For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு உணவை சாப்பிடுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உணவை சாப்பிடுவதற்கு முன் அவற்றிலுள்ள நன்மைகள் தீமைகள் மற்றும் அதன் சுவைகளால் எவ்வாறு நாம் நன்மைகள் கிடைக்கபெறுகிறோம் என்று இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது

|

நாம் சாப்பிடும் பல உணவுகள் எந்த மாதிரியான எதிர்வினையாற்றும் என்பதை நாம பலரும் தெரிந்து கொள்ள நினைப்பதில்லை. இந்த காய் நல்லது. இது கெட்டது என்ற நினைப்போடு நிறுத்திக் கொள்கிறோம். இதில் தவறில்லைதான். ஆனால் கூடுமானவரை உண்ணும் உணவுகளைப் பற்றி ஒரு தெளிவான எண்ணத்துடன் சாப்பிடுவது இன்னும் நமக்கு நல்லதுதானே.

what should you know before eating your food

நாம் சாப்பிடும் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு என பலவித சுவைகள் நமது உடலில் எந்த மாதிரியாக வினைபுரிகிறது என தெரிந்து கொள்ள ஆசையா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் என்ன இருக்கிறது?

உணவில் என்ன இருக்கிறது?

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன.

கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலில் செல் மற்றும் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு ஹார்மோன் இயக்கத்திற்கும்,. சக்தி குறையும் சமயத்தில் எரிபொருளாகவும், விட்டமின் உறியவும் உதவுகிறது.

சுவைகள் :

சுவைகள் :

இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை அதிகரிக்கச் செய்யும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.

யார் எந்த சுவையை அதிகம் உண்ணலாம்?

யார் எந்த சுவையை அதிகம் உண்ணலாம்?

வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட் களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம்.

வாயு உண்டாக்கும் உணவுகள் :

வாயு உண்டாக்கும் உணவுகள் :

கசப்பு, புளிப்பு, காரம் உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமத்தால் வாயு உண்டாகாது.

அமிலத்தன்மை உண்டாக்க்கும் உணவுகள்:

அமிலத்தன்மை உண்டாக்க்கும் உணவுகள்:

காரமுடைய பொருட்கள் மற்றும் அதிகப்படியான புரத உணவுகள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இவைதான். நெஞ்சு கரிப்பு, நெஞ்செரிச்சல் மற்றும் அதிக அமிலம் உண்டாவதற்கு காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what should you know before eating your food

Things you should know before eating your food
Desktop Bottom Promotion