Just In
- 39 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?
உணவு பழக்கவழக்கங்களை பொறுத்தவரை இந்தியா எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்த நாடாகும். இந்திய உணவுகளின் சுவைக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் இந்திய உணவுகள் சமைக்கும் முறையும், அதில் சேர்க்கப்படும் பொருட்களும், அதன் சுவையும் மற்ற நாடுகளின் உணவுகளில் இருந்து வித்தியாசமானதாய் இருக்கிறது.
சாப்பாட்டிற்கு குழம்பு ஊற்றி சாப்பிடுவது என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுமுறையாகும். அரிசி உணவையும், இந்தியாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. இந்திய உணவுகளில் பல பருப்புகள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவையும், பலனும் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாசி பருப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பாசிப்பயிறு மற்றும் சாப்பாடு
அரிசி சாதமும், பாசிப்பயிறும் சரியான மற்றும் சுவையான உணவுகளாகும். இது இந்திய முழுவதும் பரவலான உணவுப்பொருளாக இருந்தாலும் தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு பொருளையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த உணவில் குறைவான கொழுப்பு இருப்பதுடன் அதிகளவு நார்ச்சத்துக்களும் உள்ளது.

அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
இந்தியாவில் பொதுவாக அரிசி பழுப்பு நிற அரிசி மற்றும் வெள்ளை நிற அரிசி என இரண்டு வடிவத்தில் கிடைக்கிறது. ஒரு கப் சமைக்கப்பட்ட பழுப்பு அரிசியில் 218 கலோரிகள் இருக்கிறது, அதேபோல வெள்ளை அரிசியில் 242 கலோரிகள் இருக்கிறது. மேலும் 2.1 கிராம் புரோட்டின், 77.1 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 0.6 கிராம் கொழுப்பு மற்றும் 2.2 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.

மஞ்சள் பாசி பருப்பின் ஊட்டச்சத்துக்கள்
ஒரு கப் சமைக்கப்பட்ட பாசி பருப்பில் 147 கலோரிகள் இருக்கிறது. 1.2 கிராம் கொழுப்பு, 28மிகி சோடியம், 12 கிராம் நார்ச்சத்துக்கள், 3 கிராம் சர்க்கரை மற்றும் 25 கிராம் புரோட்டின் உள்ளது. அதிக புரோட்டின்களை கொண்ட இதில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவே இருக்கிறது.

வலுவான தசைகள்
பாசி பருப்பில் அமினோ அமிலங்கள் இருக்கிறது, அரிசியில் சல்பர் அடிப்படையிலான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இந்த இரண்டும் நமது உடலுக்கு தேவையான புரோட்டின்களை வழங்க அவசியமானது. அரிசி சாதத்துடன் பாசி பருப்பை சேர்த்து சாப்பிடும் போது அது நமது தசைகளை வலுப்படுத்த அதிகம் உதவுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்
பாசி பருப்பில் அதிகளவு வைரஸ் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பொருள்கள் உள்ளது. இது ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். அரிசியில் ஸ்டார்ச் என்னும் நார்ச்சத்து உள்ளது, இது நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர செய்கிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

முடி மற்றும் சரும பலன்கள்
பாசி பருப்பில் அதிகளவு புரோட்டின் உள்ளது, அதேபோல அரிசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் உடலை தூய்மைப்படுத்துகிறது. இது முடிவளர்ச்சியையும், சரும பொலிவையும் ஊக்குவிக்கிறது. இது இரண்டையும் சாப்பிட சரியான நேரம் மதியம்தான் ஏனெனில் இந்த நேரத்தில் இது எளிதில் செரிமானம் அடைந்துவிடும்.

அனீமியாவை தடுக்கும்
சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகுவதற்கு தேவைப்படும் இரும்புச்சத்துக்கள் பாசி பருப்பில் அதிகம் உள்ளது. எனவே பாசி பருப்பு சாப்பிடுவது இரும்புசத்து குறைபாடு ஏற்படுவதை தடுப்பதுடன் அனீமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்
பாசி பருப்பு தயாரிக்கப்படும் போது அதில் சேர்க்கப்படும் மஞ்சள், சீரகம் மற்றும் மல்லி தூள் போன்றவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். அதேசமயம் அரிசியில் இருக்கும் தையாமின் போன்ற பொருட்களும் நமது வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக்கூடும்.