For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 9 உணவுகளை மட்டும் எப்போதுமே சாப்பிடாதீர்கள்! காரணம் என்னனு தெரியுமா?

|

இன்று நாம் சாப்பிட கூடிய பல உணவுகள் அதன் உண்மை தன்மையை இழந்துள்ளது என்றே சொல்லலாம். இது ஒரு புறம் இருக்க உண்மையிலே ஆபத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு அபாயங்கள் உடலுக்கு ஏற்படும். இது நாளடைவில் மோசமான உடல் நிலையை தரும். அதுவும் குறிப்பாக தசை பகுதியை பாதிக்க கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் சில உணவுகள் சேர்ந்துள்ளன.

இந்த 9 உணவுகளை மட்டும் எப்போதுமே சாப்பிட்டாதீர்கள்! காரணம் என்னனு தெரியுமா?

மனித உடலுக்கு தசை வளர்ச்சி மிக முக்கியமானது. தசை பாதிப்பு ஏற்பட்டால் எலும்புகள் பாதிப்படையும். பிறகு ஒவ்வொரு உறுப்புகளும் சேதமடையும். ஆரம்ப நிலையில் இது ஒரு சாதாரண பிரச்சினையாக தோன்றினாலும், போக போக இதன் தாக்கம் மிகவும் அதிகமடையும். இந்த மோசமான நிலையை உங்களுக்கு ஏற்படுத்த இந்த 9 உணவுகளே போதும். இனி அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்புகள் நீக்கப்பட்ட

கொழுப்புகள் நீக்கப்பட்ட

சுகர் ப்ரீஃ உணவுகளை போன்றே கொழுப்புகள் இல்லாத FAT-FREE உணவுகளும் உள்ளன. கொழுப்புகள் உடலில் மிதமான அளவு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இவை செயற்கை முறையால் சுத்திகரிக்கப்பட்டால் பல்வேறு மோசமான விளைவை உண்டாக்கும். இவை தான் தசைகளை பாதித்து தசை வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

க்ளுட்டன்

க்ளுட்டன்

நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் க்ளூட்டன் சேர்ந்திருந்தால் அவை நம் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்கும். க்ளுட்டன் சேர்ந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்க செய்து விடும். பார்லி, பிரட், கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் நாம் சாப்பிட கூடாது.

சோளம்

சோளம்

சோளம் சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுங்கள் நீங்கள் நினைப்பது போன்று ஆரோக்கியமானவை அல்ல. இவை தான் உங்களுக்கு ஆப்பு வைக்கும் உணவுகள். சோளத்தை பதப்படுத்தி சாப்பிடும் போது இவை இதய நாளங்களை பாதிக்க செய்கிறது. மேலும், சர்க்கரை நோய், புற்றுநோய், மூளை நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

MOST READ: எந்தெந்த வயதில் எந்தெந்த அளவு கொழுப்பு சத்து இருக்க வேண்டும்? அதற்கு மீறி இருந்தால்?!

சர்க்கரை

சர்க்கரை

சாப்பிடும் உணவில் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். சர்க்கரை அதிக அளவில் சேர்த்து கொண்டால் தசைகள் மிக விரைவிலே அதன் வலிமையை இழந்து விடும். கூடவே, உடலுக்கும் அதிக அழுத்தத்தையும் தரும் வல்லமை இவற்றிற்கு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இன்றைய சூழலில் எதை சாப்பிடுகின்றோம் என்பதை கூட நாம் கவனிக்க தவறி விடுகின்றோம். குறிப்பாக உணவு விஷயத்தில் இந்த நிலை அதிகம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை என்பதை அறிந்து நாம் அவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையேல் முழு ஆபத்தும் நமக்கு தான்.

கெட்ட கொழுப்புகள்

கெட்ட கொழுப்புகள்

தசை ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல கொழுப்பு சீரான அளவில் இருக்க வேண்டும் தான். ஆனால், அதற்காக கெட்ட கொழுப்புகளையும் நாம் சேர்த்து கொள்ள கூடாது. அந்த வகையில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்த உணவுகள் தசையின் பாதிப்பை கூட்டி தசைக்கு வலியை உண்டாக்கும்.

கார்ப்ஸ்

கார்ப்ஸ்

பொதுவாகவே கார்போஹைடிரேட் அதிகம் கொண்ட உணவுகள் நமது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். அளவுக்கு அதிகமான கார்ப்ஸ் செரிமான மண்டலத்தை பாதிப்பதோடு தசையில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே, கார்போஹைடிரேட் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

MOST READ: உங்கள் காதலர் (அ) காதலி ஒரு சைக்கோ' என்பதை கண்டுபிடிக்க இதோ 8 வழிகள்!

சோயா

சோயா

சோயாவில் அதிக புரதசத்து உள்ளது தான். என்றாலும் இவற்றில் க்ளுட்டன் அதிகம் காணப்படுகின்றன. ஆதலால், இவை மோசமான பாதிப்பை உடலில் ஏற்படுத்தும். தசை சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக இவை உள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானிய வகைகள் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த தசை சார்ந்த பாதிப்பும். இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து வீக்கம், வலி போன்றவற்றை தசைகளில் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: foods body உணவு உடல்
English summary

Foods That Are Bad For Fibromyalgia

Foods That Are Bad For Fibromyalgia
Desktop Bottom Promotion