இந்த உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

Written By:
Subscribe to Boldsky

பழங்கால ஆயுர்வேதத்தில் சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது சில நோய்கள் உடலில் வர காரணமாக அமைகிறது. இன்றைய நவீன மருத்துவத்தில் கூட இந்த நம்பிக்கை உள்ளது.

food combinations that you should never try

இவ்வாறு சாப்பிட கூடாத உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால் அது உங்களை ஆரோக்கிய கெடுதல்களுக்கு ஆளாக்கும். இது அறிவியல் பூர்வமாக உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உணவுகளை ஒன்றாக சாப்பிட கூடாது என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தர்பூசணி மற்றும் தண்ணீர்

1. தர்பூசணி மற்றும் தண்ணீர்

தர்பூசணியில் இயற்கையாகவே 90-95% தண்ணீர் அடங்கியுள்ளது. தர்பூசணி சாப்பிட்ட உடன் நீங்கள் தண்ணீர் குடித்தால், உணவை செரிப்பதற்காக செரிமான மண்டலத்தில் சுரக்கும் திரவத்தை நீக்கிவிடும். இதனால் உணவு செரிக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது.

2. டீ மற்றும் யோகார்ட்

2. டீ மற்றும் யோகார்ட்

டீ மற்றும் யோகார்ட் ஆகிய இரண்டிலுமே அமிலத்தன்மை கொண்டது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படும்.

3. பால் மற்றும் வாழைப்பழம்

3. பால் மற்றும் வாழைப்பழம்

ஆயுர்வேதம் பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒரே சமயத்தில் சாப்பிட கூடாது என்று தெரிவிக்கிறது. இவ்வாறு சாப்பிட்டால் மனித உடல் பாதிப்பிற்குள்ளாகும்.

4. யோகார்ட் மற்றும் பழங்கள்

4. யோகார்ட் மற்றும் பழங்கள்

ஆயுர்வேத நூல்களின் படி யோகார்ட் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை ஒன்றாக உண்ணும் போது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் அமிலங்கள் உருவாகின்றன.

5. பால் மற்றும் இறைச்சி

5. பால் மற்றும் இறைச்சி

பால் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாத உணவுகள். பழங்காலம் முதலே பால் மற்றும் இறைச்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

6. பால் மற்றும் எலுமிச்சை

6. பால் மற்றும் எலுமிச்சை

பாலில் எழுமிச்சையை ஊற்றினால் பால் புளித்து போய்விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். இதே மாற்றம் தான் வயிற்றின் உள்ளும் நடைபெறுகிறது. பொதுவாக நமது உணவை செரிக்க சுரக்கப்படும் திரவம் மிக அதிக புளிப்பு தன்மை வாய்ந்தது. அதனுடன் இந்த புளிப்பும் சேரும் போது செரிமான மண்டலம் பாதிப்படைகிறது.

7. பால் மற்றும் மாத்திரைகள்

7. பால் மற்றும் மாத்திரைகள்

சில மாத்திரைகள் உணவில் உள்ள கால்சியம், இரும்பு சத்து போன்றவற்றை உறிஞ்சக்கூடியவை. எனவே மாத்திரை சாப்பிட்ட உடன் பால் குடிக்க கூடாது.

8. கோலா மற்றும் புதினா

8. கோலா மற்றும் புதினா

கோலா மற்றும் புதினா இரண்டும் சேர்ந்தால் சயனைடாக மாறிவிடும் என்பது நம்பிக்கை. எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

food combinations that you should never try

food combinations that you should never try