For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்காசோளம் தவிர இந்த 5 பொருள்ல கூட பாப்கார்ன் செய்யலாம்... அதவிட சூப்பரா இருக்கும்...

|

பாப்கார்ன் என்றால் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு பாப்கார்ன் எல்லாருக்குமே பிடித்த ஸ்நாக்ஸ். நம்ம மக்கள் தியேட்டர் போனால் கூட இதைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். இதுவரை பாப்கார்ன் என்றாலே மக்காச்சோளத்தை பொறித்து சாப்பிடுவது தான் தெரியும்.

Popcorn

ஆனால் மக்காச்சோளத்தை தவிர பாப்கார்ன் தயாரிக்க இன்னும் சில தானியங்களைக் கூட நாம் பயன்படுத்தலாம். இந்த தானியங்கள் நமக்கு வித்தியாசமான பாப்கார்ன் சுவையை தருவதோடு நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாப்கார்ன் தானியங்கள்

பாப்கார்ன் தானியங்கள்

உங்களுக்கு மக்காச்சோளம் பாப்கார்ன் அழற்சி இருந்தால் இந்த மாதிரியான வித்தியாசமான தானியங்களில் கூட பாப்கார்ன் செய்து சாப்பிடலாம். இதற்கு முளைக்கீரை விதைகள், காலிபிளவர், சோளம், பார்லி, கீன்வா தானியங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

MOST READ: சாப்பிட்டதும் வயிற பிசையுதா? சும்மா விட்றாதீங்க... அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்...

முளைக்கீரை விதைகள்

முளைக்கீரை விதைகள்

முளைக்கீரை விதைகள் என்பது தானியம் கிடையாது. இது கீரையின் விதைகள். இதில் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரோட்டீன் உள்ளது , சிறிய வடிவில் காணப்படும். பார்ப்பதற்கு கோல்டன் நிறத்தில் காணப்படும். இது இயற்கையாகவே க்ளூட்டன் இல்லாத உணவு. மெக்ஸிகோ போன்ற நகரங்களில் இந்த பாப்கார்ன் தான் புகழ் பெற்றது. இதை அரிசி பொரியை போன்று ஈஸியாக பொரிக்கலாம். இதை பொரிக்க பானை, மூடி, ஆயில் போன்றவை தேவை இல்லை.

சோளம்

சோளம்

சோளம் பழங்காலத்தில் இருந்தே பாப்கார்ன் தயாரிக்க பயன்படுகிறது. இதுவு‌ம் க்ளூட்டன் இல்லாத உணவு. இதையும் பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும். 3 மடங்கு கால்சியம் சத்துள்ளது. எனவே இது நமக்கு ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றே கூறலாம்.

MOST READ: மீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா? இந்த 5 பொருள சாப்பிடுங்க...

காலிபிளவர்

காலிபிளவர்

காலிபிளவர் பாப்கார்ன் செய்வது மிகவு‌ம் எளிதானது. இதன் பூக்களை பொடிசு பொடிசாக நறுக்கி அதனுடன் உப்பு, மிளகு சேர்த்து, ஈஸ்ட் சேர்த்து அதை நீர்ச்சத்து இல்லாமல் காய வைக்க வேண்டும். இப்பொழுது பொரித்து எடுத்தால் நல்ல மொறுமொறுப்பான பாப்கார்ன் ரெடி. அதன் மேல் சீஸ் ஊற்றி நீங்கள் சுவைக்கலாம். கொழுப்பு இல்லாத ஒரு ஆரோக்கியமான உணவு.

கீன்வா

கீன்வா

இதுவு‌ம் பழைய காலத்தில் பயன்படுத்தி வரும் தானியமாகும். இதில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதையும் பொரித்து பாப்கார்ன் மாதிரியோ அல்லது பால் சேர்த்து காலை உணவாகக் கூட சாப்பிடலாம். முதலில் கீன்வாயை நன்றாக அலசிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் அதன் கசப்புத் தன்மை போகும். நல்ல கனமான பாத்திரத்தில் மூடி போடாமல் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். ஆயில் தேவையில்லை. நன்றாக உலர வைத்து விட்டீர்கள் என்றால் நல்லா புஷ்னு வரும்.

MOST READ: மில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க... பால்ல இந்த பவுடர போடுங்க... உடனே திக்காயிடும்...

பார்லி

பார்லி

பார்லி பொதுவாக பிரட் மற்றும் சூப் உணவுகளில் அதிகளவு பயன்படுகிறது. இதில் ஏகப்பட்ட நார்ச்சத்துகள் உள்ளது. இதனால் சீரண சக்தியை மேம்படுத்தி உடல் எடையை குறைத்து விடும். எனவே உங்கள் இரவு நேர இடைவெளியை சுவையானதாக மாற்ற பார்லி பாப்கார்ன்யை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Popcorn substitutes

There are a number of excellent popcorn substitutes that can be healthier options and may simply add a bit of variety to your late-night snacks. It is a very popular snack around the world. These popped corn kernels are usually popped in a high heat oil, and seasoned with salt and butter. From baseball games to movie nights, popcorn is considered a beloved tradition.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more