For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? எவ்வளவு நேரம் வைக்கலாம்? அந்த பால் குடிச்சா என்னாகும்?

பாலை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா என்பது பற்றிய முக்கியமான கேள்வியைப் பற்றித் தான் இங்கே விவாதிக்கிறோம். அது பற்றி தெரிந்து கொள்வோம். அது பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் பார்க்கலாம்.

|

பொதுவாக நமக்கு சில கேள்விகள் எப்போதும் மனதில் முளைத்துக் கொண்டே இருக்கும். அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கவே கிடைக்காது. சிலர் அந்த கேள்விக்கு "சரி" என்று பதில் கூறுவார்கள், சிலர் "இல்லை" என்று பதில் கூறுவார்கள்.

freeze Milk

ஆக மொத்தம் நமக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சும். அந்த மாதிரி ஒரு கேள்வி தான் பாலை பிரீசரில் வைக்கலாமா? கூடாதா? இப்போது நாங்கள் அதற்கானா ஒரு ஸ்திரமான பதிலை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். இனி நீங்கள் இந்த கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலை பிரீசரில் வைக்கலாமா?

பாலை பிரீசரில் வைக்கலாமா?

ஆம், பாலை பிரீசரில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதில் குறிபிட்டுள்ள காலாவதி தேதி வரும்வரை பாலை தைரியமாக பிரீசரில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சில குறிப்புகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். அவற்றையும் பின்பற்றுவது நல்லது.

பொதுவாக பாலை உறைய வைக்கும்போது விரிவடையும் தன்மை அதற்கு உண்டு. அதனால் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கும்போது அந்த பாட்டில் முழுவதும் ஊற்றாமல் பாட்டிலில் முக்கால் பகுதி ஊற்றி உறைய வைக்கலாம். இதனால் பாட்டில் வெடிக்காமல் இருக்கும்.

MOST READ: வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா? இத சாப்பிடுங்க போதும்...

உறைய வைத்த பால்

உறைய வைத்த பால்

உறைய வைத்த பாலை பயன்படுத்துவதற்கு முன்னர், தண்ணீரில் சிறிது நேரம் எடுத்து வைத்து விட்டு பின்பு பயன்படுத்தலாம் அல்லது பிரீசரில் இருந்து பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பயன்படுத்தலாம். இதனால் அதனை உட்கொள்வதற்கு பாதுகாப்பாக இருக்கும். நீண்ட நேரம் வெளியில் எடுத்து வைப்பதால் அதன் வாசனை மற்றும் தோற்றம் கெட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்தவும்.

நீங்கள் வாங்கி சேமித்து வைத்திருந்த பால், காலாவதி தேதியை அடைவதற்கு முன்னர், அதனை பல்வேறு வழிகளில் உங்கள் உணவில் பயன்படுத்த திட்டமிட்டு அதன் ஊட்டச்சத்துகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பால் சேர்த்துக் கொள்ளுங்கள்:

பால் சேர்த்துக் கொள்ளுங்கள்:

பால் தனது காலாவதி தேதியை நெருங்கிவிட்டால், அந்தப் பாலைப் பயன்படுத்தி உங்கள் சமையலை முடித்துக் கொள்ளுங்கள். அதற்கான சில குறிப்புகள் இதோ..

நீங்கள் தயாரிக்கும் சூப்பில் தண்ணீருக்கு மாற்றாக பால் சேர்ப்பதால் சூப்பின் அடர்த்தி அதிகரித்து, இன்னும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற்றுத் தரும்.

நீங்கள் காலை உணவாக தயாரிக்கும் ஒட்சில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து கொதிக்க வைக்கலாம். இதனால் புரதம், கால்சியம் மற்றும் வைடமின் டி சத்து கிடைக்கும்.

ரைஸ் புட்டிங்

ரைஸ் புட்டிங்

அரிசி புட்டிங் போன்ற பால் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தயாரிக்கலாம். அதனைத் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

முக்கால் கப் அரிசியுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் 5 முதல் 6 கப் பால், ஒரு கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் வெண்ணிலா பீன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து அடுப்பில் சிம்மில் வைத்துக் கிளறவும்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு கப் பால் சேர்க்கவும். அந்த பால் முழுவதும் உறிஞ்சப்பட்டவுடன், நீங்கள் பரிமாறத் தொடங்கலாம். கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் புட்டிங் மிக்ஸ் வாங்கி செய்யும்போது அது இன்னும் சுலபமாக தயாரிக்க முடியும். அதற்கு 2 முதல் 4 கப் பால் மட்டுமே போதுமானது.

MOST READ: உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது? எப்படி நீங்களே சரிசெஞ்சிக்கலாம்?

அடிக்கடி பால் மிச்சப்பட்டு போகிறதா?

அடிக்கடி பால் மிச்சப்பட்டு போகிறதா?

நீங்கள் வாங்கும் பாலின் அளவைக் குறைத்துப் பாருங்கள். அல்லது தேக்க ஆயுள் (shelf life) ஸ்திரமாக இருக்கும் பால் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் போன்றவற்றில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கும் பால் பொருட்கள் அதிகரித்த தேக்க ஆயுள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எனவே அவற்றை ஒருமுறை திறக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can I freeze Milk?

If milk is near or just past its sell-by date, plan a few meals to use up your milk in cooking. Replace water with milk in soups for a creamier and more nutritious meal. Cook your morning oatmeal in milk instead of water for more protein, calcium + vitamin D.
Desktop Bottom Promotion