கல்லீரலில் எவ்வித தொற்றுகளும் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய அற்புத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

மனித உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். ஆரோக்கியமான கல்லீரல் செரிமானம் சீராக நடைபெற, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள என பல முக்கிய பணிகளைச் செய்கிறது. அதோடு கல்லீரல் புரோட்டீன் உற்பத்தி மற்றும் பித்தப்பையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை சேமிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த சக்தி வாய்ந்த உறுப்பு, டாக்ஸின்களான ஆல்கஹால் மற்றும் மருந்துகளை உடைத்தெறிய உதவி, கல்லீரலை நல்ல வடிவமைப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

Superfoods For Liver Infection

ஒருவரது உடலில் கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், இது சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, ஆட்டோஇம்யூன் நோய்கள் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற கல்லீரல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, மன இறுக்கம், தலைவலி மற்றும் ஏற்றஇறக்க மனநிலையை உண்டாக்கும். எனவே ஒவ்வொருவரும் கல்லீரலை ஆரோக்கியமாக, நோய்த்தொற்றுகள் ஏதும் தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதற்கு உணவுகள் தான் ஒரே வழி. அதுவும் பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், மீன் போன்றவை கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு கல்லீரலில் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இக்கட்டுரையில் கல்லீரல் தொற்றுக்களைத் தடுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறுக்குவெட்டுக் காய்கறிகள்

குறுக்குவெட்டுக் காய்கறிகள்

குறுக்குவெட்டுக் காய்றிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்றவற்றில் அத்தியாவசிய பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான ப்ளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்களாகும். மேலும் இந்த காய்கறிகளுக்கு வயிற்றில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களின் உருவாக்கத்தைத் தடுக்கும் திறன் உள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

முட்டைக்கோஸ், பிரஸ்ஸல் முளைகளில் சல்பர் அதிகளவில் உள்ளது. இவை கல்லீரலை சுத்தம் செய்யவும், ப்ரீ-ராடிக்கல்களை நீக்கவும் மற்றும் இதர டாக்ஸிக் கெமிக்கல்களை அகற்றவும் உதவும். அடர் பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து பித்த நீரை வெளியிட தூண்டிவிட்டு, செரிமானம் சீராக நடைபெறவும், கொழுப்புக்களை உறிஞ்சவும் செய்யும். ஆகவே இந்த காய்கறிகளை உணவில் அடிக்கடி தவறாமல் சேர்த்து வாருங்கள்.

முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்

முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்

முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்களில் உடலில் ஆற்றலை பற்ற வைக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிகள், ஒரு வினையூக்கிகளாக செயல்பட்டு உடலின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். எனவே அடிக்கடி முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுங்கள். இதனால் கல்லீரல் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டுகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், கல்லீரலில் உள்ள குறிப்பிட்ட சில மோசமான கெமிக்கல் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உறுதுணையாக இருக்கும். இதற்கு தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம் அல்லது அன்றாட சமையலில் பூண்டை சேர்த்தும் வரலாம்.

திராட்சை

திராட்சை

சிவப்பு திராட்சை கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள தாவர வகை சத்துக்கள், கல்லீரலில் அழற்சி ஏற்படுவதைக் குறைத்து, கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும். இதற்கு திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம். ஆகவே உங்கள் கல்லீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நினைத்தால், திராட்சையை அடிக்கடி சாப்பிடுங்கள்.

காபி

காபி

காபி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று தெரியுமா? ஆய்வுகளில், காபி குடிப்பதால், அது கல்லீரலைப் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து, கல்லீரல் பாதிப்பு மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். என்ன நண்பர்களே! இனிமேல் தினமும் தவறாமல் ஒரு கப் காபியை குடிப்பீர்கள் தானே!

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அந்தோசையனின்கள், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். பெர்ரிப் பழ ஜூஸ்களை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அது கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதோடு, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே கல்லீரல் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, வாரத்திற்கு 3 முறை பெர்ரிப் பழங்களைத் தவறாமல் சாப்பிடுங்கள்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நைட்ரேட்டுகள், கல்லீரலில் பாதிப்பு மற்றும் அழற்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். அதுவும் பீட்ருட் கல்லீரலில் உள்ள நொதிகளை சுத்தம் செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் வடிவிலோ அல்லது பொரியலாகலோ சாப்பிடலாம்.

மீன்கள்

மீன்கள்

கானாங்கெளுத்தி, சால்மன் போன்றவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கல்லீரலில் அழற்சி ஏற்படுவதைக் குறைக்கும். இந்த மீன்கள் கல்லீரலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, கல்லீரலில் நொதிகளின் அளவை சரியான அளவில் பராமரிப்பதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு மீன் பிடிக்குமானால், இந்த மீன்களைத் தேர்ந்தெடுத்து அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் கல்லீரலுக்கு மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடித்து வந்தால், கல்லீரல் நொதிகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்பட்டு, கல்லீரலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். ஒருவேளை ஆலிவ் ஆயிலை குடிக்க பிடிக்காதவர்கள், அதனை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-வைரல் பண்புகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த அற்புதமான பொருள் கல்லீரலை சுத்தம் செய்து, கல்லீரலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இவ்வளவு முக்கிய நன்மைகளை வழங்கும் இஞ்சியை இனிமேலாவது அனைத்து உணவிலும் சேர்க்க மறக்காதீர்கள்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற கல்லீரலை சுத்தமாக்கும் செயல்முறைக்குத் தேவையான பொருட்கள் உள்ளன. முக்கியமாக முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலின் என்னும் நொதிப்பொருள், கல்லீரலைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே முட்டை சாப்பிட்டால், அதன் மஞ்சள் கருவைத் தவறாமல் சாப்பிடுங்கள்.

கேரட்

கேரட்

கேரட்டில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்து உள்ளது. எலி மற்றும் கேரட்டைக் கொண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 வாரங்களுக்கு எலிகளுக்கு கேரட் ஜூஸ் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் அந்த எலிகளின் கல்லீரலில் DHA, ட்ரைகிளிசரைடு மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே கேரட்டை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். அதற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடிக்கலாம் அல்லது வாரத்திற்கு 2-3 முறை கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவுவது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே உங்கள் கல்லீரலில் தொற்றுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எலுமிச்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள். ஏனெனில் ஆப்பிள், சீரம் மற்றும் கல்லீரல் கொழுப்பு அளவுகளைக் குறைக்கும். மேலும் ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள் அழற்சி சமிஞ்கையை குறைப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக சீன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டால், பல்வேறு கல்லீரல் நோய்களில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Superfoods For Liver Infection

It is very important to keep your liver healthy to prevent liver infection and other liver-related diseases. Know about the best foods for liver infection.