For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை குறைக்க கோதுமையை சாப்பிடுபவரா நீங்கள்? ஜாக்கிரதையாக இருங்கள்

முழு கோதுமை என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆனால் இந்த முழு கோதுமையால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

|

முழு கோதுமை என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக அனைவராலும் கருதப்படுகிறது. இதற்கு காரணம் இதில் அதிகளவு உள்ள நார்ச்சத்துக்கள்தான். பொதுவாக இதனை பயன்படுத்தி பிரட் செய்வார்கள். அது மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்கள், எடை குறைக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு கோதுமைதான் முதன்மை உணவாக கருதப்படுகிறது. ஆனால் இந்த முழு கோதுமையால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

Health Problems With Whole wheat

உண்மைதான், கோதுமை அதிகம் சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கலாம். குறிப்பாக இதில் உள்ள க்ளுட்டன் என்னும் பொருள் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். அது மட்டுமின்றி இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்துவதில் கோதுமை முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் முழு கோதுமை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோதுமையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

கோதுமையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் கோதுமை மாவில் மொத்தம் 340 கலோரிகள் உள்ளது. மேலும் 10.7 கிராம் நார்ச்சத்தும், 70 கிராம் கார்போஹைட்ரேட்டும், 3.2 கிராம் புரோட்டினும், 0.4 கிராம் சர்க்கரையும், 2.5 கிராம் கொழுப்பும், 0.07 கிராம் ஒமேகா 3 அமிலமும் உள்ளது. மேலும் 11 சதவீதம் நீரும் உள்ளது.

சர்க்கரை அளவை அதிகரிக்கிறது

சர்க்கரை அளவை அதிகரிக்கிறது

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களான ப்ரெட் போன்றவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இதற்கு காரணம் வெள்ளை பிரட் விரைவில் செரிமானம் அடைந்து விடுவதால் அது சர்க்கரை அளவை தூண்டுகிறது. முழு கோதுமையை பொறுத்தவரையில் அதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது, நார்ச்சத்து எவ்வளவு அதிகம் உள்ளதோ, செரிமானம் அவ்வளவு மெதுவாக நடக்கும். முழு தானியங்கள் நுண் துகள்களாகக் குறைக்கப்படும்போது, அவை விரைவாக செரிக்கப்படுவதோடு சர்க்கரை அளவை தூண்டவும் செய்கிறது. இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

க்ளுட்டன் தொடர்பான ஒவ்வாமைகள்

க்ளுட்டன் தொடர்பான ஒவ்வாமைகள்

க்ளுட்டன் என்பது புரோட்டின் தொடர்புள்ள முழுதானியங்களில் காணப்படும் ஒரு பொருளாகும் இது கொடுமையிலும் அதிகம் உள்ளது. இதுதான் கோதுமைக்கு பசை போன்ற நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. பலருக்கு இந்த பசை போன்ற உணவுகளால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும்போது அது செரிமானம் தொடர்பான பிரச்சினைகளான வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் இதனால் குடல் தொடர்பான நோய்கள் கூட உண்டாகலாம்.

MOST READ:இந்த ஒரு பொருளை தானம் கொடுப்பது உங்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடும் தெரியுமா?

ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்

ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்

தானியங்களில் இருக்கும் பைட்டிக் அமிலம் என்னும் பொருள் உடலின் முக்கியமான கனிமங்களை உறிஞ்சிவிடும் திறனைக் கொண்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து நமது உடலில் உள்ள வைட்டமின் டி-யை உறிஞ்சி நமக்கு வைட்டமின் டி குறைபாட்டை ஏற்படுத்தும். முழுகோதுமையில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை விட அதிகளவு பைட்டிக் அமிலம் உள்ளது, இதை அதிகம் சாப்பிடும் போது இது மக்னீசியம், ஜிங்க் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சும்.

இதய நோய்

இதய நோய்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து கோதுமையை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நடுத்தர வயதை சேர்ந்த ஆண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தொடர்ந்து 12 வாரம் கோதுமையை உணவில் சேர்த்து கொண்ட போது அவர்கள் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரித்தது கண்டறியப்பட்டது. இந்த LDL கொழுப்புகள் இதய ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. மேலும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் மூளையிலும் பல பாதிப்புகளை உண்டாக்கும்.

க்ளுட்டன் அட்மாசியா

க்ளுட்டன் அட்மாசியா

மண்டை ஓட்டின் பின்பகுதியில் காணப்படும் இடம்தான் செரிபெல்லம் ஆகும். நமது தசைகளை சீராக செய்லபட வைக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் பகுதி இதுதான். உடலில் க்ளுட்டன் அதிகளவு இருக்கும்போது அது செரிபெல்லத்தின் மீது தாக்குதலை உண்டாக்கும். இதனால் சில தசைகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளில் பிரச்சினைகள் உண்டாகலாம்.

மனச்சிதைவு நோய்

மனச்சிதைவு நோய்

அதிகமாக க்ளுட்டன் சேர்த்துக்கொள்வது கடுமையான மனச்சிதைவு மற்றும் செலியாக் குறைபாடுகளை ஏற்படுத்தும். கோதுமையை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களின் மூளையின் செயல்திறன் அதிகம் சேர்த்து கொள்ளாதவர்களின் செயல்திறனை விட குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

MOST READ:உங்க ராசிக்கு பக்கவா பொருந்துற தலயோட பஞ்ச் டயலாக் எது தெரியுமா? ஒருமுறை ட்ரை பண்ணிப்பாருங்க

ஆட்டிசம்

ஆட்டிசம்

மூளையின் செய்லபாடுகளை பாதிக்கும் எனும் போது அதில் ஆட்டிசம் மற்றும் அல்சைமர் ஆகியவை முக்கியமான குறைபாடுகளாகும். அதிகளவு க்ளுட்டன் எடுத்துக்கொள்ளும் போது அது உங்களுக்கு அதிக மறதியை உண்டாக்கும். மேலும் செலியாக் குறைபாடு ஆட்டிசத்துடன் நேரடி தொடர்புடையதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: diabetes weight loss food vitamin
English summary

Health Problems With Whole wheat

Whole wheat is considered to be really healthy, it's a great source of fibre. But it has some serious side effects too.
Desktop Bottom Promotion