For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி கரும்புள்ளி வந்த வாழைப்பழத்த சாப்பிடலாமா? சாப்பிட்டா உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா?

பொதுவாக மற்ற எல்லா பழங்களிலும் காயாக இருக்கும்போது இருக்கிற பச்சைத் தன்மை மாறி பழுக்க பழுக்க அவற்றின் நிறம் அடர்த்தியாகவும் திக்காகவும் மாறும். பின்னர் அழுக ஆரம்பிக்கும். ஆனால் வாழைப்பழத்தில் மட்டும்

|

பொதுவாக பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை என்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதவை என்பது நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக வாழைப்பழத்தில் மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக அளவில் வைட்டமின் சியும் மற்ற சத்துக்களும் இருக்கின்றன என்று தெரிந்தும் கூட நாம் அதை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

அதற்கு முக்கியமான காரணம் வாழைப்பழம் நமக்கு எளிதாகக் கிடைக்கிறது. எல்லா சீசன்களிலும் கிடைக்கிறது.

குறிப்பாக விலையும் மற்ற எல்லா பழங்களைக் காட்டிலும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பது தான். அதனால் தான் நாம் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனிந்த கரும்புள்ளி வாழை

கனிந்த கரும்புள்ளி வாழை

நன்கு பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு கேடு, கொழகொழ வென்று இருக்கும் அதை சாப்பிட்டால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். உடல் கெட்டுப் போகும் என்று நம்மை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்று ஆய்வுகளும் மருத்துவர்களும் கருதுகின்றனர். இருந்தாலும் பழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா என அறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அது பற்றிய விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

MOST READ: நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

ஜப்பானியர்கள் உணவு

ஜப்பானியர்கள் உணவு

வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதனால் தான் டயட்டில் இருப்பவர்களுடைய முதல் சாய்ஸாக வாழைப்பழம் இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் நன்கு பழுத்த பழம் ஓரளவு பழுத்த பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்ததான இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்சிடண்டுகளும் வைட்டமின் சியும் அதிகமாக இருக்கின்றது.

இதில் அதிக அளவில் பொட்டாசியம், புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை அதிகமாக இந்த கரும்புள்ளிகள் உண்டான வாழைப்பழங்கள் உருவாக்குவதால் ஜப்பானியர்கள் இந்த கனிந்த கரும்புள்ளிகள் கொண்ட பழங்களையே அதிகமாக விரும்பி உண்கிறார்களாம்.

ஏன் கரும்புள்ளி உருவாகிறது?

ஏன் கரும்புள்ளி உருவாகிறது?

பொதுவாக மற்ற எல்லா பழங்களிலும் காயாக இருக்கும்போது இருக்கிற பச்சைத் தன்மை மாறி பழுக்க பழுக்க அவற்றின் நிறம் அடர்த்தியாகவும் திக்காகவும் மாறும். பின்னர் அழுக ஆரம்பிக்கும். ஆனால் வாழைப்பழத்தில் மட்டும் நன்கு பழுக்கப் பழுக்க அதன்மேல் ஏன் கரும்புள்ளிகள் உருவாகின்றன என்று தெரியுமா? அதற்கும் ஒரு காரணம் உண்டு. பெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின் மீது மட்டும் தான் கரும்புள்ளிகளை இருக்கும். ஒருவேளை நன்கு பழுக்காத பழங்களில் அப்படி கரும்புள்ளிகள் உண்டானால் அது வாழைமரத்தில் ஏதேனும் பூச்சித் தாக்குதலாகக் கூட இருக்கலாம்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தில் DNF (டியூமர் நேசிரோசிஸ் ஃபாக்டர்) என்று சொல்லப்படுகின்ற வேதிப்பொருள் உருவாகிறது. அதுதான் இந்த கரும்புள்ளிகளைத் தோற்றுவிக்கிறது.

MOST READ: நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

புற்றுநோய் விரட்டி

புற்றுநோய் விரட்டி

வாழைப்பழத்தை மலிவான பழம் என்று நினைத்து பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒன்று தெரியுமா? அதை அலட்சியப்படுத்தாமல் நன்கு கனிந்து கொழகொழவென இருக்கும் பழத்தைச் சாப்பிட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய தேவையிருக்கிற புற்றுநோய் உங்களை நெருங்கவே செய்யாதாம். ஆம். இது அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றல் கொண்டது. அதனால் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தை புற்றுநோய் விரட்டி என்று கூட சொல்லலாம்.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

நம்முடைய உடலுக்கு ஆற்றல் தரக்கூடியவற்றில் மிக முக்கியமானவை வைட்டமின்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்த வைட்டமின்கள் பொதுவாக பல வகையுண்டு என்பதும் நாம் நன்கு அறிந்தது தான். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் இந்த பி6. ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகின்ற வைட்டமின் பி6 சத்தில் கிட்டதட்ட 42 சதவீதத்தை இந்த ஒரேயொரு கனிந்த கருத்த வாழைப்பழத்தால் கொடுக்க முடியும் என்றால், சாப்பிடுவதில் நமக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது. ஆம். ஒரு கப் கனிந்த பழத்தில் சுமார் 0.57 மில்லிகிராம் அளவுக்கு வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.

மன அழுத்தமும் இதய நோயும்

மன அழுத்தமும் இதய நோயும்

தொடர்ந்து நம்முடைய உணவில் நன்கு பழுத்த கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் என்ன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை தீருவதோடு, மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைப் பாதியாகக் குறைப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொட்டாசியம்

பொட்டாசியம்

நன்கு பழுத்த கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தில் நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பொதுவாக நம்முடைய வாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துவதற்கு பொட்டாசியம் அதிக அளவில் தேவைப்படும். அப்படி ஒரு நாளைக்குத் தேவைப்படுகி்னற பொட்டாசியத்தில் 11 சதவீதம் அளவுக்கு ஒரே ஒரு நன்கு கனித்த கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தில் இருந்து பெற முடியும். அதனால் தினமும் ஒன்றோ இரண்டோ சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலின் பொட்டாசியம் அளவை நம்மால் நிறைவு செய்து கொள்ள முடியும்.

MOST READ: வீட்ல மூட்டைப்பூச்சி தொல்லையா?... இத செஞ்சா போதும் மொத்தமா காலி பண்ணிடலாம்...

தினமும் ஒன்று

தினமும் ஒன்று

தினமும் நன்கு பழுத்த கரும்புள்ளிகள் தோன்றிய ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

can we eat black spot riped banana?

An overripe black spot banana is rich in antioxidants, which, according to livestrong.com, is beneficial in preventing or delaying cell damage in one's body. This, in turn, lowers the risk of diseases. It also improves our immune system.
Story first published: Wednesday, January 23, 2019, 15:11 [IST]
Desktop Bottom Promotion