For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா? தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க!

|

பொதுவாக சாப்பாட்டை பற்றிய பிரிவை 2 வகையினராக கூறலாம். ஒன்று எந்நேரமும் "சோறு தான் முக்கியம்" என இருப்பவர்கள். இன்னொரு பிரிவினர் ஒரு போதும் சோற்றை பற்றி கொஞ்சம் கூட நினைக்காதவர்கள். இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொருத்தும் வேறுபடும் என்பது உண்மை தான். என்றாலும், பெண்களை காட்டிலும் ஆண்களே சோற்று விஷயத்தில் சிறப்பான Foodie-யாக இருக்கின்றனர் என ஆய்வுகள் சொல்கின்றன.

நீங்கள் சாப்பிடும் இந்த 10 உணவுகளும் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா..?

எப்போதுமே சாப்பாட்டை பற்றியே நினைத்து, சாப்பாட்டிற்காகவே வாழும் எண்ணம் கொண்டவர்களை தான் Foodie என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதை தமிழில் "சோத்து மூட்ட, தீனி பண்டாரம்" போன்ற பெயர்களால் அழைப்பது வழக்கமே. நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தப்பில்லை. ஆனால், அதற்கு முன்னர் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைய எவ்வளவு நேரம் எடுத்து கொள்ளும் என்பதை உணர்ந்து சாப்பிட்டால் நல்லது.

இல்லையேல் பரிசாக கிடைப்பது உடல் எடை கூடுதல், இதய நோய்கள், கொலஸ்ட்ரால், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், முதலிய நோய்கள் தான். இந்த பதிவில் நாம் சாதாரணமாக சாப்பிட கூடிய உணவு செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் நேரம் எடுத்து கொள்ளும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம்!

நேரம்!

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு செரிமானம் அடைய நீண்ட காலம் கூட எடுத்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 20 நிமிடம் முதல் அதிக பட்சம் 72 மணி நேரம் வரை முழுமையாக செரிமானம் ஆவதற்கு உணவுகள் எடுத்து கொள்ளும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இது அவரவரின் வயது, ஆரோக்கியம், உறுப்புகளின் செயல்திறன், பாலினம் போன்றவற்றை குறித்து வேறுபடும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பாலில் புரதம், கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் என பல வித ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. ஆடை நீக்கிய பாலை குடித்தால் அரை மணி நேரத்திற்குள் செரிமானம் ஆகி விடுமாம்.

அத்துடன் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் சாப்பிட்டால் 1 மணி நேரம் வரை செரிமானமாக எடுத்து கொள்ளும்.

MOST READ: உடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

முட்டை

முட்டை

முட்டையை காலையிலே சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். முட்டையில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் செரிமான நேரம் சற்று வேறுபடும். மஞ்சள் கரு 30 நிமிடத்திற்குள் செரிமானம் ஆகிவிடும்.

அதே போன்று முட்டையின் வெள்ளை பகுதி செரிமானம் ஆக 20 நிமிடம் ஆகுமாம். சராசரியாக 1 முழு முட்டை செரிமானம் அடைய 45 நிமிடம் எடுத்து கொள்ளுமாம்.

ஜுஸ்கள்

ஜுஸ்கள்

டயட் என்கிற பெயரில் வயிற்றை காய போடும் பலரும் முதலில் இதை நன்கு உணர வேண்டும். அதாவது, பழ சாறுகளை குடித்தால் வெறும் 20-30 நிமிடங்களிலே அவை செரிமானம் அடைந்து விடுமாம்.

எனவே, இவை மிக சீக்கிரத்தில் பசியை தூண்டும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பருப்பு மற்றும் தானிய வகைகள்

பருப்பு மற்றும் தானிய வகைகள்

கோதுமை, ஓட்ஸ், சோளம், கம்பு, பழுப்பு அரிசி போன்றவை செரிமானமாக 90 நிமிடங்கள் வரை எடுத்து கொள்ளும். மேலும், பட்டாணி, பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவை செரிமானமாக 2-3 மணி நேரம் கூட ஆகலாம்.

காய்கறிகள்

காய்கறிகள்

சுலபமாகவும், மிக சீக்கிரமாகவும் செரிமானம் ஆகக்கூடிய உணவு பொருட்களில் இவைகளும் ஒன்று. பெரும்பாலும் தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், செலரி போன்றவை செரிமானம் அடைய 30-40 நிமிடங்கள் ஆகுமாம். அதே போன்று கீரை வகைகள் செரிமானம் ஆக 40-50 நிமிடம் வரை எடுத்து கொள்ளலாம்.

MOST READ: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க இந்த 8 உணவுகளில் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்..!

இறைச்சி

இறைச்சி

நிறையுற்ற கொழுப்புகள், சோடியம், நைட்ரேட் போன்றவை அதிக அளவில் இறைச்சியில் இருப்பதால், இவை செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்து கொள்ளும். இவற்றின் செரிமான நேரம் சுமார் 3-6 மணி நேரமாக இருக்கும்.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள்

பூமிக்கு கீழ் வளர கூடிய உணவு பொருட்களின் செரிமான நேரம் மற்ற காய்கறிகளை காட்டிலும் வேறுபடும். குறிப்பாக கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ரூட் போன்றவை செரிமானமாக 1 மணி நேரம் எடுத்து கொள்ளுமாம்.

அதே போன்று, சேனை கிழங்கு, உருளை கிழங்கு, பூசணி, வேர்க்கடலை, பனங்கிழங்கு முதலியை செரிமானம் ஆக 1 மணி நேரத்திற்கும் மேலாகும்.

பழங்கள்

பழங்கள்

அன்றாடம் பழங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்போ நீங்க நிச்சயம் இதை தெரிஞ்சு வச்சிக்கறது நல்லது.

பொதுவாகவே மிக சீக்கிரத்திலே செரிமானம் ஆக கூடிய உணவுகளில் பழங்கள் முக்கிமானவை. காரணம் பழங்கள் செரிமானம் ஆவதற்கு 20 முதல் 40 நிமிடம் தான் ஆகுமாம்.

MOST READ:இந்த பட்டாணி பாலை 1 கப் குடிப்பதால், உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன?

நட்ஸ்

நட்ஸ்

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ் போன்றவை செரிமானம் ஆக 2 ,மணி நேரமாவது எடுத்து கொள்ளும். அதே போன்று எள்ளு, பூசணி விதைகள், சுண்டல் போன்றவை 1 மணி நேரத்திற்குள் செரிமானம் ஆகி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How much time Does Your body takes to digest these foods

This article explains that how much time your body takes to digest these foods.
Desktop Bottom Promotion