Just In
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (14.04.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- 21 hrs ago
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- 22 hrs ago
உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா?
- 23 hrs ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
Don't Miss
- News
ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!
- Sports
வர முடியாது.. வேண்டுமென்றே சிங்கிள் கொடுக்காத ரசல்.. திட்டமிட்டு தோற்ற கேகேஆர்? சந்தேகமாக இருக்கே!
- Automobiles
உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!
- Movies
இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த இலையை நீரில் போட்டு வைத்தால் நடக்கும் மாயம் என்ன? இந்த அரிய இலையின் நன்மைகளை தெரிஞ்சுகோங்க!!
தற்காலத்தில், மேலை மருத்துவத்தின் பக்க விளைவுகளுக்கு அஞ்சி, நிறைய பேர் பாரம்பரிய வைத்திய முறைகளைத் தேடி வருகிறார்கள். மேலை மருத்துவர்களின் முன் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலையில், மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்டுக்கொள்ளும் நிலையில் இருந்தவர்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளம் சந்தேகம் அடைந்து, இந்த மூலிகை இந்த வியாதியை குணப்படுத்துமா, இதை ஏன் இப்படி சாப்பிட வேண்டும், ஏன் அதோடு கலந்து சாப்பிட்டால் என்ன, என்பது போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, இருப்பார்கள்.
இதற்கு பொதுவான ஒரு காரணம், எளிமையான மூலிகைகளும் அதைவிட எளிமையான தோற்றம் கொண்ட வைத்தியர்களுமே! அதன் காரணமாக, தங்கள் நெடுநாள் வியாதி தீருமா, என்ற அச்சமும் அது இவர்களால் முடியுமா, என்ற அவநம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சில வைத்தியர்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு பொறுமையுடன் விளக்கம் சொன்னாலும், மற்ற சில வைத்தியர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் கட்டுக்கொடி இலைகளை அவர்களிடம் கொடுத்து, இதைத் தண்ணீரில் சற்று நேரம் ஊற வையுங்கள் என்று மட்டும் அவர்களிடம் கூறுவார்கள்.
எதற்கு அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? கட்டுக்கொடி இலைகளை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்? ஊற வைத்து என்ன செய்ய வேண்டும்? நமக்கும் இது போல பல சந்தேகங்கள் தோன்றலாம், விளக்கம் பெற, தொடர்ந்து படிப்போம், வாருங்கள்.

கட்டுக்கொடி என்றால் என்ன :
கட்டுக்கொடி தோட்டங்களில் உள்ள வேலிகளில், சாலையோர புதர்கள் மண்டிய இடங்களில் படர்ந்து தானாக வளரும் ஒரு கொடி வகையாகும்.
சிறிய இலைகளுடன், நீண்ட கொடி போன்ற உறுதியான தண்டுகளுடன் காணப்படும் கட்டுக்கொடி, எல்லா வகை மண்ணிலும் பரவலாக வளரக் கூடியது.
விதைகள் மூலமாகவும், கொடியின் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைப்பதன் மூலமும், செழித்து வளரும் கட்டுக்கொடியில் இருந்து, பல கொடிகள் உண்டாகி வளரும். இவை பனை மரம் மற்றும் உயரமான மரங்களைச் சுற்றி வளரும் இயல்பு மிக்கது.

அரிய சக்தி :
ஆன்மீகத்தில், சித்து வேலைகளில் கட்டுக்கொடி மூலிகையை அரிய சக்தி மிக்க ஆகர்ஷண மூலிகையாகப் பயன்படுத்தினர். இதன் மூலம், தேவையான விருப்பத்தை, தேவையான செயலை, தேவையான வகையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இருந்தாலும் அக்காலத்தில், வெகு சிலரே இது போன்ற முறைகளை பயன்படுத்தினர்.
கட்டுக்கொடி சித்த மருத்துவத்தில், பல வியாதிகளுக்கு மருந்தாகவும், பல்வேறு உடல்நல பாதிப்புகளை சரியாக்கும் நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதன் பொதுப் பலன்களாக, சூட்டைத் தணித்து, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும், குழந்தைகளின் வயிற்று வலி பாதிப்புகளை சரி செய்யும். உடலைத் தேற்றும். சிறந்த வியாதி எதிர்ப்புத் திறன் உடையது.

நீரில் போட்டால் மாறும் தன்மை :
கட்டுக்கொடியின் இலைகள் அதிக சக்தி மிக்கவை, சில இலைகளை தண்ணீரில் இட்டு, சற்று நேரம் கழித்துப் பார்த்தால், தண்ணீர் ஜெல் போல, கெட்டியாக இருக்கும். மேலும், உப்பையும் இது போல, தன்மை மாற வைக்கும்.

ஆண்மை அதிகரிக்கும் :
இந்த இலைகளை பல்வேறு வழிமுறைகளில் சாப்பிடும்போது, ஆண்மை மற்றும் பெண்மைத் தன்மையை வலுவாக்கும். இது போல, தண்ணீரை, உப்பை மற்றும் உடலைக் கட்டுக்கோப்பாக கட்டி வைப்பதால், இதற்கு முன்னோர்கள் கட்டுக்கொடி என்று பெயரிட்டு அழைத்தனர்.

எப்படி சாப்பிடனும்?
சிறந்த மருத்துவப் பலன்களைத் தரவல்ல கட்டுக்கொடியின் இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு அலசிய பின், இலைகளில் இருந்து சாறெடுத்து, ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு, அத்துடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வைத்து, சற்று நேரம் கழித்துப் பார்த்தால், பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்கு கட்டியாகி இருக்கும்.

பிறக்கும் குழந்தைக்காக :
இந்த மருந்தை தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, குழந்தைகள் திடகாத்திரத்துடன் பொலிவாக, நல்ல உடல் மன வளத்துடன் பிறப்பார்கள். உடலில் வியாதி எதிர்ப்பு சக்தி மிகுந்து விளங்கும், சிந்திக்கும் திறன் மேலோங்கும், அறிவாற்றல் பெற்று விளங்குவார்கள்.
கட்டுக்கொடி நீர் மருந்து பொதுவாக, திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல உடல் வலுவைத் தரும் மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊக்க மருந்தாகவும் திகழ்கிறது.

சூட்டினால் ஏற்பட்டு வயிற்றுப் போக்கு:
உடலில் ஏற்படும் சூட்டினால், சிலருக்கு பேதி எனும் வயிற்றுப்போக்கு ஏற்படும், மிகுந்த வேதனையும் அசதியும் தரும் இந்த பேதிக்கு, மிக எளிய தீர்வாக, சிறிது கட்டுக்கொடி இலைகளை மென்று தின்று வர, மேலே சொன்ன பாதிப்புகள் யாவும் உடனடியாக விலகி விடும். மேலும், மூல வியாதியால் ஏற்படும் ஆசன வாய் பாதிப்பும் தீரும்.

உடல் வாத பாதிப்புகள், வாத வலி நீங்க :
சிறிதளவு கட்டுக்கொடி வேர், சிறிது சுக்கு மற்றும் மிளகு சேர்த்து சற்று அரைத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ச்சி, தினமும் மூன்று வேளை, இந்த நீரைப் பருகி வர, வாதத்தால் ஏற்பட்ட வியாதிகள், மற்றும் வலிகள் போன்றவை உடலை விட்டு, நீங்கும்.

உடல் சோர்வு நீங்க :
கட்டுக்கொடி இலைகள் மற்றும் வேப்பிலைக் கொழுந்துகள் இவற்றை அரைத்து, காலையில் சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பினால் ஏற்பட்ட உடல் அசதி, சோர்வு, உடல் எரிச்சல், தாகம் மற்றும் சிறுநீர் பிரியும்போது ஏற்படும் நீர்க்குத்தல் சரியாகும்.

மாதாந்திர பாதிப்புகளை சரிசெய்ய :
கட்டுக்கொடி இலைகளை நன்கு அரைத்து, தயிரில் கலந்து சாப்பிட்டு வர, மாதாந்திர பாதிப்புகள் தீரும். கட்டுக்கொடி இலைச்சாற்றை தண்ணீரில் இட்டு, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து மூடி வைத்து சற்று நேரம் கழித்து, கெட்டியாக மாறிய அந்தக் கலவையை சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதாந்திர பிரச்னைகள் மற்றும் உடல் சூட்டினால் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள் தீரும்.

குழந்தைகளின் வயிற்று பாதிப்புகள் சரியாக :
கை கால் கழுவாமல் உணவு உண்பது, தண்ணீர் அருந்துவது போன்ற குழந்தைகளின் விளையாட்டுத் தனங்களால், சமயங்களில் நச்சுத் தொற்று ஏற்பட்டு, வயிற்றில் வலி எடுத்து, குழந்தைகள் வேதனைப் படுவார்கள்.
இந்த பாதிப்பைப் போக்க, கட்டுக்கொடி வேர் மற்றும் களஞ்சிப்பருப்பு இவற்றை சேர்த்து மைய அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து, அரை தம்ளர் தண்ணீரில் கலந்து கொடுக்க, குழந்தைகளின் வயிற்றில் உள்ள நச்சுக்கள் அழிந்து, வயிற்று வலி பாதிப்புகள் அகன்று விடும்.

சர்க்கரை பாதிப்புகள் அகல..
கட்டுக்கொடி இலைகளை உலர்த்தி, பின்னர் இலைகளை நன்கு இடித்து தூளாக்கிக் கொண்டு, இதை தினமும் சிறிது சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட சிறுநீர் கோளாறுகள் விலகும்.

சரும வியாதிகளைப் போக்கும் :
கட்டுக்கொடி இலைச்சாற்றை சற்று பிழிந்து, அதை சிறிது தண்ணீரில் கலந்தால், தண்ணீர் கெட்டிப்பட்டு விடும். அந்த நீரை, சருமத்தில் பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வர, சொறி, சிரங்கு மற்றும் சரும வியாதிகள் அனைத்தும் நீங்கும்.

உடல் வலி நீங்க :
கட்டுக்கொடி இலைகளை மையாக அரைத்து, அதைப் பாலில் கலந்து, தினமும் இருவேளை பருகி வர, உடல் வலி மற்றும் இடுப்பு வலி நீங்கும். உடல் வியாதி எதிர்ப்புத் தன்மை பெற்று, வலுவாகும்.

இரத்தப் போக்கை தடுத்து, உடலைக் காக்கும் :
கட்டுக்கொடி இலைகளை சாறெடுத்து, நீரில் இட்டு சற்று நேரம் கழித்து கெட்டியாகும் அந்தக் கலவையை, சிறிது எடுத்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, பெண்களுக்கு மாதாந்திர விலக்கில் ஏற்படும் சோர்வு நீங்கி, உடல் நிலை சரியாகும்.
இந்த மருந்தை மற்றவர்களும் சாப்பிட்டு வர, எல்லோருக்கும், உடல் வியாதி எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்வதாக அமையும்.