Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இதுவரை எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இனிமேல் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ்/கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஜிங்க், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு, இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். அதோடு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் விரைவாக குணமடைய இந்த மாத்திரைகளை மருத்துவர்களும் வழங்கி வருகிறார்கள்.

இந்திய அரசாங்க தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் வீதம் சுமார் 82% ஆகும். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்நோயில் இருந்து மீண்டவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சொல்லப்போனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இதுவரை எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இனிமேல் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரபல மருத்துவர் கூற்று
மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் இதுக்குறித்து கூறுவதாவது, அன்றாடம் எளிய மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் அன்றாடம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். என்ன தான் உடலின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க மாத்திரைகள் இருந்தாலும், ஆரோக்கியமான எளிய உணவுகளைத் தேர்வு செய்து உண்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு அதன் பலனைப் பெறலாம் என்றும் கூறுகிறார்.

எந்த மாதிரியான உணவுகளை உண்பது?
தொற்றுகளில் இருந்து விலகி இருக்க எந்த மாதிரியான உணவுகளை அன்றாடம் உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நோயில் இருந்து விரைவில் குணமாவதற்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்களுள் ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்றவை பெரிதும் உதவி புரியும்.
இப்போது இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம். அதைப் படித்து கொரோனாவில் இருந்து நீங்கள் மீண்டவராயின், பின்வரும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

வைட்டமின் சி
வைட்டமின் சி சத்து சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட் ஆகியவற்றிலும், ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ கேரட், பூசணிக்காய், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாம்பழம், முலாம் பழம், அடர் பச்சை நிற கீரைகள், மீன்களில் சால்மன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ஈ
நட்ஸ், விதைகள் மற்றும் விதை எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், கருணைக்கிழங்கு, வலுவூட்டப்பட்ட உணவுகளான ஜாம் போன்றவற்றில் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

ஜிங்க்
ஜிங்க் சத்து பீன்ஸ், பருப்பு வகைகள், இறைச்சி, தானியங்கள், விதைகள், நட்ஸ், பால் பொருட்கள், முட்டை மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றில் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மக்னீசியம்
மக்னீசியம் ப்ராக்கோலி, அவகேடோ/ வெண்ணெய் பழம், வாழைப்பழம், உலர்ந்த அத்திப்பழம், கொய்யாப் பழம், கிவி, பப்பாளி, ப்ளாக்பெர்ரி, ராஸ்ப்பெர்ரி, முலாம் பழம் மற்றும் கிரேப்ஃபுரூட் போன்ற உணவுப் பொருட்களில் அதிகமாக உள்ளது.

சீரான உணவு
வைட்டமின்களின் போதுமான தேவையைப் பெறுவதற்கு சீரான உணவை உட்கொள்வது மிகவும் கடினமானது அல்ல. ஆனால் உங்கள் புரோட்டீன் உட்கொள்ளல் அளவு அதிகமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், உங்கள் ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து, உங்களுக்கான டயட் திட்டத்தைக் கேட்டு அதைப் பின்பற்றுங்கள்.

உடற்பயிற்சி அவசியம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிதமான உடற்பயிற்சியும் அவசியம். எனவே ஜாக்கிங், ஜம்பிங் ரோப், சைக்கிளிங் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளான யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். அதோடு மன அழுத்தத்தைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். முக்கியமான தினமும் போதுமான அளவு தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











