For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்துமா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...

ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.

|

இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருமே இப்பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆஸ்துமா என்னும் நிலையானது எப்போது ஒருவரது சுவாசக்குழாய் வீங்கி, அதைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைந்து, அந்த சுவாசக்குழாயில் சளி தேங்கி காற்று சரிவர செல்ல முடியாமல் போகும் போது ஏற்படுகிறது.

Fruits And Vegetables To Reduce The Symptoms Of Asthma In Tamil

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு வடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். இதனால் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி என பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இப்பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு சிகிச்சையின் போது இன்ஹேலர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த குடைமிளகாயை சுவாச பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் நீங்கி, சுவாச அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நுரையீரலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவும். எனவே சுவாச நோய் உள்ளவர்கள் மாதுளையை தினமும் ஜூஸ் வடிவிலோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடுவது நல்லது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, டிஎன்ஏ சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இஞ்சி இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல நோய்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

கீரைகளிலேயே பசலைக்கீரையில் புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே, நார்ச்சத்து, பாஸ்பரஸ், தயமின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் சருமம், தலைமுடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதோடு இது ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தவிர இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது இதய நோய் மற்றும் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இது எடை இழப்பிற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆப்பிள் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இது எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிப்பதோடு, எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக இதில் உள்ள பி வைட்டமின்கள் மன இறுக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ளன. இவை அனைத்துமே நுரையீரல் நோய்களின் அபாயத்தைக் குறைத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, மக்னீசியம், பி6 வைட்டமின், சி வைட்டமின் ஈ, ஃபோலேட் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை நுரையீரல் தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits And Vegetables To Reduce The Symptoms Of Asthma In Tamil

Here are some fruits and vegetables to reduce the symptoms of asthma. Read on...
Story first published: Thursday, May 5, 2022, 18:05 [IST]
Desktop Bottom Promotion