For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது! மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்!

|

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கு தனி விதமான கலாசாரம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாட்டின் கலாசாரம் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கும். சிலரின் கலாசாரம் பயங்கர கொடூரமாக இருக்க கூடும். இது போன்ற கலாசாரங்கள் அந்த நாட்டிலுள்ள மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தான் மாறுபடும்.

துபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது! மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்!

மேலும், சில நாடுகளில் மதத்தின் அடிப்படையிலும் இது வேறுபட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக துபாய், சீனா, கொரியா போன்ற பல நாடுகளில் பலதரப்பட்ட கலாசாரங்கள் பரவி உள்ளது. முக்கியமாக உணவு முறையில் பல வேறுபாடுகள் உள்ளது.

துபாய் கலாசாரத்தில் உணவு உண்ணும் போது இடது கையால் சாப்பிட கூடாதாம். அவ்வாறு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதையும், வேறு சில நாடுகளின் வித்தியாசமான உணவு கலாச்சாரங்களையும் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தென் கொரியா

தென் கொரியா

தென் கொரியாவின் உணவு முறை மிகவும் வித்தியாசமானது. அதாவது, இங்கு எல்லோருடைய சாப்பாட்டின் முதல் பங்கை குடும்பத்தின் தலைவர் தான் சாப்பிட வேண்டுமாம். இது பல நாட்டினருக்கு வித்தியாச முறையாக தோன்றுகிறது.

சீனா

சீனா

நம் ஊரில் வெளிப்படையாக ஏப்பம் விட்டால் நம்மை அதிகமாக கலாய்ப்பர். ஆனால், சீனாவில் ஏப்பம் விட்டால் அதை பாராட்டுவார்களாம்.

அவர்கள் சாப்பிட்ட உணவு மிகவும் பிரமாதமாக இருந்தது என்பதை தெரிவிப்பதே இந்த ஏப்பம் தானாம்.

தாய்லாந்து

தாய்லாந்து

ஃபோர்க் என்பதை நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்துவோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் ஃபோர்க் ஸ்பூன்களை பயன்படுத்த கூடாதாம். வாயில் ஃபோர்க் படுவதே மிக மோசமான பழக்கமாகி இவர்கள் கருதுகின்றனர்.

MOST READ: ஒரு இரவில் இந்த பெண் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..! இப்படியுமா நடக்கும்!

இத்தாலி

இத்தாலி

இத்தாலி நாட்டில் சாப்பிட்டதற்கு பின் கப்பசினோ என்கிற பானத்தை குடித்தால் அது ஆரோக்கியமற்ற பழக்கமாக கருதுகின்றனர்.

பொதுவாக இவர்கள் எப்போதுமே சாப்பாட்டிற்கு பின் பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட மாட்டார்களாம்.

தான்சானியா

தான்சானியா

இந்நாட்டில் சாப்பிடுவதற்கு நேரம் பார்த்தாலே அது மிகவும் மோசமான பழக்கம் என் கருதுவார்களாம். இவர்கள் எப்போதுமே குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 20 நிமிடம் தாமதமாக தான் உணவு உண்ண செல்வார்கள்.

கஜகஸ்தான்

கஜகஸ்தான்

இந்த நாட்டில் வீட்டில் வருபவருக்கு முழு கப் டீ கொடுத்தால், அது அவரை மிக விரைவாக வீட்டை விட்டு போக சொல்வதற்கு அர்த்தமாம். பாதி கப் டீ கொடுத்தால் அவர்கள் உங்கள் மீது அதீத அன்பு கொண்டுள்ளனர் என்பதை குறிக்கிறது.

துபாய்

துபாய்

துபாய் போன்ற அரபு நாடுகளில் இடது கையால் சாப்பிட கூடாது என்கிற விதி முறை உள்ளது. எப்போதுமே வலது கையை மட்டும் தான் சாப்பிடும் போது பயன்படுத்த வேண்டுமாம்.

மேலும், இடது கையை இவர்கள் கழிப்பறை போன்ற இடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த கூடிய கையாக கருதுகின்றனர்.

MOST READ: ஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க

ஜப்பான்

ஜப்பான்

இந்நாட்டில் உணவு உண்ணும் போது ஒரு சாப் ஸ்டிக்கில் இருந்து வேறொரு சாப் ஸ்டிக்கிற்கு மாற்றினால் அதை துருதர்ஷடம் என்பார்களாம். மேலும், இது மோசமான பழக்கம் என இவர்கள் கருதுவார்கள்.

இந்த பழக்க வழக்கங்களை பற்றி உங்கள் கருத்து என்ன? அதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

shocking food etiquettes around the world

This article talks about the shocking food etiquettes and habits around the world.
Story first published: Wednesday, March 27, 2019, 17:51 [IST]
Desktop Bottom Promotion