வேகமாக கொழுப்பை கரைக்கும் மஞ்சள் பால் பற்றித் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலானோரின் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது உடல் எடை தான். உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஒபீசிட்டி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது. கூடவே உடல் உழைப்பு மிகவும் அவசியம். அத்துடன் சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

Fastest fat burning Drink

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலிருந்தும் நம் உடலில் கலோரிகள் சேர்கின்றன. சரியாக எரிக்கப்படாத கலோரிகள் நம் உடலில் கொழுப்பாக மாறிடும். இப்படி அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பினால் தான் நமக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் பால் :

மஞ்சள் பால் :

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார். இதனை தினமும் ஒரு நேரம் மட்டுமே குடிக்க வேண்டும்.

மஞ்சள் சேர்த்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. முன்னதாகவே பாலை சூடாக்கி வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்க்கவேண்டும்.

தொப்பை :

தொப்பை :

மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ்கள் வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பினை கரைக்க கூடியது.இதனால் தொப்பை ஏற்படுவது தவிர்க்கப்படும் .

வெள்ளை அடிபோஸ் என்ற திசுவில் தான் அதிகப்படியான கொழுப்பு படிகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற தாது இந்த வெள்ளை அடிபோஸில் தங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

அதோடு உடலில் மற்ற பாகங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பினையும் கரைக்கச் செய்கிறது.

மெட்டபாலிக் சிண்ட்ரோம் :

மெட்டபாலிக் சிண்ட்ரோம் :

அதிக கொழுப்பு பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாருக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாக சேர்வதால் தன இது ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது தவிர வேறு வழியில்லை. மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து இதற்கு நல்ல தீர்வாக அமைந்திடும்.

மஞ்சளில் இருக்கும் சத்துக்கள் கொழுப்பை கரைத்து உடலில் triglyceride அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

டயட் :

டயட் :

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் டயட் முக்கிய இடம் வகிக்கிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

மஞ்சளை உங்கள் உணவுகளில் சேர்ப்பதால் அது நம் உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவினை சேர்க்க விடாமல் செய்யும். இதனால் நாம் அதிக கொழுப்பு உணவினை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடிகிறது.

எனர்ஜி :

எனர்ஜி :

நாம் சாப்பிடும் சர்க்கரைப் பொருள் எனர்ஜியாக மாற்றி அதனை செலவழித்து விட வேண்டும். அப்படியில்லை எனில் அவை கொழுப்பாக மாறிடும்.

தெர்மோஜெனிஸ் (thermogenesis) நம் உடலில் அதிகரிப்பதன் மூலமாக நம்முடைய உடல் எடையை எளிதாக குறைக்க உதவிடும்.

இது இருப்பதால் உடலின் மெட்டபாலிக் ரேட் அதிகரித்து கலோரிகள் விரைந்து எனர்ஜியாக மாற்றப்படுகின்றன.

பாக்டீரியா :

பாக்டீரியா :

மஞ்சள் பால் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் தாக்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும்.

குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை போக்க மஞ்சள் பால் குடிக்கலாம்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ் செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

அதோடு மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து வந்தால் அவை கீமோதெரபியின் பக்க விளைவுகளை குறைக்கவும் செய்திடும்.

வயிற்றுக் கோளாறு :

வயிற்றுக் கோளாறு :

மஞ்சள் பால் வயிறு தொடர்பான கோளாறுகளை போக்குவதில் முதன்மையானது. குறிப்பாக அல்சர். உணவு ஒவ்வாமை, உணவு செரிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க மஞ்சள் பால் உதவுகிறது.

 காய்ச்சல் :

காய்ச்சல் :

காய்ச்சல், தலைவலி மற்றும் மூக்கடைப்புக்கு மஞ்சள் பால் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதோடு தொண்டை வறட்சிக்கு மஞ்சள் பால் உடனடி நிவாரணம் வழங்கிடும்.

நீண்ட நாட்களாக நெஞ்சில் சளிக்கட்டியிருக்கும் அதனை நீக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது.

எலும்புக்கு :

எலும்புக்கு :

ஆர்த்தரைட்டீஸால் கை கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்ப்பட்டிருந்தால் கூடுதலாக வலியிருந்தால் தொடர்ந்து மஞ்சள் பால் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு அவை எலும்புக்கும் தசைக்கும் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்துகிறது.

இதனால் கை கால்களில் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பால் குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

ரத்தம் :

ரத்தம் :

மஞ்சள் பால் மிகச்சிறந்த ரத்த சுத்திகரிபபன் ஆகும். பழங்காலத்திலிருந்து இம்முறை பின்பற்றப்படுகிறது. அதோடு உடலில் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

 செரிமானம் :

செரிமானம் :

உடல் எடைக்கான அடிப்படை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. சரியாக செரிக்காத உணவுகளால் அதிலிருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் மற்றும் கலோரிகள் கிடைக்காமல் அப்படியே இருப்பதால் எந்த பயனும் இல்லை.

சில நேரங்களில் தொடர்ந்து துரித உணவுகளையும், மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பண்டங்களையும் எடுப்பதால் கொழுப்பு அதிகமாக சேர்ந்திடும்.

அதனை கரைக்கவும், உணவு விரைவாக செரிக்கவும் மஞ்சள் பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு :

பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கு மஞ்சள் பால் அவசியம் கொடுக்க வேண்டும், மஞ்சள் பால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியினை போக்க உதவுகிறது. அதே சமயம் கர்ப்பமான பெண்கள், எளிதாக டெலிவரி ஆவதற்கும் மஞ்சள் பால் குடித்தால் நல்ல பலன் உண்டு.

தூக்கம் :

தூக்கம் :

சந்தோசமான வாழ்க்கைக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. சரியாக தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் தொடங்கி உடல் எடைப் பிரச்சனை வரை ஏற்படுகிறது. மஞ்சள் பால் நன்றாக தூக்கம் வரச் செய்திடும்.

காரணம், அதிலிருக்கும் அமினோ அமிலம் , ட்ரைடோபான்(tryptophan) தான். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு கிளாஸ் பால் குடித்து வர நன்றாக தூக்கம் வரும்.

சருமத்திற்கு :

சருமத்திற்கு :

சருமத்தில் ஏதேனும் அலர்ஜியோ அல்லது அரிப்பு ஏற்ப்பட்டிருந்தால் மஞ்சள் பால் அதனையும் தீர்த்து வைக்கிறது.

மஞ்சள் பால் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான காட்டன் துணியெடுத்து அதில் முக்கி அலர்ஜி ஆன இடத்தில் துடைத்தெடுங்கள். அதோடு இவை முகத்தில் தோன்றும் கரும்புகள்ளிகள், பருக்களையும் போக்க உதவுகிறது.

அல்சைமர் :

அல்சைமர் :

வயாதவனவர்களை அதிகம் தாக்கக்கூடிய அல்சைமர் நோயிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மஞ்சள் பால் அருமருந்தாகும். தினமும் மஞ்சள் கலந்த பாலை குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

அதோடு கல்லீரல் துரிதமாக வேலைசெய்ய மஞ்சள் பால் பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

சில நேரங்களில் நம்மை தாக்கும் வைரஸ்கள் முதலில் தாக்குவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியாகத்தான் இருக்கிறது. மஞ்சள் பால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வைரஸ் பாதிப்பிலிருந்து முன்னரே தப்பிக்கலாம்.

தலைவலி :

தலைவலி :

நாட்பட்ட தலை வலிக்கு கூட மஞ்சள் பால் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மஞ்ள் பாலில் இருக்கும் சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் தலைவலி குறைகிறது.

மஞ்சள் பால் தொடர்ந்து குடிப்பதினால் சைனஸ் பிரச்சனையையும் தவிர்க்க முடிகிறது.

இனப்பெருக்கம் :

இனப்பெருக்கம் :

மஞ்சள் பாலில் இருக்கும் ஃபைட்டோஸ்ட்ரஜன் (phytoestrogen) பெண்களின் மலட்டுத் தன்மையை போக்க பெரிதும் உதவுகிறது.

குறிப்பாக ஹார்மோன் மாற்றங்களினால் குழந்தை பிறப்பு தள்ளிப்போகும் பெண்களுக்கு மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fastest fat burning Drink

Fastest fat burning Drink
Story first published: Tuesday, October 24, 2017, 15:45 [IST]
Subscribe Newsletter