For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க

அரிசி மற்றும் கோதுமை இவை இரண்டில் உண்மையாகவே எதில் ஆரோக்கியம் அதிகம் என்று இங்கே அறிவியல் ரீதியாக விவாதிக்கவும் விளக்கவும் பட்டுள்ளது.

|

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுடைய மிக முக்கியமான பிரச்சினையே அவர்கள் சாப்பிடுகிற உணவு தான். தனக்கு எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் இதில் எவ்வளவு கலோரி இருக்கிறது?

rice or wheat

இதை சாப்பிடலாமா வேண்டாமா என்று சந்தேகத்தோடே வாழ வேண்டியிருக்கும். எதைப் பார்த்தாலும் இதனால் வெயிட் போடுமோ, இது சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகிடுமோ என்று பயந்து சாக வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வதந்திகள்

வதந்திகள்

இதனாலேயே தனக்குப் பிடித்ததை சாப்பிடாமல் வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவோம் என்று நிறைய பேர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அதிலும் சிலர் எங்கோ படித்தோ கேள்விப்பட்டோ இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு, அரிசி சோறை கண்ணிலேயே பார்க்கக்கூடாதாம். மூன்று வளையும் கோதுமை தான் (சப்பாத்தி) எடுத்துக் கொள்ள வேண்டுமாம் என்று சொல்லிக் கொண்டு வேண்டா வெறுப்பாக சப்பாத்தியாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

MOST READ: இந்த கிழங்க கட்டாயம் பார்த்திருப்பீங்க... இதோட மாவுல என்னென்ன அதிசயம் இருக்குன்னு தெரியுமா?

காரணம்

காரணம்

இபப்டி மூன்று வேளையும் சாப்பாத்தியாக சாப்பிடுகிறவர்கள் சொல்கின்ற காரணம் என்ன தெரியுமா? அரிசியில் மிக அதிகமாக கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதை அடிக்கடி சாப்பிட்டால் தொப்பை ஏற்பட்டுவிடும். அதனால் அதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சப்பாத்தியோ அப்படியில்லை. உடல் எடையைக் கட்டுப்பாடாக வைத்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை தான் என்ன? அரிசியா? கோதுமையா? எது ஜெயிக்கிறது என்று விரிவாக இங்கே பார்க்கலாம்.

சத்து நிறைந்தது

சத்து நிறைந்தது

நம்மில் பலரும் சப்பாத்தி சத்து நிறைந்த உணவு என்ற பிம்பத்துடனேயே இருக்கிறோம். இதில் அடிப்படையான விஷயம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரிசி, கோதுமை இரண்டிலுமே அதிக அளவிலான கிளைசெமிக் இன்டக்ஸ் இருக்கிறது. இரண்டுமே நமக்கு அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டை தான் கொடுக்கிறது. இந்த இரண்டுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

இன்சுலின் சுரப்பு

இன்சுலின் சுரப்பு

கோதுமையுடன் ஒப்பிடுகிற பொழுது அரிசியில் கொஞ்சம் கூடுதலாகவே கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இரண்டுமே நம்மடைய உடலில் ஒரே மாதிரியான செயல்களைச் செய்கிறது. அரிசியோ கோதுமையோ இரண்டில் எதுவாக இருந்தாலும் தொடர்ந்து அதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால் நிச்சயம் இன்சுலின் சுரப்பில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். இதனால் சிலருக்கு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

கொழுப்பு

கொழுப்பு

அரிசி மற்றும் கோதுமை ஆகிய தானியங்கள் நிறைந்த உணவை மட்டுமே மிக அதிக அளவில் தொடர்ந்து எடுத்துக் கொண்டீர்கள் என்றால், உடலில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி உங்களுடைய உடலில் சேருகின்ற கார்போஹைட்ரேட்டை உடல் உழைப்பு மற்றும்உடற்பயிற்சியின் மூலம் அதை செலவழிக்க வேண்டும். அப்படி செலவழிக்காமல் விட்டுவிட்டால் அது முழுக்க உடலில் அப்படியே தங்கி கொழுப்பாக மாறிவிடும். வெறுமனே எனர்ஜிக்கான சாப்பிடுவதாக நினைத்து அரிசி, கோதுமையை மட்டும் சாப்பிடாமல் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது பேலியோ டயட் இருக்கலாமா? அதனால் என்ன மாதிரி பிரச்சினை வரும்?

எவ்வளவு மாவு சாப்பிடலாம்?

எவ்வளவு மாவு சாப்பிடலாம்?

அரிசி சாதம் சாப்பிடக் கூடாது என்று சொல்லி மதியம் மட்டும் சோதம் சாப்பிட்டுவிட்டு, காலையும் இரவும் இட்லி, தோசை சாப்பிடுகிறவர்களைப் பார்த்திருப்போம்.

ஆனால் பொதுவாக உங்களுடைய உணவில் அதிக அளவிலான தானியங்களைச் சேர்த்துக் கொள்வது மிகவும் தவறானது. அது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. வளர்ந்து வரும் பருவத்தில் நீங்கள் சாப்பிடுகின்ற உணவுகளில் 30 முதல் 35 சதவீதத்துக்கும் மேல் தானிய உணவுகளோ கார்போஹைட்ரேட்டோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஒரே இடத்தில் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்கின்றவர்களுக்கு இதுதான் சரியான அளவு.

உடலுக்கு ஆற்றல்

உடலுக்கு ஆற்றல்

உடல் உழைப்பு குறைவாக இருக்கின்றவர்கள் அரிசி மற்றும் கோதுமை இரண்டையுமே குறைத்து சாப்பிடுவது நல்லது தான். அரிசியை விடவும் கோதுமை தான் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

நீங்கள் உண்ணும் உணவில் காய்கறிகளை கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக பருவ கால (சீசன்) காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுடைய உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதில் அதிகப்படியான வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை கிடைக்கும்.

கோதுமை

கோதுமை

தற்போது விளைவிக்கப்படுகிற கோதுமை பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக இருக்கிறது. அதனால் இந்த கோதுமையாடு அரிசியை ஒப்படும் போது அரிசி சிறந்தது என்று தான் கூற வேண்டும். இநத மரபு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை பெரும்பாலும் க்ராஸ்பீராடகத்தான் இருக்கிறது. அதில் அதிக அளவிலான குளுட்டன், அக்லூட்டின் மற்றும் லெக்டின் ஆகியவை மிக அதிக அளவில் இருக்கும். இவை பொதுவாக நமக்கு தீங்கு விளைவிப்பவையே.

செரித்தல்

செரித்தல்

அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் ஒப்பிடுகின்ற பொழுது, அரிசி மிக எளிதாக ஜீரணமாகக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் அரிசியில் மேற்சொன்ன குளுட்டன், லெக்டின் ஆகியவை கிடையாது.

நமக்கு தொப்பை உண்டாவதற்கான முக்கிய காரணமே செரிமானக் கோளாறு தான். ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும்போது மேலும் மேலும் கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்வதால் தொப்பை அதிகமாகிறது.

MOST READ: உறவின்போது விந்து உள்ளே செல்லும்முன் உறுப்பை எடுத்துவிட்டால் கர்ப்பம் உண்டாகுமா? ஆகாதா?

கோதுமை எப்படி அலர்ஜியாகிறது?

கோதுமை எப்படி அலர்ஜியாகிறது?

கோதுமை காலங்காலமாக சாப்பிடுகிற உணவு தான் என்றாலும் அது நெிறைய பேருக்கு அலர்ஜியாக இருக்கிறது.இதற்கான காரணம் நிறைய பேருக்குப் புரிவதில்லை. 30 க்கும் மேற்பட்ட கோதுமை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் சில மட்டுமே பயிரிடப்படுகின்றன. குறிப்பாக அவை யாவும் ஹெயர்லூம் வகையைச் சேர்ந்தவை. இப்படி கிராஸ் பிரீடு செய்யப்பட்டவற்றில் உள்ள சத்துக்களில் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால் அலர்ஜி ஏற்படுகிறது.

இப்போது புரிகிறதா? அரிசி கோதுமையைக் காட்டிலும் எந்த வகையிலும் ஊட்டச்சத்தில் குறைவில்லை. அதேசமயம் ஆரோக்கியத்திலும் குறைவில்லை. இனியாவது உணர்ந்து சாப்பிடுங்கள். பகட்டுக்காகவும் யாரோ சொல்வதற்காகவும் அரிசியை வீசிவிட்டு கோதுமையை அதிகமாகச் சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

which is healthy rice or wheat?

we are discussing here the reasons for which is healthy rice or wheat?.
Story first published: Wednesday, January 9, 2019, 17:51 [IST]
Desktop Bottom Promotion