For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய். பச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது, மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

|

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய். தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

how green chilli helps to cure cancer

பச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது, மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சைமிளகாய் சேர்த்துக்கொள்வது 50 சதவீதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பச்சை மிளகாயின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

பச்சை மிளகாய் கார்டியோவாஸ்குலர் அமைப்பில் பல பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் தமனிகளில் ஏற்படும் பிரச்சினையை குறைக்கிறது. இரத்தத்தில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகிறது.

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் பச்சைமிளகாயின் சுவையை அதிகரிப்பதோடு உடலின் வெப்பநிலையை குறைக்கிறது. மேலும் மூளையின் ஹைபோதலாமசை குளிரூட்டுகிறது. அதனால்தான் பச்சைமிளகாய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று இந்தியாவில் கூறப்படுகிறது.

சளி

சளி

பச்சைமிளகாயில் உள்ள கேப்சைசின் மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள சவ்வுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கேப்சைசின் சளி ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது சளி மற்றும் இருமலுக்கு எதிராக போராட தேவையான ஆற்றலை வழங்குகிறது.

வலி நிவாரணி

வலி நிவாரணி

மிளகாயிலிருந்து வெளிப்படும் வெப்பமானது சிறந்த வலி நிவாரணியாக செயல்படக்கூடியது மற்றும் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றுப்புண்கள் இருப்பவர்கள் மட்டும் பச்சைமிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

MOST READ:மரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அர்ஜுனன்

வைட்டமின் சி

வைட்டமின் சி

பச்சை மிளகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. பச்சை மிளகாய் கண்களின் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும். பச்சை மிளகாயை மூடிய இருள் சூழ்ந்த இடத்தில வைக்கவும். இல்லையெனில் பச்சை மிளகாய் அதிலுள்ள வைட்டமின் சி-யை இழக்க நேரிடும்.

மனநிலை

மனநிலை

பச்சை மிளகாய் மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிகம் உள்ளது. பச்சை மிளகாய் சாப்பிடும்போது அது வெளியிடும் எண்டோர்பின் உங்கள் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடும். மேலும் வலியை குறைக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலை செய்யக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்வது அவசியம்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

பச்சை மிளகாயில் அதிக அளவு ஆன்டிபாக்டீரிய பண்புகள் உள்ளது. இது உங்கள் சருமத்தை பாதுகாப்பதுடன் சருமத்தில் ஏற்படும் தொற்றுநோய்களையும் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புசத்து உடலை வலிமையாக்குகிறது.

MOST READ: 'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும்? நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்!

புற்றுநோய்

புற்றுநோய்

பச்சை மிளகாய் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. பச்சைமிளகாயை ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது நமது உடலை தீங்கு ஏற்படுத்தும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது. மேலும் புரோஸ்ட்ரேட் பிரச்சினைகளை விலக்கி வைக்கிறது. தினமும் குறைந்தது 4 மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how green chilli helps to cure cancer

Green Chillies are a popular condiment on Indian thalis. But this little wonder is packed with a host of benefits. Check out the health benefits of green chillies.
Story first published: Saturday, October 13, 2018, 18:20 [IST]
Desktop Bottom Promotion