளை 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு ஊற வைத்து முட்டைக்கு பதிலாக கேக்கில் பயன்படுத்தி சுவை பெறுங்கள்.

பழச்சாறு
முட்டைக்கு பதிலாக நாம் பழங்களின் சாற்றைக் கூட கேக்குகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழம், பூசணிப்பழம், ஆப்பிள் மற்றும் ப்யூரிட் ப்ரூனே போன்ற பழங்களை முட்டைக்கு பதிலாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சுவையான இனிப்புச் சத்து, ப்ளேவரிங் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பேக்கிங் செய்யும் போது இந்த பழங்களின் சாற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். 1/4 கப் பழச்சாற்றை முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
மேலும் பழங்கள் கொழுப்பு இல்லாதவை மற்றும் அவற்றின் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபைபர் போன்ற பண்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆளி விதைகள்
ஆளி விதைகளையும் சியா விதைகள் போன்றே நீங்கள் கேக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சுவையை கூட்டுகிறது. எனவே இனி பேக்கிங் கேக்கில் முட்டைக்கு பதிலாக ஆளி விதைகளை தாராளமாக வெஜ் பிரியர்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆளி விதைகளை புட்டிங், கப் கேக்ஸ், மஃபின்கள், கேக்ஸ் மற்றும் டோனட் போன்றவற்றில் நீங்கள் பயன்படுத்தலாம்.
1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை 3 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் ஊற வைத்து முட்டைக்கு பதிலாக பயன்படுத்துங்கள்.

அவகேடா
முட்டைக்கு பதிலாக அவகேடாவை கூட கேக்கில் பயன்படுத்த முடியும். கப்கேக்ஸ், ப்ரவுனீஸ், குக்கீஸ் போன்றவற்றிற்கு இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முட்டையை போன்றே கேக்கிற்கு மென்மையான தன்மையை தருகிறது. ஒரு முட்டைக்கு பதிலாக 1/4 பங்கு அவகேடாவை நீங்கள் பயன்படுத்தலாம். மின்ட் அவகேடா, சாக்லேட் அவகேடா மற்றும் அவகேடா மவுஸீஸ் மற்றும் சாக்லேட் கப்கேக்ஸ் போன்றவற்றில் இதை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அவகேடா பழத்தில் போலேட், வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்துகள், புரோட்டீன் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளன.



Click it and Unblock the Notifications
