For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அறிந்திராத முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்

முந்திரி பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. பொதுவாக நிலவும் ஒரு கருத்து முந்திரி சாப்பிடுவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல.

|

இந்தியாவில் இனிப்புகளில் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான பொருள் என்றால் அது முந்திரிதான். முந்திரி பிடிக்காது என்று கூறுபவர்கள் மிக மிக சொற்பமே. இனிப்புகளில் முந்திரியை தேடி தேடி சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். இதற்கு குழதைகளை பெரியவர்கள் என்ற விதிவிலக்கல்ல. இதற்கு காரணம் அதன் சுவைதான்.

benefits of eating cashew nuts

முந்திரி பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. பொதுவாக நிலவும் ஒரு கருத்து முந்திரி சாப்பிடுவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது மட்டுமே இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்போது இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மற்ற பருப்புகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பருப்பில் குறைந்தளவு கொழுப்பே உள்ளது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒலிசிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உங்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான முக்கியமான பொருள் மக்னீசியம். இது முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உங்கள் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

முடி ஆரோக்கியம்

முடி ஆரோக்கியம்

உங்கள் முடியின் நிறத்திற்கு காப்பர் மிகவும் அவசியமான ஒன்று. காப்பர் அதிகளவு உள்ள முந்திரியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது நீங்கள் விரும்பும் அடர்த்தியான கருப்பு நிற முடியை வழங்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

முந்திரியில் மக்னீசியம் உள்ளது. கால்சியம் போலவே மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று அனைவரும் அறிவோம். நமது எலும்புகளில் நிறைய மக்னீசியம் உள்ளது. இதில் உள்ள எலாஸ்டின் எலும்புகளின் அமைப்பிற்கும், வலிமைக்கும் உதவி புரிகிறது.

MOST READ: சிவபெருமான் கழுத்தில் பாம்பு இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன

ஆரோக்கிய நரம்புகள்

ஆரோக்கிய நரம்புகள்

மக்னீசியம் எலும்புகளின் மேற்புறத்தில் சேமிக்கப்படுகிறது. இது மற்ற நச்சுக்களை உடலுக்குள் நுழைவதை தடுத்து இரத்த நாளங்கள் மற்றும் தசைகளை தளர்வடைய செய்கிறது. உடலில் மக்னீசியம் குறையும்போது நச்சுக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து விடும். இதனால் தலைவலி மற்றும் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.

எடை இழப்பு

எடை இழப்பு

முந்திரி பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவாக கருதப்படுகிறது, ஆனால் அதில் நிறைய நல்ல கொழுப்புகள் உள்ளது. எனவே உங்களின் நம்பிக்கை உண்மையல்ல. வாரம் இருமுறை முந்திரி பருப்பு சாப்பிடுபவர்களின் உடல் எடை சீராக இருப்பதோடு குறையவும் உதவிசெய்கிறது.

கெல்லோஸ்டோனை குறைக்கிறது

கெல்லோஸ்டோனை குறைக்கிறது

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் முந்திரி சாப்பிடும் பெண்களுக்கு கெல்லோஸ்டோன் நோய் ஏற்படும் வாய்ப்புகள் 25 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

MOST READ: பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் - வாழ்க்கை எப்படி மாறும்?

செரிமானம்

செரிமானம்

முந்திரியில் உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய நிறைய அமிலங்கள் உள்ளது. குறிப்பாக இது செரிமானத்திற்கு தேவையான அமிலங்களை வழங்குவதால் முந்திரி செரிமான மண்டலத்திற்கு அவசியமானவையாகும்.

பற்கள் ஆரோக்கியம்

பற்கள் ஆரோக்கியம்

பற்களும் எலும்புகளை போன்றதுதான். இதன் ஆரோக்கியத்திற்கும் மக்னீசியம் முக்கியம். முந்திரியில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இது ஈறுகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது.

தூக்கம்

தூக்கம்

முந்திரி நிம்மதியான தூக்கத்தை வழங்கக்கூடியது. குறிப்பாக பெண்களுக்கு முந்திரி பல நன்மைகளை வழங்கக்கூடியது. மாதவிடாய் காலத்திலும், அது முடிந்த பிறகும் பெண்கள் முந்திரி சாப்பிடுவது அவர்களுக்கு வலி இல்லா நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

புற்றுநோய் பாதுகாப்பு

புற்றுநோய் பாதுகாப்பு

முந்திரியில் பிளவனால்களில் ஒன்றான புரோனோகானைடின் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன் அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது. ஆய்வு முடிவுகளும் முந்திரி பருப்பு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காப்பர் மற்றும் பைட்டோகெமிக்கல்ஸ் புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

MOST READ: சர்க்கரை நோயை சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்டுப்படுத்துமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

benefits of eating cashew nuts

Cashews are rich in iron, phosphorus, selenium, magnesium and zinc. They are also good sources of phytochemical.
Desktop Bottom Promotion