டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய சிற்றுண்டிகள் !!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

ஸ்நாக்ஸ் - இன்று ப்ரீ கே ஜி செல்லும் குழந்தைக்கு கூட இது ஒரு விருப்பமான பெயர். ஸ்நாக்ஸ் என்று இப்போது எல்லோராலும் அழைக்கப்படும் சிற்றுண்டியை பற்றி இப்போது காண்போம்.

மூன்று வேளை உணவுகளுக்கு மத்தியில் உண்ணப்படும் ஒரு சிறிய உணவை நாம் சிற்றுண்டி என்று கூறுகிறோம்.

சிற்றுண்டி என்ற ஸ்நாக்ஸ் வயிற்றை நிறைப்பதற்காக அல்ல. வயிற்றில் ஏற்படும் சின்ன சின்ன பசியை போக்குவதற்காக. ஒரு புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும் இதனை உண்ணலாம்.

Healthy snacks to add to your diet

இந்த ஸ்நாக்ஸ் என்பது சமீப காலமாக குழந்தைகளை பருமன் அடைய செய்வதாக ஒரு கூற்று இருந்து வருகிறது. உண்மையில் ஸ்நாக்ஸ் என்பது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வேண்டும் .

பள்ளி நேரத்தில் கொடுக்கப்படும் சிற்றுண்டியால் குழந்தைகளின் ஆற்றல் அதிகரிக்கிறது. அவர்கள் அதிக கவனத்துடன் பள்ளியில் ஈடுபடுவதற்கு அது ஒரு தூண்டுதலாக இருக்கிறது. சின்ன குழந்தைகள் அவர்களின் 3 வேளை உணவுடன் 2 வேளை சிற்றுண்டி எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு அகாடமி பரிந்துரைக்கிறது.

நீங்கள் சாப்பிடும் ஸ்நேக்ஸ் வைத்து உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும் ...எப்படி தெரியுமா?

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் 3 வேளை உணவுடன் 1 வேளை சிற்றுண்டி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் தினமும் விளையாட்டுகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டவராயின் அவர்களும் 2 வேளை சிற்றுண்டி எடுத்து கொள்வது அவசியம் என்றும் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு எப்படி ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியை கொடுக்கலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன தகவலை இப்போது பாப்போம்.

எது ஆரோக்கியமான சிற்றுண்டி?

கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, பழங்கள், காய்கறிகள் - உணவு ஊட்டச்சத்துக்கள், போன்றவை மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகள் இருப்பதை போல சிற்றுண்டியிலும் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஆரோக்கிய சிற்றுண்டியாகும்.

Healthy snacks to add to your diet

சப்பாத்தி அல்லது பூரியை சிறு வட்டமாக செய்து அதில் தக்காளி பேஸ்டை தடவி குறைந்த கொழுப்பு சீஸை அதன் மீது வைத்து கொடுக்கலாம்.

கோதுமையில் கார்போஹைட்ரெட் உள்ளது .தக்காளி பேஸ்ட் ஒரு சைவ உணவு. குறைந்த கொழுப்பு சீஸ் ஒரு ஆரோக்கிய கொழுப்பு மற்றும் புரத பொருள்.

கண்ணை கவரும் நிறங்கள் கொண்ட பழங்களை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் நல்ல கெட்டி தயிர் சேர்த்து செய்யும் ஒரு வகை சாலட் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். விரும்பினால் இதனுடன் ஐஸ்கட்டிகளை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் கார்போஹைட்ரெட், புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு உள்ளது. பழங்கள் ஊட்டச்சத்துக்கள் கொண்டது.

Healthy snacks to add to your diet

வாழை பழம் அல்லது ஆப்பிளை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இவற்றை வேர்க்கடலை வெண்ணெய்யில் தொட்டு சாப்பிட கொடுக்கலாம்.

கொண்டைக்கடலையை வேக வைத்து மசித்து அதனுடன் பூண்டு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பீ நட் பட்டர் அல்லது வேறு வெண்ணை பேஸ்டை சேர்த்து அதில் காரட்டை தொட்டு சாப்பிட கொடுக்கலாம்.

குக்கீகள், சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கில் வரும் சிற்றுண்டிகள் வழக்கமாக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமில்லாத சுவையூட்டிகள் கொண்டு நிரம்பியிருக்கிறது . இதனை உண்பதால் குழந்தைகளுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் கிடைக்க போவதில்லை. மாறாக தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

English summary

Healthy snacks to add to your diet

Healthy snacks to add to your diet
Story first published: Thursday, August 10, 2017, 19:00 [IST]