For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் சாப்பிட்டா மலச்சிக்கல் தீராது... வரும்... ஆனா வராது... கதைதான் உங்களுக்கும்...

மலச்சிக்கல் பிரச்சினை பொதுவாக இந்திய மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. நவீன காலங்களில் ஏற்படும் தவறான உணவுப் பழக்கத்தால் அவர்கள் இதை சந்திக்கின்றனர். இந்த மாதிரியான பிரச்சினையை பற்றி அவர்கள் வெளிப்படை

By Suganthi Rajalingam
|

மலச்சிக்கல் பிரச்சினை பொதுவாக இந்திய மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. நவீன காலங்களில் ஏற்படும் தவறான உணவுப் பழக்கத்தால் அவர்கள் இதை சந்திக்கின்றனர். இந்த மாதிரியான பிரச்சினையை பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை.

foods that cause constipation

இதனால் அப்படியே பிரச்சினைகள் பெரிதாகி தீவிர பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. மலச்சிக்கல் என்பது ஒரு சீரண மண்டலம் பிரச்சினை ஆகும். காலையில் எழுந்ததும் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாமல் கஷ்டப்படுவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

ஒவ்வொரு தடவையும் மலம் கழிக்க அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டியிருக்கும். நமது நாட்டில் 22% வரை இளைய வயதினர் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். இந்த பிரச்சினை வயது வரம்பு இல்லாமல் எல்லாரையும் தாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சினை இந்தியர்களிடையே அடிக்கடி வரும் காய்ச்சல், இருமல் போல் வருகிறது. சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் நமக்கு இந்த பிரச்சினையை உண்டு பண்ணுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சினையால் வயிறு வீக்கம், வாயு பிரச்சினையும் சேர்ந்தே சந்திக்க வேண்டியிருக்கும்.

சரி வாங்க எந்த மாதிரியான உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

பழுக்காத வாழைப்பழம்

பழுக்காத வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது என்பார்கள். ஆனால் பழுக்காமல் பச்சையாக இருக்கும் வாழைப்பழத்தில் அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால் அது மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பச்சை நிறத்தில் மலம் கழித்தல் அதிக அளவு ஸ்டார்ச் கலந்துள்ளது என்பதை காட்டுகிறது. எனவே இனி நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிடுங்கள். இதிலுள்ள நார்ச்சத்துகள் உங்களுக்கு மலச்சிக்கலை போக்கும்.

பாஸ்ட் ஃபுட்

பாஸ்ட் ஃபுட்

இந்த நவீன காலத்தில் எதற்கெடுத்தாலும் அவசரம் என்பது வேலையில் மட்டுமல்ல நமது உணவு முறையிலும் வந்து விட்டது. ஆமாங்க காலையில் ஏதாவது சாப்பிட்டால் போதும் என்று விரைவாக சமைத்து சாப்பிடும் பாஸ்ட் ஃபுட் கள் நமக்கு மலச்சிக்கலை உண்டு பண்ணுகிறது. இதில் எந்த வித ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துகளும் இல்லாததால் குடலியக்கம் சரியாக செயல்படாமல் நமக்கு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

நாம் ஆசையாக சாப்பிடும் மாட்டிறைச்சி, பன்றிறைச்சி, ஆட்டிறைச்சி எல்லாம் அதிக அளவில் இரும்புச் சத்தையும், குறைந்த நார்ச்சத்து உடனும் காணப்படுகிறது. எனவே தான் இவையும் நமக்கு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனெனில் மலம் நன்றாக கழிய நார்ச்சத்து மிகவும் அவசியம். எனவே இறைச்சி எடுக்கும் போது காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

மாவு பொருட்கள்

மாவு பொருட்கள்

சுத்திகரிக்கப்பட்ட மாவை சாப்பிடும் போது அதிலுள்ள முக்கிய பொருட்களான விட்டமின் பி, நார்ச்சத்து போன்றவற்றை எடுத்து விடுகின்றனர். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே இனி முழு தானிய உணவுகளை சாப்பிடுங்கள். மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

கடைகளில் வைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை சுவையூட்டிகள், செயற்கை சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதில் நார்ச்சத்தே இல்லாததால் இதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே முடிந்த வரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள், இதனுடன் பழங்கள் காய்கறிகளை சேர்த்து உண்ணுங்கள்.

காபி

காபி

காலையில் எழுந்ததும் நம்மை சுறுசுறுப்பாக வைக்க ஒரு கப் காபி அருந்தினால் தான் முடியும். ஆனால் காபி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து விடும். மலம் குடல் வழியாக வெளிவர போதுமான நீர்ச்சத்தும் முக்கியம். எனவே அதிகமாக காபி அருந்துவதை தவிர்த்து நாள் முழுவதும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கலாம்.

வெள்ளை சாதம்

வெள்ளை சாதம்

வெள்ளை சாதம் தான் நமது இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வெள்ளை அரிசியில் உள்ள கற்களையும், நார்ச்சத்து அதிகம் உள்ள தவிடுகளையும் சுத்திகரிப்பு முறையில் நீக்கி விடுகின்றனர் . இதனால் போதுமான நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வெள்ளை அரிசிற்கு பதிலாக பழுப்பு அரிசியை பயன்படுத்துங்கள். ஏராளமான ஊட்டத்துடன் மலச்சிக்கலையும் தவிர்க்கலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

மாட்டிலிருந்து பெறப்படும் பால் மற்றும் சீஸ் போன்றவற்றில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவை மலம் வெளியேறுவதை சிரமமாக்கி விடுகிறது. எனவே மாட்டுப் பாலிற்கு பதிலாக நட்ஸ் மற்றும் தாவரங்களில் இருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்.

அதிக கொழுப்பு உணவுகள்

அதிக கொழுப்பு உணவுகள்

அதிக கொழுப்புள்ள உணவுகளான அவகேடா, முட்டை,மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவை மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த கொழுப்புள்ள உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்க இயலும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் நமது உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. நீர் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால் குடல் மலத்தை இலகுவாக்க போதுமான நீர் இல்லாமல் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 foods that cause constipation

According to a survey, 22 percent of the country's adult population suffers from constipation. Constipation gives you a bloating feeling and you can feel your entire lower abdomen is cramping and feels gassy. The foods that cause constipation are unripe bananas, fast foods, red meat, refined flour, processed foods, coffee, etc.
Desktop Bottom Promotion