For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத படிச்சீங்கன்னா இனிமே வாழ்க்கையில வாழைப்பழத்த கையாலகூட தொடமாட்டீங்க... அவ்ளோ மோசம்...

வாழைப்பழத்தைப் பற்றியும் இதை ஏன் சாப்பிடக் கூடாது என்பது பற்றியும் மிக விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது பற்றிய தொகுப்பு தான் இது.

By Mahibala
|

வாழைப்பழம் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு என்று தான் நாம் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருந்தோம். அதிலும் காலை உணவாகவும் நிறைய பேருக்கு இரவு உணவுக்குப் பின் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதும் பழக்கமாக இருக்கும். ஏனென்றால் அது நமக்கு பசி எடுப்பதைக் குறைக்கும்.

Banana

உடலுக்குத் தேவையான ஆற்றளும் அதே சமயம் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்பதால் தான். ஆனால் இதை படித்தால் இனிமேல் வாழைப்பழத்தை கையால கூட தொட மாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் மிகச்சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. இதை நாம் நிறைய வகைகளில் சாப்பிடுகிறோம். பச்சையாக அப்படியே பழமாகவோ மில்க் ஷேக், ஃபீரிசரில் வைத்து, உலர்த்தியது, வேகவைத்து சாப்பிடுவது, பிரட்டில் வைத்து சாப்பிடுவது என பல வகைகளில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறோம். ஏனென்றால் அதில் மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதால் தான். ஆனால்...

MOST READ: உங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்

ஏன் இதை படிக்கணும்?

ஏன் இதை படிக்கணும்?

எவ்வளவு தான் ஊட்டச்சத்து மதிப்புகள் இருந்தாலும் கூட, மென்மையான நம்முடைய உடலை கொஞ்சம் கடினமானதாக மாற்றிவிடும் இந்த வாழைப்பழம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? வாழைப்பழம் சாப்பிட்டால் உங்களுடைய இதயம் மற்றும் மார்புப் பகுதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று. அதனால் தான் பெரும்பாலும் இதய நோயாளிகளுக்கு வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அதோடு வாழைப்பழத்தில் கீழே குறிப்பிடப்படும் நிறைய பிரச்சினைகள் உண்டு. அதைப் பற்றி தெரிந்து கொண்டாலே இனிமேல் நீங்களே வாழைப்பழத்தை சாப்பிட மாட்டீர்கள்.

டயட் உணவு இல்லை

டயட் உணவு இல்லை

டயட்டில் இருப்பவர்கள் குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று டயட் இருப்பவர்கள் மிகப் பிரதானமான உணவாகக் கருதுவது இந்த வாழைப்பழத்தை தான். ஆனால் வாழைப்பழம் அவ்வளவு சிறந்த டயட் உணவு கிடையாது. ஏனென்றால் அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அது மற்ற பழங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கலோரிகள் அதிகம்.

ஒரு வாழைப்பழத்தில் கிட்டதட்ட 105 கலோரிகள் இருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த அளவு மட்டுமே நார்ச்சத்து கொண்டது. அதனால் இது உங்களுடைய பசியை நிறைய நேரம் கட்டுப்படுத்தாது. சாப்பிட்டு முடித்த திருப்திய இருக்காது. அதனால் முக்கியமான சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

வாழைப்பழம் நிறைய சாப்பிடுகிறவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தைரமின் என்னும் பொருள் சீஸ் போன்ற புரதங்கள் அதிகம் கொண்ட உணவில் இருக்கும். இது அழற்சியை ஏற்படுத்தும் உட்பொருள்களில் ஒன்று. வாழைப்பழத்தின் தோலில் தான் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறதே தவிர பழத்தில் இல்லை. அதனால் தான் நிறைய நாடுகளில் வாழைப்பழத்தோல் ஸ்நாக்ஸாக சாப்பிடப்படுகிறது.

MOST READ: ஒரே மாசத்துல 15 கிலோ வரை குறைக்கணுமா? வெறும் வயித்துல இந்த பானத்த மட்டும் குடிங்க போதும்

அதிக பொட்டாசியம்

அதிக பொட்டாசியம்

வாழைப்பழத்தில் தான் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் எல்லாம் இருக்கிறதே உன்று நீங்கள் நினைக்கலாம். அதனால் குறைந்த அளவில் எப்போதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். அது இதய ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனால் அதிகமாக சாப்பிட்டீர்கள் என்றால் நீங்கள் ஹைப்பர்கலீமியாவை வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது உங்களுடைய ரத்தத்தில் அதிக அளவிலான பொட்டாசியம் அதிக அளவில் சேர்ந்து விட்டது என்று அர்த்தம்.

இந்த ஹைப்பர்கலீமியா இதயத்துடிப்பை சீராக வைத்திருக்காது. தசைகள் பலவீனப்பட்டிருக்கும். தற்காலிக பக்கவாதம். உங்களுக்கு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோ அல்லது வேறு ஏதாவது நோய்த் தாக்குதல்களோ இருந்தால் அதற்கு உங்களுடைய ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பது தான் காரணம். அதிக அளவில் வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த பிரச்சினைகள் உண்டாகலாம்.

சிறந்த காலை உணவல்ல

சிறந்த காலை உணவல்ல

நம்மில் நிறைய பேர் காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இது கிட்டதட்ட சாப்பிட்டு முடித்தபின் போடப்படும் ஸ்லீப்பிங் பில்ஸ் மாதிரி. தூக்கத்தை உண்டாக்கக் கூடியது.

பல் துலக்குங்கள்

பல் துலக்குங்கள்

வாழைப்பழத்தை காலை உணவுக்குப் பதிலாக இரவு உணவுக்குப் பின் சாப்பிடுவது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டு முடித்தவுடன் உடனே பல் துலக்கிவிட வேண்டும்.

பல் பாதுகாப்பு

பல் பாதுகாப்பு

வாழைப்பழம் உங்களுடைய பற்களுக்கு மிகவும் ஆரோக்கியம் வாய்ந்தது. அதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி உங்களுடைய பற்களையும் அதன் எனாமலையும் எலும்புகளையும் உறுதியாக வைத்திருக்கும். அதேசமயம் வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை பற்களில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். அதனால் தற்காலிகமாக பற்களின் பிஎச்(ph) அளவில் மாற்றம் உண்டாகும். இது உங்களுடைய பற்களின் எனாமலை பாதிக்க வாய்ப்புண்டு. அதற்கு தான் வாழைப்பழம் சாப்பிட்டதும் பல் துலக்கச் சொல்கிறார்கள்.

நரம்புகள் பாதிப்பு

நரம்புகள் பாதிப்பு

அதிக அளவில் வாழைப்பழங்கள் சாப்பிட்டால் அளவுக்கு அதிகமான அளவு வைட்டமின் பி6 உடலில் சேரும். அளவுக்கு அதிகமாக வைட்டமின் பி6 சேர்ந்தால் நரம்புகள் பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம். அதாவது 500 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் பி6 அளவு இருந்தால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.

மூக்கொழுகுதல், அழற்சி

மூக்கொழுகுதல், அழற்சி

அழற்சி குணங்கள் இருக்கின்றவர்களாக இருந்தால் நிச்சயம் வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். இது அழற்சி பண்புகளைத் தூண்டக் கூடியது. இது மட்டுமல்ல, கிவி பழம், அவகேடா, தக்காளி, குடைமிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டால் வாயில் நமநமக்கும். அதேபோல தான் வாழைப்பழமும்.

MOST READ: நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நெஜத்துல கவுன்சிலராமே... அவர பத்தி இன்னும் பல சுவாரஸ்யங்கள் இதோ...

வயிற்று வலி

வயிற்று வலி

வாழைப்பழம் சாப்பிட்டு முடித்ததும் வயிறு வலிக்கும் தெரியுமா?அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் வாழைப்பழங்களைப் பொறுத்தவரையில் நன்கு கனிந்த பழங்களாகத் தான் சாப்பிட வேண்டும். நன்கு பழுக்காமல் கொஞ்சம் காயாவே இருந்தால் அதில் ஸ்டார்ச் அதிக அளவில் இருக்கும். நன்கு பழுத்த பழங்களைச் சாப்பிட்ட பின் வயிற்றுவலி வந்தால் அது அழற்சி மற்றும் வாயுத் தொல்லையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: banana milk பால்
English summary

You Will Never Eat Another Banana Knowing This

Bananas are a great snack food. They come perfectly packaged in a single serving size. They taste good raw, cooked, in bread or over cereal. They have a lot of great nutritional value.
Story first published: Friday, March 1, 2019, 15:58 [IST]
Desktop Bottom Promotion