உங்களது உடலில் உள்ள நல்ல இரத்தத்தை எளிய முறையில் அதிகரிப்பது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

நமது உடலில் எந்த அளவிற்கு இரத்தம் இருக்கிறது என்பதை விட முக்கியமானது தான் இரத்தம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறது என்பதும், நமது உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாக இல்லை என்றால் நம்மை பல விதமான நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் அவை சில அறிகுறிகளின் மூலமாக வெளிப்படும்.

உடல் சோர்வாக இருப்பது, காய்ச்சல், வயிற்று உப்பசம், சுவாசக் கோளாறுகள், தோல் அரிப்பு, தடிப்புகள், பருக்கள் அதிகமாக வருவது போன்ற பிரச்சனைகள் இரத்தம் சுத்தமாக இல்லாததால் உண்டாகும் பிரச்சனைகளாகும். உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

How to purify your blood naturally

இரத்தம் சுத்தமாக இருப்பதே ஆரோக்கியத்தின் முதல்படியாகும். அசுத்தமான இரத்தமானது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.. உங்களது இரத்தம் சுத்தமாக இருந்தால் உடலும் சரியான முறையில் இயங்கும்..! பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த பகுதியில் உங்களது இரத்தத்தை சுத்தம் செய்யும் சில உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பூண்டு

1. பூண்டு

சமைக்கப்படாத பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும் ஏற்ற ஒன்றாகும். இதில் சல்பர் உள்ளதால் இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் பூண்டு மிகச்சிறந்த ஆண்டி மைக்ரோபையல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கு பாக்டீரியா, வைரஸ்கள் போன்றவற்றையும் அழிக்கிறது.

2. பச்சை காய்கறிகள்

2. பச்சை காய்கறிகள்

பசுமையான காய்கறிகளை விட மிகச்சிறந்த ஒரு உணவு கண்டிப்பாக இருக்க முடியாது. இந்த பச்சை காய்கறிகள் உங்களது இரத்தத்தை சுத்தம் செய்யும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. ப்ரோகோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை கேன்சர், கார்டிவாஸ்குலர் நோய் மற்றும் சர்க்கரை நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன.

3. ஆப்பிள் சீடர் வினிகர்

3. ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் உங்களது உடலுக்கு பல வகைகளில் பயன் தருவதாக உள்ளது. இது உங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு இயற்கையான ஆண்டி செப்டிக் பொருளாக இருக்கிறது. இது தொற்றுக்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.. மேலும் இது இயற்கையாகவே உங்களது பி.எச் அளவை சமன் செய்கிறது.

4. பீட்ரூட்

4. பீட்ரூட்

பீட்ரூட் உங்களது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக சிறந்தது. பீட்ரூட் இயற்கையாகவே உங்களது ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது. இது குறைந்த இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

5. மஞ்சள்

5. மஞ்சள்

மஞ்சளின் மகிமைகளை பற்றி அறியாதவர்களே கிடையாது என்று கூறலாம். மஞ்சளில் அதிகளவு நச்சுக்களை போக்கும் தன்மை உள்ளது. மஞ்சளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்கும். இதில் உள்ள குர்குமின் ஒரு ஆண்டி ஆக்ஸிடண்டாக உள்ளது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது..

6. கொத்தமல்லி

6. கொத்தமல்லி

கொத்தமல்லி நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். இது உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் செரிப்பதற்கு தாமதமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உண்டாகும் நச்சுக்களை இது வெளியேற்றுகிறது.

7. இஞ்சி

7. இஞ்சி

இஞ்சியும் கூட மஞ்சளின் குடும்பத்தை சார்ந்தது தான். இது மஞ்சளின் குணங்களை கொண்டுள்ளது. இதில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகளும் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையும் உள்ளது. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்கள் உங்களது உடலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகளை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது.

8. எலுமிச்சை

8. எலுமிச்சை

எலுமிச்சை ஜூஸை பருவது என்பது இரத்தத்தை சுத்தம் செய்ய உங்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த மற்றும் எளிமையான வழியாகும். இதில் விட்டமின் சி அதிகளவு உள்ளது. விட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்டு ஆகும். எலுமிச்சை சாறு மன அழுத்தம், உடல் செல்கள் பாதிக்கப்படுதல், தொற்றுகள் மற்றும் கேன்சரில் இருந்து பாதுகாக்கிறது.

9. தண்ணீர்

9. தண்ணீர்

தண்ணீர் பருகினாலே பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிடலாம். தண்ணீர் உங்களது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல் உங்களது இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியமாகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 இலந்தை பழம்

இலந்தை பழம்

இலந்தை பழத்தை நாம் யாரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவதில்லை.. ஆனால் இந்த இலந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் பசியை தூண்டவும், உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

11. விளாம்பழம்

11. விளாம்பழம்

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை கொல்லும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் இது பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

12. நாவல் பழம்

12. நாவல் பழம்

நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தை கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகரிக்கும். எனவே நாவல் கிடைக்கும் நாட்களில் இதனை வாங்கி சாப்பிடுவது நல்லது.

13. தேன்

13. தேன்

தேன் ஒரு அருமருந்தாகும். இயற்கையாக கிடைக்கும் இது பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தேனை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து பருகி வந்தால் இரத்தம் சுத்தகரிக்கப்படுகிறது.

14. வெல்லம்

14. வெல்லம்

வெல்லம் இந்தியாவில் உள்ள மிக பிரபலமான உணவாகும். சுத்திகரிக்கப்படாத வெல்லத்தை சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உங்களது செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது. மலச்சிக்கலில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கிறது.

15. ஆப்பிள்

15. ஆப்பிள்

ஆப்பிளில் அதிகளவு பைபர் உள்ளது. நீங்கள் ஆப்பிள் மட்டுமல்லாது கொய்யாப்பழம், பிளம்ஸ், பேரிக்காய் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். இவை எல்லாம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மேலும் இது கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை நீக்கவும் உதவியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to purify your blood naturally

How to purify your blood naturally
Subscribe Newsletter