For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...! இல்லைனா அவ்வளவுதான்..!

|

"சுத்தம் சோறு போடு" என்கிற பேச்சு வழக்கை நாம் அனைவரும் நன்கு அறிந்திருப்போம். சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், மிகவும் சுத்தமாக எந்நேரமும் கையை கழுவி கொண்டே இருத்தல் என்பது அர்த்தம் இல்லை. நாம் நமது உடலையும், சுற்றுப்புறத்தையும் நோய் கிருமிகள் அண்டாத வகையில் வைத்து கொண்டாலே போதும்.

இந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்..! இல்லைனா அவ்வளவுதான்..!

அந்த வகையில் நாம் சமையலுக்கு பயன்படுத்துகின்ற ஒரு சில முக்கியமான உணவு பொருட்களை கழுவி தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவை நமது உடலுக்கு பல்வேறு விளைவை தரும் என ஆய்வுகள் சொல்கிறது. அவை என்னென்ன உணவுகள் என்பதை இனி நாம் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தமாக இருக்கலாமா..?

சுத்தமாக இருக்கலாமா..?

நாம் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கின்றோம் என்பதை வைத்தே நமது ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும். அதே போன்று வெளியில் எங்கேயாவது சாப்பிட போனாலும் அந்த சூழலும் உணவும் சுத்தமாக உள்ளதா..? என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் உள்ள உட்பகுதியை தான் நாம் சாப்பிடுவோம் என்றாலும், அதன் மேல் பகுதியில் இருந்து தான் நாம் கட் செய்வோம். எனவே, அதில் இருக்கும் சால்மோனெல்லா மற்றும் லிஸ்டேரியா போன்ற நோய் கிருமிகள் உள்ளே இருக்கும் பழத்திலும் வந்து ஒட்டி கொள்ளும். எனவே, தர்பூசணியை கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

சமையலுக்கு நாம் பயன்படுத்துகின்ற முழு தானியங்களை கட்டாயம் கழுவிய பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றில் ஒட்டி கொண்டுள்ள பல வகையான நுண் கிருமிகள் நமது உடலுக்குள் நேரடியாக சென்று நோய்களை தரும். எனவே அரிசி, கோதுமை, பார்லி போன்றவரை கழுவிய பின்னரே பயன்படுத்தவும்.

பீன்ஸ்கள்

பீன்ஸ்கள்

இப்போதெல்லாம், எல்லா வகையான உணவு பொருளும் கேனில் அடைக்கப்பட்டே வருகிறது. இதில் இருக்கும் உணவு பொருளை அப்படியே எடுத்து சாப்பிட்டு விட கூடாது. மாறாக இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் சில வகையான வேதி பொருட்களை நீக்கி விட்டே பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் நீரை கொண்டு கழுவி விட்டு சமைக்கலாம்.

MOST READ: உங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா..? அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..

அவகேடோ

அவகேடோ

மற்ற பழ வகைகளை காட்டிலும் இந்த பழ வகையை நிச்சயம் நாம் கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில், இவற்றின் தோளில் ஏராளமான அளவில் பூச்சு கொல்லிகள், மற்றும் வேதி பொருட்களை பயன்படுத்துவர். எனவே, அவகடோ பழத்தை கழுவிய பின்பே சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம்.

காளான்

காளான்

பொதுவாகவே காளானில் ஏராளமான வகைகள் உள்ளன. நாம் சாப்பிட கூடிய காளானை நீரில் ஊற வைத்து கழுவிய பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இதில் உள்ள தூசுகள் மற்றும் நுண் கிருமிகள் நமது உடலில் சென்று நோய்களை உருவாக்கும்.

சிப்பி

சிப்பி

சிப்பியை பலரும் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவர். ஆனால், இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக நன்றாக கழுவிய பின்னர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், கடலில் உள்ள கழிவுகள், பாக்டீரியாக்கள் இதனை மீது ஒட்டி கொண்டிருக்கும். ஆதலால், இந்த சிப்பியை கழுவிய பிறகு சமையலுக்கு பயன்படுத்தலாம்

கீரை வகைகள்

கீரை வகைகள்

பெரும்பாலான கீரை வகைகளை நாம் நன்கு சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும். ஏனென்றால், இதில் அதிகமான அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, கீரை வகைகளை கழுவிய பின்னர் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.

MOST READ: இவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..!

காய்கனிகள்

காய்கனிகள்

நாம் சாப்பிட கூடிய எந்த ஒரு காய்கனிகள் என்றாலும் அவற்றை அப்படியே சாப்பிடுவது தவறு. முற்றிலுமாக கழுவிய பின்னரே அதனை சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அவற்றின் தோல் மீது ஒட்டி கொண்டிருக்கின்ற பல வகையான நுண் கிருமிகள் நமது உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.

கைகளின் சுத்தம்

கைகளின் சுத்தம்

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கனிகளை சுத்தமாக வைத்தால் மட்டும் போதாது. அதனுடன் சேர்த்து நமது கைகளையும் மிகவும் சுத்தமாக வைத்து கொண்டே சமைக்க வேண்டும். குறிப்பாக 30 வினாடிகள் வெதுவெதுப்பான நீரில் கையை கழுவி விட்டு சமைக்காலம்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Always Wash Before Eating Or Cooking

Fruits & vegetables are vital for health. These antioxidant-rich are as tasty as they are healthy.
Desktop Bottom Promotion