அதிக ஆரோக்கிய பலன்களை தரும் வாழைப்பழம் எது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகவும், அனைவரும் சாப்பிட கூடிய வகையில் மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்க கூடியது. இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடியவைகளாக உள்ளன. அந்த வகையில் எந்தெந்த வாழைப்பழத்திற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூவன் வாழைப்பழம்:

பூவன் வாழைப்பழம்:

பூவன் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும். தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.

மலச்சிக்கலை அகற்றுவதில் சக்தி வாய்ந்தது. இரவு உணவுக்கு பின் இந்த பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்ப்படாது. ஆஸ்துமா உள்ளவர்கள், கோழைக்கட்டியவர்கள், குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ரஸ்தாளிப் பழம்:

ரஸ்தாளிப் பழம்:

இந்த பழம் சுவையானது. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பசியை மந்தமாக்கும். உடல் பரும் உள்ளவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். நீரிழிவு உள்ளவர்கள் இதை நினைத்துக்கூட பார்க்காமல் இருப்பது நல்லது.

பச்சை வாழைப்பழம்:

பச்சை வாழைப்பழம்:

பச்சை வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. கனிந்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். இதனை குறைந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும். குளிர்ச்சி தன்மை உடையது. எனவே உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். காச நோய், ஆஸ்துமா, வாத நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. பித்தத்தை அதிகப்படுத்துவதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

மலை வாழைப்பழம்

மலை வாழைப்பழம்

இது சற்று விலை அதிகமாக இருக்கும். வாத நோய் உள்ளவர்களை தவிர மற்றவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் வலு பெரும்.

பேயன் பழம்

பேயன் பழம்

இது உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. உடல் சூடு உள்ளவர்கள் சாப்பிடலாம். குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

கற்பூர வாழைப்பழம்

கற்பூர வாழைப்பழம்

இனிப்பு சுவை கொண்டது. ருசியாக இருக்கும். தோலில் ஏற்படும் சொறி, சிரங்குங்கள் மற்றும் புண்களை விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. தலைப்பாரம் நீங்கும்.

நேந்திரன் வாழைப்பழம்

நேந்திரன் வாழைப்பழம்

நேந்திரன் வாழைப்பழம் கேரளாவில் புகழ் பெற்றது. வாசனையாகவும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரக்கூடியது. உடல் மெலிந்தவர்கள் நன்கு கனிந்த நேந்திரான் பழத்தை சாப்பிடலாம்.

செவ்வாழைப்பழம்

செவ்வாழைப்பழம்

பழங்களிலேயே அதிக சத்து மிக்கது செவ்வாழைப்பழம் தான். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நரம்பு தளர்ச்சி, மாலைக்கண், இருதய பிரச்சனைகள், தொற்றுகளை தடுக்க இது உதவுகிறது. இதில் ஏராளமான பயன்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

which type of banana good for health

which type of banana good for health
Story first published: Thursday, August 24, 2017, 11:41 [IST]
Subscribe Newsletter