For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலில் இருக்க கூடிய சளியை வெளியேற்ற இதில் ஏதாவது ஒன்றையாவது தொடர்ந்து சாப்பிடுங்கள்!

|

யாருக்கு தான் சளி தொல்லை இல்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை சளி பிரச்சினையால் அன்றாடம் அவதிப்படுவோர் நிறைய பேர் உள்ளனர். சளி தொல்லையை அவ்வளவு சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. நுரையீரலில் உண்டாக கூடிய சளியானது பல்வேறு மோசமான மாற்றங்களை நேரடியாக ஏற்படுத்தும்.

நுரையீரலில் இருக்க கூடிய சளியை வெளியேற்ற இதில் ஏதாவது ஒன்றையாவது தொடர்ந்து சாப்பிடுங்கள்..!

இது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்புகளையும் பாதித்து விடும். நாம் சாப்பிட கூடிய உணவுகள் தான் இப்படிப்பட்ட மோசமான பாதிப்பை ஏற்படுத்த முக்கிய காரணியாக உள்ளது என மருத்துவர்களே கூறுகின்றன. எடுத்து கொள்ளும் உணவின் பண்பும் அதன் திறனும் மிக முக்கியமானது.

ஏதேதோ உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நுரையீரலுக்கு ஆபத்து உண்டாகும். முதலில் இவை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதித்து, நோய் கிருமிகளை உருவாக்கும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகள் நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

நுரையீரலில் சேர கூடிய சளியை விரட்ட பலவித வழிகள் இருந்தாலும் அவற்றில் மிக எளிமையான வழி இது தான். சாப்பிட கூடிய உணவில் போதுமான அளவுக்கு வெங்காயத்தை சேர்த்து கொண்டாலே நுரையீரலில் இருக்க கூடிய சளி நீங்கி விடும். அத்துடன் சளி உற்பத்தி ஆவதையும் வெங்காயம் தடுத்து விடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

தேன்

தேன்

நுரையீரல் மற்றும் சளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை முழுவதுமாக தடுக்கும் தன்மை தேனிற்கு உள்ளதாம். சளியை முற்றிலுமாக உடலில் இருந்து நீக்கும் தன்மை தேனில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் சிறப்பான தேர்வாகும்.

பூசணி

பூசணி

உடலில் நோய் தொற்றுக்களை தடுத்து நிறுத்தும் தன்மை இதற்குண்டு. குறிப்பாக நுரையீரலில் உற்பத்தி ஆக கூடிய சளியை நீக்கி, சைனஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும். கூடவே எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்குமாம்.

இஞ்சி

இஞ்சி

உணவில் எந்த அளவிற்கு இஞ்சியை சேர்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு இதன் தாக்கம் சிறப்பாக இருக்கும். அதாவது, இஞ்சியில் சளியை ஒழித்து கட்டும் திறன் உள்ளது. அத்துடன் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் தன்மையும் இதில் உள்ளதாம். ஆகவே இஞ்சியை அதிக ழ்வில் சேர்த்து கொள்வது சிறந்தது.

MOST READ: மதிய நேரத்தில் இந்த 9 உணவுகளில் ஒன்றை கூட சாப்பிட்டு விடாதீர்கள்..! மீறினால் இந்த ஆபத்துகள் எல்லாம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை வாரத்திற்கு 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. காரணம் இவற்றில் இருக்க கூடிய அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் தான். மேலும், இவை நுரையீரலில் ஏற்பட கூடிய சளியை நீக்க கூடிய தன்மை கொண்டது.

மஞ்சள்

மஞ்சள்

சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுகளில் மஞ்சளும் ஒன்று. அன்றாடம் மஞ்சளை உணவில் சிறிதளவு சேர்த்து வந்தாலே நுரையீரல் பிரச்சினைகள் உண்டாகாது.

அத்துடன் சளியை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொல்லும். கூடவே சுவாச குழாயில் உண்டாக கூடிய பாதிப்புகளும் இதனால் தடைப்படும்.

காரசார உணவுகள்

காரசார உணவுகள்

சாப்பிட கூடிய உணவில் அதிக அளவில் காரத்தை சேர்த்து கொண்டால் மிக எளிதாக நம்மால் சளியை தடுத்து விடலாம். காரணம் காரசார உணவுகளில் சேர்க்கப்படும் மிளகாய் தான். இதில் கேப்சைசின் என்கிற முக்கிய மூல பொருள் உள்ளதால் சளியை விரட்டி அடித்து விடும்.

அன்னாச்சி

அன்னாச்சி

செரிமான கோளாறு முதல் சளி தொல்லை வரை அண்ணாச்சி உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை சளியின் உற்பத்தியை தடை செய்து ஆரோக்கியமான சூழலை தரும். கூடவே உடல் நலத்தையும் பாதுகாக்கும்.

MOST READ: முடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..!

இயற்கை எண்ணெய்கள்

இயற்கை எண்ணெய்கள்

இயற்கை முறையில் தயாரிக்கும் எண்ணெய் வகைகள் பல நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியவை. நெஞ்சு பகுதியில் இருக்கும் சளியை முற்றிலுமாக போக்க யூகலிப்டஸ் மற்றும் புதினா எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.

இவற்றை வெந்நீரில் கொஞ்சம் கலந்து ஆவி பிடித்தும் வரலாம். இதனால் நுரையீரலில் தேங்கி உள்ள சளி வெளியேறி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: food cold cough உணவு
English summary

Foods That Destroy Mucus From Lungs

Here we listed out the foods that destroy mucus from lungs.
Desktop Bottom Promotion