For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த இந்த 5 உணவுகள சாப்பிட்டா போதுமாம்!

அற்புதமான டேட்ஸ் மற்றும் உலர் பழ கலவையானது இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன் வருகிறது.

|

இயற்கையில் கிடைக்கும் உணவுகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானவை. சப்ளிமெண்ட்ஸ் அல்லது வைட்டமின் மாத்திரைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் தினமும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது இரும்புச்சத்து குறைபாடுள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். இன்றைய நாளில் பலர் மற்றும் குறிப்பாக பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Boost your low hemoglobin levels with these iron-rich foods in tamil

எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை நீங்கள் சரிசெய்யலாம். இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். இந்த உணவுகள் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை என்பது இரத்தம் தொடர்பாக ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு இருக்கும்போது ஏற்படும். உங்கள் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதால், சோர்வு, பலவீனம் மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் இது இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் தீர்க்கப்படும் ஒரு பிரச்சனை. இரும்புச்சத்து உள்ள உணவுகள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இரும்புச்சத்து பல உணவுகள் அல்லது மூலிகைகளில் காணப்படுகிறது, இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியம்.

பீட்ரூட்

பீட்ரூட்

இரத்த நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் (ஆர்பிசி) உற்பத்தியைத் தூண்டி மேம்படுத்துகின்றன. இதனால், உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

பீட்ருட் சாறு

பீட்ருட் சாறு

உங்கள் உணவில் பீட்ரூட்டை சேர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால், பீட்ருட் சாறு உங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்யும். ஒரு பிளெண்டரில் சுமார் 1 கப் நறுக்கிய பீட்ரூட்டைச் சேர்த்து, அரைத்துக்கொள்ளவும், அந்த சாற்றை வடிகட்டி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இந்த அற்புதமான சாற்றை தினமும் காலை வேளையில் தொடர்ந்து குடித்து வர வேண்டும். இந்த சாறு வைட்டமின் சி உள்ளடக்கத்தை சேர்க்கிறது மற்றும் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

உலர் திராட்சை மற்றும் டேட்ஸ்

உலர் திராட்சை மற்றும் டேட்ஸ்

அற்புதமான டேட்ஸ் மற்றும் உலர் பழ கலவையானது இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன் வருகிறது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரும்பு உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும் இந்த உலர் பழங்களை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார். 3 முதல் 5 பேரீச்சம்பழங்கள் மற்றும் ஒரு டீஸ்பூன் திராட்சையை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடுங்கள். இது உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது மற்றும் இரும்புச் சத்தை அதிகரிக்கிறது.

பச்சை பருப்பில் செய்யப்பட்ட கிச்சடி

பச்சை பருப்பில் செய்யப்பட்ட கிச்சடி

பச்சை மூங் பருப்பு கிச்சடி என்பது ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்ட ஓர் அற்புதமான உணவு. இது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கவும் ஆற்றல் அளவை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இது எளிதில் மற்றும் விரைவாக செய்யக்கூடிய உணவு செய்முறை மற்றும் அனைத்து பருவங்களிலும் சிறந்த ஆறுதல் உணவாகவும் உள்ளது. இந்த ஆரோக்கியமான கிச்சடியில் புரதம் மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் சரியான கலவை உள்ளது. முழு மசாலாப் பொருட்களுடன் சமைத்த கீரை மற்றும் பருப்பின் இந்த சாரம் ஆரோக்கியமான உணவாக உங்களுக்கு செயல்படும்.

எள் விதைகள்

எள் விதைகள்

எள் விதைகள் இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் பி6, ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரப்பப்படுகின்றன. கருப்பு எள் விதைகளை தினமும் சேர்ப்பது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரும்பை உறிஞ்சுவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. 1 டீஸ்பூன் கருப்பு எள்ளை உலர் வறுத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து உருண்டையாக உருட்டி, எள் உருண்டையாக சாப்பிடலாம். உங்கள் இரும்பு அளவை அதிகரிக்க இந்த சத்தான எள் லட்டை தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றும் சில சுகாதார பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும்.

முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கைப்பூ மற்றும் முருங்கை இலை என அனைத்தும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை போன்றவை தென்னிந்திய உணவுகளில் பிரபலமான உணவாக உள்ளது. முருங்கைக்கீரையில் நல்ல அளவு வைட்டமின்கள் ஏ, சி, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் முருங்கை இலை பொடியை சாப்பிடுங்கள். உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மேலே குறிப்பிடபட்டுள்ள உணவுகளை இந்த இயற்கை வழிகளில் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boost your low hemoglobin levels with these iron-rich foods in tamil

Here we are talking about the Boost your low hemoglobin levels with these iron-rich foods in tamil.
Story first published: Wednesday, January 18, 2023, 9:35 [IST]
Desktop Bottom Promotion