Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...
- 23 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 1 day ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 1 day ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
Don't Miss
- News
கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை முன்னிலை.. யார் இந்த சரத் பச்சே கவுடா?
- Movies
முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்
- Finance
ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..!
- Technology
சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிபரங்கள்.!
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மதிய நேரத்தில் இந்த 9 உணவுகளில் ஒன்றை கூட சாப்பிட்டு விடாதீர்கள்..! மீறினால் அவ்வளவு தான்!
எந்த ஒரு உணவை சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கென்ற கால நேரம் மிகவும் அவசியம். அதே போன்று சாப்பிட கூடிய உணவின் அளவும் அதன் பண்பும் கூட மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை தான் வள்ளுவர் "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை" என குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் காலை நேரத்தில் ஒரு உணவு வகை என்றும், மதிய நேரத்தில் ஒரு உணவு வகை என்றும், இரவு நேரத்தில் ஒரு உணவு வகை என்றும் பிரித்து சாப்பிட்டாலே நோய்களின் பாதிப்பு குறைந்து விடும்.
இதை தவிர்த்து, கண்ட உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டால் பலவித கோளாறுகளும் ஆபத்துகளும் ஏற்படும் என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மதிய நேரத்தில் சில உணவுகளை நாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது என இவர்கள் வலியுறுத்துகின்றனர். மீறினால் இதனால் உண்டாகும் பக்க விளைவுகள் பல மடங்கு எனவும் கூறப்படுகிறது. இனி எந்தெந்த உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மதிய நேரம்
காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவுகளை காட்டிலும் மதிய நேரத்தில் அதிக அளவில் உணவை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த உணவின் தன்மையும், அதனால் கிடைக்க கூடிய ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியமானதாகும்.
மதிய நேரம் சாப்பிட கூடிய உணவை நாம் சரியாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமான மண்டலத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடை, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சூப்
மதிய நேரத்தில் சூப் போன்ற ஸ்னாக் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி எடுக்க தொடங்கி விடும். இதனால் மேலும் அதிகமான அளவில் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் உடல் பருமனை தான் இவை உண்டாக்கும்.

ஜுஸ்
டயட் என்கிற பெயரில் பலர் செய்யும் அளப்பறைகளை நம்மாலே தாங்கி கொள்ள இயலாது. அந்த வகையில் வெறும் ஜுஸை மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது எந்த வகையில் நியாயம். இது போன்று சாப்பிட்டால் மிக விரைவிலே பசியை தூண்டி வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டி விடும். இறுதியில் இதனால் கிடைப்பது மோசமான உடல் ஆரோக்கியம் தான்.

பர்கர்
ஃபாஸ்ட் ஃபூட்ஸ் போன்ற உணவுகளை இப்போதெல்லாம் அதிக அளவில் உண்கிறோம். இது மிக மோசமான ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பர்கர், பீட்சா போன்ற உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். இதனால் இறுதியில் கிடைப்பது உடல் பருமன் மட்டுமே. அத்துடன் மறுநாள் மலச்சிக்கல் பிரச்சினையும் உண்டாகும்.
MOST READ: வேலை நேரத்தில் இந்த 8 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீர்கள்..! மீறினால் அவ்வளவு தான்!

சாலட்ஸ்
சாலட்டில் மிக குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்திக்கான உணவாக இருக்குமே தவிர மதிய நேரத்திற்கு ஏற்ற உணவாக இருக்காது. ஆதலால், இந்த வகை உணவை மதிய நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

நூடுல்ஸ், பாஸ்தா
மிகவும் சுவையாக இருக்கிறதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்க கூடிய தன்மை பெற்றது. இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்து. மாறாக சத்துகள் மிக குறைவே.

சான்விட்ச்
எப்போதுமே பிரட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமான கோளாறுகளை உண்டாக்கும். முடிந்த அளவிற்கு நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

கொழுப்பு சத்து
எப்போதுமே வறுத்த, பொரித்த உணவுகளை மட்டுமே மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் முழு ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த வகை உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இதய கோளாறுகள், மாரடைப்பு, உடல் பருமன், மலச்சிக்கல் ஆகிய அபாயங்களை தந்து விடும்.

ஆரோக்கியம் முக்கியம்!
ஆதலால், மதிய நேரத்தில் சாப்பிடும் போது அவசியம் உணவில் கவனம் தேவை. நார்சத்து, நீர்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் எந்தவித உடல் நல கோளாறுகளும் உங்களுக்கு உண்டாகாது. மதிய உணவின் தன்மையும் மிக முக்கியம் என்பதை கவனத்தில் எடுத்து கொண்டாலே போதும்.