For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழத்த பார்த்திருக்கீங்களா? இனிமே பார்த்தா மிஸ் பண்ணாம சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

|

குறுந்தக்காளி என்ற பழத்தைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது மிகவும் ருசியான தக்காளி வகையைச் சேர்ந்த ஒரு பழம். பல வகை வைட்டமின்கள் மற்றும் இதர பல நன்மைகள் அடங்கிய இந்தப் பழத்தைப் பற்றி இதுவரை நீங்கள் அறியவில்லை என்றால், இந்த பதிவைத் தொடர்ந்து படித்து அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறுந்தக்காளி என்றால் என்ன?

குறுந்தக்காளி என்றால் என்ன?

Image Courtesy

குறுந்தக்காளி தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. இதனை "மரத்தக்காளி" என்றும் அழைப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த பழம் பல்வேறு நாடுகளில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. குறுந்தக்காளி உற்பத்தி செய்யும் நாடுகளில் மிகவும் முக்கியமான ஒரு நாடு நியூசிலாந்து. இதன் தனித்துவத்தை அறிந்து கொள்ளவும், வழக்கமான தக்காளியிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவும் இதன் பெயர் இவ்வாறு விளங்குகிறது. இப்போது நாம் குறுந்தக்காளியின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

MOST READ: அடுத்த மாச புதன்பெயர்ச்சியால இந்த 6 ராசிக்காரங்களுக்கு பெரிய அடி இருக்குமாம்... பரிகாரம் இருக்கா?

வைட்டமின்

வைட்டமின்

வைட்டமின் ஏ, சி, ஈ, மற்றும் ப்ரோ-வைட்டமின் ஏ ஆகியவை அடங்கியது இந்த குறுந்தக்காளி. பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான நியாசின், தைமின், ரிபோப்லவின் ஆகியவற்றின் ஆதாரமாக விளங்குவது இந்த பழம். கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற இதர ஊட்டச்சத்துகள் கூட இந்தப் பழத்தில் உள்ளது. பாஸ்போரஸ் , மாங்கனீஸ், தாமிரம், ஜின்க், இரும்பு ஆகிய கனிமங்களும் இதில் உள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த இதில் பல ஊட்டச்சத்துகள் செறிவூட்டப்படுகின்றன.

எடை குறைப்பு

எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க விரும்பும் மனிதர்களுக்கு இந்த பழம் சிறந்த தீர்வைத் தருகிறது. பச்சையாக உட்கொள்வதாலும், சால்ட் போன்றவற்றில் இதனை பயன்படுத்துவதாலும், இந்த பழத்தைக் கொண்டு பழச்சாறு தயாரித்து உட்கொள்வதாலும், ஒரு சிறப்பான முறையில் உடலில் உள்ள நச்சுகள் நீக்கும் வகையில் செயல்பட்டு உடலுக்கு நன்மை அளிக்கிறது. இந்த பழத்தின் அமிலத்தன்மை கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதுடன், கூடுதலாக உடற்பயிற்சி செய்வதால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது.

சருமத்திற்கு ஏற்றது

சருமத்திற்கு ஏற்றது

குறுந்தக்காளி வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகிய வைடமின்களைக் கொண்டிருப்பதால் இதனை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் விளங்குகிறது. அந்தோசைனின், பீனால், ப்லவனைடு ஆகியவை சருமத்தை விஷத்தன்மை அழுத்தம் மற்றும் மாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. வயது அதிகரிப்பதற்கான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. வழக்கமான தக்காளியைப் போல், பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.

நீரிழிவு பிரச்னை

நீரிழிவு பிரச்னை

குறுந்தக்காளியில் உள்ள க்லோரோஜெனிக் அமிலம், டைப் 2 நீரிழிவு பாதிப்பால் உண்டாகும் உயர் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. குறுந்தக்காளியில் அருமையான அன்டி ஆக்சிடென்ட் உள்ளதால், விஷத்தன்மை அழுத்தத்தைக் குறைத்து கணையம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை சிறப்பாக செயல் புரிய வைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் குறுந்தக்காளி விழுதை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

தொண்டை அழற்சி

தொண்டை அழற்சி

தென் அமெரிக்காவில் வசிக்கும் மக்கள், தொண்டை அழற்சியைப் போக்க , குறுந்தக்காளி இலைகளை சூடுபடுத்தி, தங்கள் கழுத்தை சுற்றி கொள்வார்கள். இந்த இலைகளில் உள்ள சூடு தொண்டைக்குள் பரவி, வலியைக் குறைக்க உதவுகிறது. கொலம்பியர்கள் இந்த பழத்தைக் கொண்டு ஒரு மாவு தயாரித்து உடலில் வெளிப்புறத்தில் தடவுவதற்கான மருந்தை தயாரிக்கின்றனர்.

MOST READ: இப்படியொரு #10yearchallenge இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா? உள்ள நிறைய இருக்கு பாருங்க

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உங்கள் உடலின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க குறுந்தக்காளியை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழத்தில் அதிக அளவு கனிமம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கிறது.

இதயம்

இதயம்

குறுந்தக்காளியில் உள்ள மிக அதிக அளவு பொட்டாசியம், இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சோடியம் அளவை சமன் செய்ய உதவுகிறது. இது இதய அமைப்பு முறையின் சிறந்த செயல்பாட்டிற்கு மெக்னீசியம் என்னும் கனிமத்தை அளிக்கிறது. மேலும் உடலில் உள்ள அதிக கெட்ட கொழுப்பு, உறிஞ்சப்படுவதைத் தவிர்க்க , இந்த பழத்தில் உள்ள உயர் நார்ச்சத்து உதவுகிறது. வாதத்தை உண்டாகும் விஷத்தன்மை அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் குறுந்தக்காளியில் அதிகம் உள்ளது.

கண்பார்வை

கண்பார்வை

ஆரோக்கியமான கண்பார்வையை நிர்வகிக்க, குறுந்தக்காளி சிறந்த முறையில் உதவுகிறது. வைட்டமின் ஏ கண்களின் சவ்வுகளின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது, அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு ஒரு தடையாக செயல்படுகின்றன. தொற்று பாதிப்பில் இருந்து கண்களைக் காக்கிறது, மேலும் கண்களில் உண்டாகும் சேதங்களைக் குறைக்க உதவுகிறது,

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோய் உண்டாக்கும் ப்ரீ ரேடிகல்களுடன் போராடக் கூடிய தன்மை அடர் நிறம் கொண்ட குறுந்தக்காளியில் உள்ள அந்தோசைனின் என்ற திறன் வாய்ந்த அன்டி ஆக்சிடென்ட்களில் உள்ளது. மேலும் இந்த தக்காளியில் நுண்ணுயிர்க் கொல்லி பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு ஆகியவை இருப்பதால், புற்றுநோயை எதிர்க்க பெரிதும் உதவுகின்றது.

குறுந்தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? இப்போது இதனை வைத்து என்ன சமைக்கலாம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

குறுந்தக்காளி தானிய சாலட்

குறுந்தக்காளி தானிய சாலட்

Image Courtesy

தேவையான பொருட்கள்

குறுந்தக்காளி - 2 அல்லது 3

கலவை தானியம் (தேவைக்கேற்ப) - 250 கிராம்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 சிறியது

சீரகம் - 1/4 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 1/2 ஸ்பூன்

மேலே அலங்கரிக்க தேவையான பொருட்களை உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

MOST READ: திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து கேட்ட பெண்... காரணத்த கேட்டா வயிறுவலிக்க சிரிப்பீங்க...

செய்முறை

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்தவுடன் சீரகம் போட்டு பொரிக்கவும், பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 அல்லது 3 நிமிடங்கள் வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன், கலவையாக உள்ள தானியங்களை அதில் போடவும். அடுப்பை உயர் தீயில் வைக்கவும். சற்று நேரம் இந்த கலவை வதங்கியவுடன், அடுப்பை சிம்மில் வைக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி வைக்கவும். ஒரு நிமிடம் நன்றாக வெந்தவுடன், குறுந்தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். உங்கள் விருப்பம் போல், இந்த கலவை மேல் அலங்கரிக்க கொத்துமல்லி அல்லது வேறு எதாவது தூவி இறக்கவும்.

குறுந்தக்காளி ரெசிபி மற்றும் இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Amazing Health Benefits Of Tamarillo

Tamarillo is aboriginal to South America. Tamarillo, also known as “Tree Tomato”, is now cultivated in many parts of the world. One of the largest producers of tamarillo is New Zealand. The name was revised to differentiate it from the ordinary tomatoes, thus emphasising on its exotic variety.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more