For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க...!

|

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க..!

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், என வரிசை கட்டி கொண்டு உங்களின் உடலில் காத்திருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் சாப்பிட கூடிய உணவுகளே போதும். எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எளிதில் கொலஸ்ட்ராலை கரைக்க முடியும் என்பதை இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலெஸ்ட்ரோல்- பெரிய எதிரி..!

கொலெஸ்ட்ரோல்- பெரிய எதிரி..!

நமது உடலின் எதிரியாக கருதப்படுவதில் இந்த கொலஸ்ட்ராலும் ஒன்று. நாம் தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு கொண்டே போவதால் இவற்றின் அளவு அபரிமிதமாக கூடி விடுகிறது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகினால் உயிருக்கே கூட உலை வைக்க கூடும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் பல வகைகளில் கிடைக்கிறது. எந்த வகையாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. நீங்கள் தினமும் உங்களின் உணவில் பீன்ஸ் சேர்த்து கொண்டால் மிக எளிதில் குடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விடலாம். மேலும், கெட்ட கொலெஸ்ட்ராலை உடலில் சேர விடாமலும் இது தடுக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீ

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள கிரீன் டீயை தினமும் 1 கப் குடித்து வந்தாலே உடலில் கொலெஸ்ட்ரால்கள் சேராது. குறிப்பாக இதய நோய்களை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலுமாக இது கரைத்து விடுகிறதாம்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

பல வகையான நன்மைகள் இந்த டார்க் சாக்லேட்டில் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. தினமும் சிறிது டார்க் சாக்லேட் சாப்பிட்டால் குடலில் அடைந்துள்ள கொலெஸ்ட்ரால்கள் அனைத்துமே கரைந்து போய் விடும். மேலும், ஆரோக்கியமான இதயத்தையும் இது தரும்.

MOST READ: படத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா..?

கிரேப் புரூட்

கிரேப் புரூட்

பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போல இருக்கும் இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக கொலெஸ்ட்ரொலை கட்டுப்படுத்தும் தன்மை இந்த பழத்திற்கு உள்ளது. இதில் உள்ள லிகோபேன் மற்றும் லிமினோய்ட்ஸ் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

அதிக நார்சத்துக்களை கொண்ட உணவில் ஓட்ஸ் முதன்மையான இடத்தில உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள பெரிதும் உதவுகிறது. மேலும், தேவையற்ற கொலஸ்ட்ராலை முற்றிலுமாக கரைக்க இந்த ஓட்ஸை தினமும் காலை உணவாக சாப்பிட்டாலே போதும்.

இந்த எண்ணெய் தான் சரி..!

இந்த எண்ணெய் தான் சரி..!

மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த எண்ணெய்யாக கருதப்படுகிறது. மருத்துவர்களும் நாம் சமையலுக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்றே கூறுகின்றனர். ஏனெனில், இவை உங்களின் கொலஸ்ட்ராலை கூட செய்யாமல் பார்த்து கொள்கிறதாம். மேலும், இதய நோய்களில் இருந்தும் உங்களை காக்கிறது.

அவகேடோ

அவகேடோ

அடி வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைய வைக்க இந்த அவகேடோ பழம் நன்கு உதவுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலுமாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். மேலும், நார்சத்து இதில் அதிகம் உள்ளதால் உடல் எடையையும் கூடாமல் வைக்கும்.

MOST READ: இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..!

நட்ஸ்

நட்ஸ்

பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்ற நட்ஸ்களை தினமும் சிறிது எடுத்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இதய நோய்களில் இருந்து உங்களை காக்கும். மேலும், கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தில் எந்த வித தடையும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும்.

இயற்கையே சிறந்தது..!

இயற்கையே சிறந்தது..!

எந்த வகையான உணவாக இருந்தாலும், அவற்றை இயற்கை ரீதியில் உற்பத்தி செய்ததாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை நமது உடலுக்கு மிக பெரிய ஆபத்தை தரும். எனவே, மேற்சொன்ன உணவுகளை சாப்பிட்டு வளமாக வாழுங்கள் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Help To Cut Your Cholesterol

Foods occupy an important part to reduce our cholesterol
Desktop Bottom Promotion