For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் முதல் தலை பொடுகு வரை தீர்க்கும் புடலங்காய் சாறு...

புடலங்காய் நீரிழிவு, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து எவ்வளவு ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது பற்றி இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

|

புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். அதாவது சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், ஸ்குவாஷ் ஆகிய காய்கறிகள் அனைத்தும் இந்த குடும்பத்துக்குள் தான் வருகிறது. உலகம் முழுவதுமே பயன்படுத்தக் கூடிய காய்கறிக் குடும்பம் தான் இது. தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் உள்ள நாடுகளில் இருந்து தான் புடலங்காய் கண்டுபிடிக்கப்பட்டது.

health benefits of snake gourd

அதாவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சீனா ஆகுிய நாடுகளில் தான் இந்த வகை காய்கறிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வடிவம்

வடிவம்

இந்த வகை காய்கறிகள் யாவும் தங்களுடைய ஒழுங்கமைப்பற்ற வடிவங்களின் மூலமாகத் தான் இந்த பெயர்கள் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த புடலங்காயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

புடலங்காய்க்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

நன்மைகள்

நன்மைகள்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

மலேரியாவை நீக்கும்

மஞ்சள் காமாலைக்கு தீர்வு செய்யும்

இதய ஆரோக்கியம்

மலச்சிக்கல் தீர்க்கும்

உடல் எடையை நிர்வகிக்கும் தன்மை கொண்டது

பொடுகைப் போக்கும்

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்

பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்.

தலை முடி வேர்க்கால் சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்.

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

புடலங்காய் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். புடலங்காயில் மிகக் குறைவான கலோரிகளைக் கொண்டது. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு. சீன மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக புடலங்காய் பயன்படுத்தப்படுகிறது.

மலேரியா

மலேரியா

சின்ன சின்னதாக புடலங்காயை நறுக்கியோ அல்லது சாறு பிழிந்தோ டிக்காஷன் போல செய்து, காய்ச்சல் சமயங்களில் குடித்து வர காய்ச்சல், மலேரியா காய்ச்சல் கூட தீர்ந்து போகும். சிலருக்கு உள் காய்ச்சல் இருக்கும். அதுகூட இந்த புடலங்காய் சாறு தீர்க்கும். டயேரியாவை குணப்படுத்தும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மிக எளிமையாக ஜீரணமாகக் கூடிய உணவை மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இந்த புடலங்காய் சாறினை குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மிக விரைவாக குணமடைந்து விடும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

புடலங்காயின் சாறு இதயத்தினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, நரம்புகளையும் சீராக இயங்கச் செய்கிறது. இந்த புடலங்காய் சாறினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவுககு புடலங்காய் குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் உண்டாகாது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

உடலில் போதிய நீர்ச்சத்துக்கள் இல்லாமல் போனால் தான் மலச்சிக்கல் உண்டாகும். புடலங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து அதிகம். அதனால் காலையில் வெறும் வயிற்றில் தினமும் காலையில் இரண்டு ஸ்பூன் புடலங்காய் சாறு குடித்து வந்தால் போதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.

எடை மேம்பாடு

எடை மேம்பாடு

புடலங்காயில் மிகக்குறைந்த அளவு கலோரிகளே உள்ளதாலும் கொழுப்புச் சத்து இல்லாமல் இருப்பதாலும் உடல் எடையானது மிகுந்த கட்டுபு்பாடுன் இருக்கும். அதனால் எடையைக் குறைக்க வேண்டுமென்பதற்கான உங்களுடைய உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

புடலங்காய் உங்களுடைய அதிகப்படியான பொடுகினைப் போக்கும் தன்மை கொண்டது. புடலங்காய் சாறினைக் எடுத்து தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இந்த சாறினைத் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் மென்மையான ஷாம்புவை கொண்டு தலையை அலசினால் போதும், பொடுகுப் பிரச்னைகள் அத்தனையும் சரியாகிவிடும்.

நச்சுக்களை வெளியேற்றுதல்

நச்சுக்களை வெளியேற்றுதல்

உடலில் நச்சுக்கள், கழிவுகள் சேராமல் இருந்தால் தான் உடல் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர்ச்சத்து மிக மிக அவசியம். வெறுமனே எப்போதும் தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாது என்பதால், புடலங்காயை சாறெடுத்து அதைக் குடித்து வரலாம்.

பற்களை வலிமையாக்கும்

பற்களை வலிமையாக்கும்

புடலங்காயில் மிக அதிக அளவில் கால்சியம் நிறைந்திருப்பதால், பற்களையும் எலும்புகளையும் மிக வலிமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. கால்சியம், மினரல்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்து காணப்படுவதால், பற்கள் மிக உறுதியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

the amazing health benefits of snake gourd

we are taking about from controlling diabetes to curing fever, here are the amazing health benefits of snake gourd.
Desktop Bottom Promotion