For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இக்கட்டுரையில் காணலாம்

By Balakarthik Balasubramanian
|

ஓட்ஸ் நமக்கு தெரிந்த ஒன்று தான். அனைத்து நேரங்களிலும் நாம் எடுத்துக்கொள்ளுமோர் உணவே இந்த ஓட்ஸாகும். இதில் ஊட்டசத்துக்களும், ஆற்றல் பண்புகளும் அதிகம் காணப்படுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

இந்த ஓட்ஸில் வைட்டமின் E, B6, B5 போன்ற பல வைட்டமின்கள் நிறைந்திருக்க, கனிமங்களான இரும்பு, செலினியம், மாக்னீசியம், காப்பர் ஆகியவையும் நிறைந்து காணப்படுகிறது.

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

முழு மற்றும் ஆரோக்கியமான தானியங்களுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. மேலும், இந்த ஓட்ஸில் அதிகளவில் நார் சத்துமிருக்க, எடைக்குறைப்புக்கு உதவுவதோடு, இதயத்துக்கும், குடல் பகுதிக்கும் பாதுகாப்பாகவும் அமைகிறது.

See What Happens To Your Body If You Consume Oats Every Day

இரத்த சர்க்கரை அளவையும் இந்த ஓட்ஸ் கட்டுப்படுத்துகிறது. இது முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் தேவைப்பட, பச்சையத்தின் செறிமானத்தை கட்டுபடுத்தி, உடம்பின் இரத்த குளுக்கோஸ் அளவையும் நிலையாய் தக்கவைத்து கொள்கிறது.

புற்று நோயை எதிர்க்கும் பண்பு இந்த ஓட்ஸுக்கு உண்டு. இந்த சக்திவாய்ந்த உணவில் பைத்தோகெமிக்கலும் அடங்கியிருக்க, மார்பக பாதிப்பு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றையும் குறைக்க உதவுகிறது.

மற்ற ஆரோக்கியமான உணவுகள் சமைக்க வெகு நேரமாகிறது. அந்த சமயங்களில் இதனை காலை உணவாக நாம் உண்ண, ஓட்ஸை நீர் அல்லது பாலில் கொதிக்கவைத்து நாம் சாப்பிடலாம்.

இந்த ஆர்டிக்கலின் மூலம், தினமும் ஓட்ஸை நாம் சாப்பிடுவதால் என்ன ஆகுமெனவும், தினமும் ஓட்ஸை உண்ணுவதால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன என்பதையும் நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்:

இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்:

ஓட்ஸில் பயன்மிக்க ஆக்ஸிஜனேற்ற பண்பு இருக்க, இருதய நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவுகிறது. இதில் காணப்படும் அதிகளவிலான நார் சத்து, மோசமான கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பையும் பாதிப்பின்றி பாதுகாக்கிறது.

 மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்:

மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்:

ஓட்ஸில் அதிகளவில் நார் சத்து இருப்பதால், அவை கரையும் மற்றும் கரையா நிலையிலும் காணப்படுகிறது. இதனால், குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்த உதவி, மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்க வழிவகை செய்கிறது. இது, ஓட்ஸ் நாம் தினமும் சாப்பிடுவதால் காணப்படும் பயன்களுள் முதன்மையான ஒன்றும் கூட.

 இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

ஓட்ஸ் நமக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவ, வகை 2 நீரிழிவு நோயினால் உண்டாகும் ஆபத்தையும் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகள், ஓட்ஸை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் அதிக நார் சத்தும், கார்போஹைட்ரேட்டும் முழு உணவை எளிய சர்க்கரையாக மெதுவாக மாற்ற பெரிதும் உதவுகிறது.

 புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது:

புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது:

ஓட்ஸில் லிக்னன் காணப்பட, ஹார்மோன் சம்பந்தப்பட்ட புற்றுநோயான மார்பக, கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. ஓட்ஸை உண்ணுவது ஆண், பெண் என இரு பாலருக்கும் சிறந்ததாகும். இது, ஓட்ஸை நாம் தினமும் உண்ணுவதால் உண்டாகக்கூடிய நன்மையாகவும் அமைகிறது.

 உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

ஓட்ஸை நாம் தினமும் சாப்பிட்டுவர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் போரிடுகிறது. அதனால், நார்சத்து நிறைந்த உடலுக்கு ஏற்ற சிறந்த உணவாகவும் ஓட்ஸ் விளங்குகிறது.

இதில் அதிகளவில் மாக்னீசியம் இருக்கிறதா:

இதில் அதிகளவில் மாக்னீசியம் இருக்கிறதா:

ஓட்ஸில் காணப்படும் அதிக அளவிலான மெக்னீசியம், ஆற்றல் உற்பத்திக்கும், நொதி செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும் இது உதவுவதோடு, இதய தசைகளை பாதுகாத்து, இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துகொள்கிறது. மேலும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிலிருந்தும் நம்மை காக்கிறது.

எடை குறைப்புக்கு ஆதரவு தருகிறது:

எடை குறைப்புக்கு ஆதரவு தருகிறது:

ஓட்ஸ் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், மெல்ல செறிக்க தொடங்கி, மன நிம்மதியையும் நமக்கு தருகிறது.

பசியை குறைப்பதோடு, எடை குறைப்பிற்கும் ஆதரவு அளிக்கிறது. இதில் சோலிசிஸ்டோகினின் காணப்பட, அது பசிக்கு எதிராக போராடும் ஹார்மோன் என்றும் தெரியவருவதோடு, பீட்டா-குளுக்கானால் இது அதிகரிக்கவும் ஆரம்பிக்கிறது. பீட்டா-குளுக்கான் என்பது ஓட்ஸில் இருக்கும் ஒரு கலவையாகும்.

நோய்க்கு எதிரான சக்தியை அதிகப்படுத்துகிறது:

நோய்க்கு எதிரான சக்தியை அதிகப்படுத்துகிறது:

ஓட்ஸில் பீட்டா-குளுட்டன் காணப்பட, இவை நீயூட்ரான்கள் நோய்தொற்றின் தளத்திற்கு செல்ல உதவுகிறது. மேலும், இதனால் கண்டுபிடிக்கப்படும் பாக்டீரியாவும் நீக்க மேம்படுகிறது. நாம் தினசரி ஓட்ஸ் சாப்பிடுவதால் உண்டாகக்கூடிய முதன்மை நன்மைகளுள் இதுவும் ஒன்றாகும்.

சருமத்தை பாதுகாக்கிறது:

சருமத்தை பாதுகாக்கிறது:

ஓட்ஸிற்கு இனிமையாக மாற்றும் பண்பிருக்க, இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்குவதோடு, சருமத்திற்கு பல பயன்களையும் இது தருகிறது. ஓட்ஸ், நம்முடைய சருமத்தின் Ph அளவை சீராக்கவும் உதவுகிறது. மேலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துகொள்ளவும், மிருதுவாக மாற்றவும் இது பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

See What Happens To Your Body If You Consume Oats Every Day

See What Happens To Your Body If You Consume Oats Every Day
Desktop Bottom Promotion