மாரடைப்பு வராம தடுக்க இதச் சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன்.

Health Benefits Of Sweet Corn

இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஒமேகா 6 :

ஒமேகா 6 :

கார்ன் ஆயிலில் அதிகப்படியான ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. நம் மூளையின் செயல்பாடுகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் பி1 நினைவுத்திறனை அதிகரிக்க உதவிடுகிறது.

எடை குறைப்பு :

எடை குறைப்பு :

எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கான சிறந்த உணவு இது. 100 கிராம் ஸ்வீட் கார்னில் 86 கிராம் கலோரி இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

மினரல்ஸ் :

மினரல்ஸ் :

ஸ்வீட் கார்னில் விட்டமின் ஏ,பி,சி, இ இருக்கிறது. அதே போல மெக்னீசியம், ஜிங்க், காப்பர் பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. நம் உடலில் உள்ள செல் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்க கூடியது.

ரத்த சோகை :

ரத்த சோகை :

ஸ்வீட் கார்னில் இருக்கும் ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் பி 12 ரத்த சோகை ஏற்படாதவாறு தவிர்த்திடும். உடலில் ஃபோலிக் ஆசிட் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்த பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிடும்.

இதயம் :

இதயம் :

ஸ்வீட் கார்ன் கொலஸ்ட்ரால் குறைக்க உதவிடும். குறிப்பாக மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்கள் வைத்திருக்கும் என்பதால் இதய நோய் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க ஸ்வீட் கார்ன் பெரும் பங்கு வகிக்கின்றன.

அதே போல , ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் பி9 இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

ஜீரணம் :

ஜீரணம் :

இதில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இது ஜீரணத்திற்கு பெரிதும் உதவிடும். சர்க்கரை நோய், கிட்னி தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய் வராமல் தடுத்திடும்.

ரத்தம் மற்றும் சருமங்களில் உள்ள நச்சுக்களை நீக்கி சரும பொலிவிற்கு காரணமாகிடும்.

சுருக்கம் :

சுருக்கம் :

ஸ்வீட் கார்ன் சிறந்த ஆன்ட்டி ஏஜிங் உணவாக இருக்கும். கார்ன் ஆயில் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கலாம். அத்துடன் ஸ்வீட் கார்ன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

முகப்பரு:

முகப்பரு:

ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் ஈ முகத்தில் உள்ள பருவை நீக்க உதவிடும். தினமும் ஐம்பது கிராம் அளவுள்ள ஸ்வீட் கார்ன் காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு வந்தால், குழந்தையின் எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.

வலி :

வலி :

கை மற்றும் கால் மூட்டுகளில் வலி இருந்தால், கார்ன் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால் உடனடி பலன் கிடைத்திடும்.

பொடுகு :

பொடுகு :

கார்ன் ஆயிலை சூடாக்கி அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் பொடுகை நீக்க உதவிடும். இரவு படுப்பதற்கு முன்னதாக இப்படி மசாஜ் செய்துவிட்டு மறுநாள் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவைக் கொண்டு தலைக்கு குளித்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Sweet Corn

Surprising Facts about Sweet corn