இந்த உணவுகள் எலும்புகளின் அடர்த்தியைக் குறைக்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது ஏராளமானோர் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, இதன் விளைவாக மூட்டு இணைப்பு பிரச்சனைகளால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். நாம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் தான் முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

Best Foods for Your Bones And The Worst

வெறும் கால்சியம் மட்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவாது. அத்துடன் மக்னீசியம் மற்றும் வைட்டமின் கே சத்தும் அத்தியாவசியமானது ஆகும். ஒருவரது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் டி சத்தின் உதவி அவசியம். எனவே கால்சியம் உணவுப் பொருட்களுடன், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளுங்கள்.

ஆனால் தற்போது நம்மைச் சுற்றி எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கும் உணவுப் பொருட்கள் சூழ்ந்துள்ளதால், நம்மை அறியாமலேயே அவற்றை சாப்பிடுகிறோம். இதனால் தான் முதுமையில் சந்திக்க வேண்டிய எலும்பு பிரச்சனைகளை 25-30 வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது. உங்களுக்கு எந்த உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், எது எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே போன்ற மூன்று சத்துக்களுமே வளமாக நிறைந்துள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்தையும், அடர்த்தியையும் அதிகரிக்க, இவற்றை அடிக்கடி உணவுகளில் சேர்த்து வாருங்கள். இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.

விதைகள்

விதைகள்

ஆளி விதை, பூசணிக்காய் விதை போன்றவற்றிலும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களான கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே போன்றவை அடங்கியுள்ளது. எனவே உண்ணும் உணவுகளின் மீது ஆளி விதை மற்றும் பூசணிக்காய் விதைகளை தூவி சாப்பிடுங்கள்.

நட்ஸ்

நட்ஸ்

ஒரு கையளவு நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். இந்த நட்ஸ்களில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் வேண்டிய சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக வால்நட்ஸ் மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் வைட்டமின் டி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதோடு கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. ஆகவே வாரம் ஒருமுறை சால்மன் மீனை உணவில் சேர்த்து வருவதன் மூலம், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

பாதாம் வெண்ணெய்

பாதாம் வெண்ணெய்

பாதாமில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த பாதாமை வெண்ணெய் வடிவில் எடுக்கும் போது, ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இந்த வெண்ணெயில் கால்சியம் மட்டுமின்றி, புரோட்டீன் அதிகம் நிறைந்திருப்பதோடு, கொழுப்புக்களின் அளவும் குறைவாக இருக்கும். எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

சீஸ்

சீஸ்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸில், கால்சியம் வளமாக உள்ளது. மேலும் சீஸை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, அந்த உணவுப் பொருள் மிகவும் சுவையானதாக இருக்கும். அதோடு சீஸில் பல வகைகள் உள்ளன. அதில் மொஸாரல்லா சீஸில் தான் மற்ற வகைகளை விட கால்சியம் ஏராளமான அளவில் இருக்கும்.

தயிர்

தயிர்

பால் பொருட்களுள் ஒன்றான தயிரை ஒருவர் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் தயிர் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்பு தேய்மானமடைவதைத் தடுக்கும். ஆகவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தயிரை அன்றாடம் சாப்பிட மறக்க வேண்டாம்.

முட்டை

முட்டை

முட்டையில் கால்சியம், புரோட்டீன் மற்றும் கால்சியத்தை உறிஞ்சத் தேவையான வைட்டமின் டி போன்றவை வளமான அளவில் உள்ளது. முக்கியமாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் டி உள்ளது. எனவே வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடாமல், மஞ்சள் கருவையும் சாப்பிடுங்கள்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கும் உணவுகள்!

எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கும் உணவுகள்!

குளிர் பானங்கள்

குளிர் பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் உள்ளது. இது இரத்தத்தில் அமிலத்தின் அளவை அதிகரித்து, எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி வெளியேற்றி, எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் எளிதில் அவஸ்தைப்படக்கூடும். அதோடு, குளிர்பானங்களை அதிகம் குடித்து வந்தால், பீர் தொப்பை போன்று சோடா தொப்பை வந்துவிடும். எனவே கவனமாக இருங்கள்.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன், கால்சியத்தை உறிஞ்சும் திறனைக் குறைத்து, எலும்புகளை பலவீனமாக்கிவிடும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப்பிற்கு மேல் காபி குடித்தால், எலும்புகள் வலிமையிழந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைத்துவிடும். வேண்டுமானால், உடலின் ஆற்றலை அதிகரிக்க நினைத்தால், காபிக்கு பதிலாக ஆப்பிளை சாப்பிடுங்கள்.

மாட்டின் ஈரல்

மாட்டின் ஈரல்

மாட்டு ஈரலில் ரெட்டினால் என்னும் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக வைட்டமின் ஏ உடலில் சேரும் போது, அது எலும்புகளை பலவீனமாக்கிவிடும். எனவே மாட்டின் ஈரலை அதிகமாக சாப்பிடாதீர்கள்.

சோடியம் நிறைந்த உணவுகள்

சோடியம் நிறைந்த உணவுகள்

சோடியம் அதிகம் நிறைந்த உணவுகள் எலும்புகளை தேய்மானமடையச் செய்யும். உதாரணமாக, ஒருவர் 2,300 மிகி சோடியத்தை எடுத்தால், உடலில் இருந்து சுமார் 40 மிகி கால்சியத்தை இழக்க நேரிடும். ஆகவே சோடியம் அதிகம் நிறைந்த உணவுகளான ஃபாஸ்ட் புட் உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

மது அருந்தும் பழக்கம் உள்ளதா? இப்படி ஆல்கஹாலை ஒருவர் அன்றாடம் சிறிது பருகி வந்தாலும், அதில் உள்ள உட்பொருட்கள் எலும்புகளின் அடர்த்தியைக் குறைப்பதோடு, உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, எலும்பு தேய்மானத்தை ஏற்படுத்தி பலவீனமாக்கிவிடும். எனவே முதலில் ஆல்கஹாலுக்கு குட்-பை சொல்லுங்கள்.

கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு

கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு

கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவற்றை ஒருவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதன் விளைவாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் உடலில் இருந்து வெளியேறும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் கஷ்டப்பட நேரிடும். எனவே அளவாக சாப்பிட்டு, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods for Your Bones And The Worst

What are the best foods for bone health? What are the worst? The answers might surprise you!
Subscribe Newsletter