மனதை நெகிழ வைக்கும் அற்புத தருணங்களை க்ளிக்கிய புகைப்படங்கள்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நீங்கள் பேசும் படங்களை பார்த்ததுண்டா? ஆம் வாழ்க்கையை உறைய வைக்கும் சில தருணங்களில் எடுக்கப்படும் படங்கள் நம்மையே மறக்கடித்து நம்மை உணர்ச்சி பூர்வமாக பேச வைத்து விடும்.

உங்க வீட்டுல இந்த ஃபோட்டோ இருந்தா உடனே தூக்கி போடுங்க...

அப்படிப்பட்ட சில உணர்ச்சி பூர்வமான படங்களின் தொகுப்பு தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படங்கள் உங்கள் மனதையும் உணர்வையும் மெய்மறக்க வைத்து விடும் என்றால் நம்புவீர்களா ஆனால் அது தான் உண்மை.

என்னங்க உங்கள் உணர்வுப் பூர்வமான பயணத்திற்கு தயாரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு அம்மாவான முதல் தருணம் :

ஒரு அம்மாவான முதல் தருணம் :

வாழ்க்கை என்பது அற்புதங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த ஒரு பயணம். இதில் ஒரு பெண்ணுக்கு அவள் தாயான முதல் தருணம் தான் வாழ்வில் என்றுமே கிடைக்காத எல்லையில்லாத இன்பத்தை அள்ளிக் கொடுப்பது.

அவள் பிரசவ மரண வலியும் கூட தனது பிஞ்சு குழந்தையின் முதல் அழுகுறலோடு முதன் முதலாக தன் மார்போடு சேர்த்து அவள் அரவணைக்கும் அந்த தருணமே காணாமல் செய்து விடும். இந்த உலகத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத இந்த படம் அன்பின் உச்சம் எனலாம்.

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பாசம்

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பாசம்

இந்த படம் பாசம் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்பதை உடைத்த ஒரு அழகான தருணம். வீடு இல்லாமல் கஷ்டப்படும் ஒரு மனிதனுடன் ஒரு நண்பனைப் போல் ஒட்டி உறவாடும் ஒரு நாய் , தன்னுடைய அன்பையும் பாசத்தையும் அவரது அரவணைப்பில் வெளிப்படுத்தும் தருணம்.

அந்த நாயின் கண்களில் மிளிரும் பாசம் நம்மையும் உணர்ச்சியின் விளிம்பில் நிற்க வைக்கும் ஒரு அன்பின் அடையாளம்.

இறப்பு கூட காதலை தனிமைப்படுத்த முடியாது

இறப்பு கூட காதலை தனிமைப்படுத்த முடியாது

இந்த உலகத்தில் இறப்பு கூட தனிமை படுத்த முடியாத ஒரு விஷயம் காதல். இந்த படத்தில் அந்த பெண் தனது அப்பா அம்மா வின் உண்மையான அன்பையும் பாசத்தையும் உணர்ந்து அவர்களது கல்லறையில் விழுந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இறப்பிற்கு பின்னும் இவர்களது காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

உங்கள் வெற்றியை ஒரு போதும் தடுக்க முடியாது

உங்கள் வெற்றியை ஒரு போதும் தடுக்க முடியாது

ஒரு காரியத்தில் கிடைக்கும் வெற்றித் தருணம் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் பயணமாகும்.

இங்கே ஒருவர் தன் உடல் உறுப்பு குறைப்பாட்டில் கூட தன் வெற்றியை நோக்கிச் சொல்லும் தன்னம்பிக்கை பயணத்தின் காட்சி.

இந்த படம் வெற்றி என்பது உடல் இல்லாத, மனமும் முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையின் உருவமே என்பதையே பறைசாற்றுகிறது.

மனதை வலிக்கும் அழுகுரல்

மனதை வலிக்கும் அழுகுரல்

இந்த படம் கண்டிப்பாக உங்கள் உணர்வு பூர்வமான அழுகையை பெற்றிருக்கும். நாட்டிற்காக பாடுபட்ட இராணுவ வீரர் போரின் போது தனது மனைவி இறந்த வலியால் கல்லறையில் துடிக்கும் அழுகுரல். இந்த படம் போரின் அழிவால் ஏற்பட்ட வலியை பறைசாற்றுகின்றன.

குழந்தையின் நடையில் ஒரு சண்டை

குழந்தையின் நடையில் ஒரு சண்டை

இந்த படம் ஒரு அழகான தருணத்தின் நினைவாகும். இதில் ஒரு அழகான குழந்தை பலூன்களை தன்னுடன் கட்டிக் கொண்டு காற்றுடனும் பலூனுடனும் சண்டை போட்டுக் கொண்டே தனது தத்தி ததும்பும் நடையுடன் ஒரு போஸ் கொடுக்கும் காட்சி. இந்த படம் உங்களுக்கு ஒரு அழகான புன்னகையையும் பரிசளித்திருக்கும்

உண்மையான அன்புக்கு ஆயுள் கிடையாது

உண்மையான அன்புக்கு ஆயுள் கிடையாது

மகிழ்ச்சியான தருணமும் அன்பான வார்த்தைகளையும் போல் இந்த உலகத்தின் அனைத்து நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்து கிடையாது.

இந்த படத்தில் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் இந்த வயதான காதல் ஜோடிகள் தங்களது சந்தோஷத்தையும் அன்பையும் பரிமாறி நோயுடன் போரிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த படம் கண்டிப்பாக உங்கள் எதிர்கால வாழ்க்கையை கனவு காண வைத்திருக்கும்.

ஊக்கம் அளிக்க ஊனம் ஒரு பொருட்டல்ல

ஊக்கம் அளிக்க ஊனம் ஒரு பொருட்டல்ல

இந்த படத்தில் உள்ள இளைஞன் தன் ஒரு கால்களை இழந்த நிலையிலும் தன்னுடைய சிரமங்களை பொருட்படுத்தாமல் தன்னைப் போல் உள்ள ஒருவருக்கு ஊக்கமளித்து உதவுவதற்கு கைதூக்கி விடுகிறார்.

இது ஒரு மனநேயத்தின் சான்று. உதவி செய்யவா வேண்டாமா என்று நாம் யோசிக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் இறக்க வைத்து விட்டது. இந்த படம் கண்டிப்பாக உங்கள் மனதில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை ஊக்கப்படுத்தி இருக்கும்.

நன்றியை மறக்காத அன்பு

நன்றியை மறக்காத அன்பு

இந்த படம் ஒரு நாய் தன் எஜமான் இறந்த பிறகும் கூட அவர் செய்த நன்றியையும் பாசத்தையும் மறக்காமல் வருடங்கள் கடந்தும் ஒவ்வொரு நாளும் அவரது கல்லறையில் அன்புடன் நேரத்தை கழிக்கும் தருணம் .

நாய் கண்டிப்பாக நன்றியுள்ளது என்பதை இப்படம் காட்டுகிறது. உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் நேரமும் காலமும் கிடையாது என்பதையும் மற்றவர்கள் செய்த நன்றி நம் மனதில் பதிய வேண்டும் என்பதையும் இப்படம் நம்மிடம் அழகாக பேசுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pictures That Will Surely Make You Feel Emotional!

Pictures That Will Surely Make You Feel Emotional!
Story first published: Monday, July 24, 2017, 18:00 [IST]